Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs 8, 9 June 2020

TNPSC Current Affairs 8, 9 June 2020

தமிழ்நாடு

  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், பழமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகள் 8-6-2020 அன்றூ கண்டெடுக்கப்பட்டன.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் மனித எலும்பு  8-6-2020 அன்று கண்டெடுக்கப்பட்டது.
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள அவருக்கு, மின் வாரியத்தின் தலைவா் பதவி முழுக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • ஐ.சி.சி.எஸ் சுஜய் ( Indian Coast Guard Ship ‘Sujay’ ) என்ற ரோந்துக் கப்பல், கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படை சென்னை மண்டலத்தில் 8-6-2020 அன்று இணைக்கப்பட்டது. இந்த ரோந்துக் கப்பல் , இதற்கு முன்னர் ஒடிஸா மாநிலம், பாராதீப் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்தது.
  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) 2019-2020 ஆம் ஆண்டிற்கான  மாநிலங்களுக்கான உணவு பாதுகாப்பு குறியீடு (State Food Safety Index (SFSI))  வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில்
    • பெரிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும்,
    • சிறிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே கோவா, மணிப்பூர் மற்றும் மேகாலயா  
    • யூனியன் பிரதேசங்களில் முதல் மூன்று இடங்களை முறையே சண்டிகர், டெல்கி மற்றும் அந்தமான் தீவுகள் ஆகியவையும் பெற்றுள்ளன.
  • இந்தியாவின் முதல் ஆன்லைன் கழிவு மாற்று திட்டம் (online waste exchange programme) ஆந்திர மாநில அரசினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விஷத்தன்மை உடைய மற்றும் மட்கா கழிவுகளை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்வது அல்லது அழிப்பதற்கான இந்தத் திட்டத்தை ஆந்திர பிரதேச சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் (Andhra Pradesh Environment Management Corporation or APEMC )செயல்படுத்துகிறது.
  • ”குரோ-பாட்” (Coro-bot) என்ற பெயரில் உலகின் முதல் இணையதளம் வழியாக கட்டுப்படுத்தப்படும் ரோபோவை மகாராஷ்டிர மாநிலம் தானே வைச் சேர்ந்த பொறியாளர் பிரதிக் திரோட்கர் (Pratik Tirodkar) என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்குவதுடன் , அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உத்தர்காண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக காயிர்செயின் (Gairsain) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு ’ஃபராரிசென்’ (Bhararisen) என்ற பெயரும் உண்டு. ஏற்கனவே அம்மாநிலத்திற்கு தலைநகராயிருந்த டேராடூன் (Dehradun) அம்மாநிலத்தின் குளிர்கால தலைநகராக இருக்கும்.
  • சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு ( Environment Performance Index ) 2020ல் இந்தியா 168 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கிலாந்தின் யேல் பல்கலைக்கழகத்தின் (Yale University) மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. முதல் மூன்று இடங்களை முறையே, டென்மார்க், லக்‌ஷம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பருவநிலை மாற்ற பிரிவில் இந்தியா உலகளவில் 106 ஆவது இடத்தையும் தெற்காசிய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
    • கூ. தக. 2018 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா 177 வது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • BS-6 மாசு நெறிமுறைகளுடன் வெளிவரும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்துவமான வண்ணங்கள் கொண்ட இலக்கத்தகடு (நம்பர் ப்ளேட்) பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த எரிபொருள் வகையினதும் BS -6 மாசுக் கட்டுபாட்டு நெறிமுறை வாகனங்களுக்கான பதிவு விவரங்களை எடுத்துச் செல்லும் தற்போதைய ஸ்டிக்கரின் மேல் 1 செ.மீ அகலமுள்ள பச்சை நிறத்துண்டு ஒன்றைக் கட்டாயமாக்குகிறது, அதாவது பெட்ரோல் அல்லது இயற்கை எரிவாயு (CNG)வில் இயங்கும் வாகனங்களுக்கு வெளிர் நீல வண்ண ஸ்டிக்கர் மற்றும் டீசல் வாகனம் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இப்போது BS – 6 வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்கள் மீது 1 செ.மீ மேலே பச்சை நிறத் துண்டு இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
    • கூ.தக. : BS-6 மாசு கட்டுப்பாடுத் தரநிலைகள் ஏப்ரல் 1, 2020 முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

  • ’மிஷன் சாகர்’ (Mission Sagar) எனும் திட்டத்தின் கீழ் கோவிட்-19 பாதிக்கப்பட்ட இந்தியாவின் நட்பு தீவு நாடுகளான மாலத்தீவு, மெளரிசியஸ் , மடகாஸ்கர், காமரோஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மே 2020 தொடங்கியது.
    • கூ.தக : SAGAR - Security and Growth for All in the Region
  • இந்தியா மற்றும் பூட்டான் இடையிலான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை 3-6-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பரஸ்பர நலன், அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றுக்கு பொருத்தமான வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பராமரித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தாகும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதுடன், பத்தாண்டு காலத்துக்கு செயல்பாட்டில் இருக்கும்.

முக்கிய தினங்கள்

  • உலக மூளை இரத்தக்கட்டு  நோய் தினம் (World Brain Tumor Day) 2020 –  ஜீன் 8
  • உலக பெருங்கடல்கள் தினம் (World Oceans Day) - ஜீன் 8 | மையக்கருத்து 2020 - நீடித்த பெருங்கடல்களுக்கான கண்டுபிடிப்பு (Innovation for a Sustainable Ocean)


Share:

TNPSC Current Affairs 6,7 June 2020

TNPSC Current Affairs 6,7 June 2020

தமிழ்நாடு

  • ”ஒளிரும் தமிழ்நாடு” மாநாடு :  தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) சாா்பில் நடைபெறும்  ஒளிரும் தமிழ்நாடு  எனும் காணொலி மாநாட்டை முதல்வா் பழனிசாமி  06-06-2020  அன்று தொடக்கி வைத்தார்.
  • பிரதமர் மோடி அவர்களால் மான்கிபாத் வானொலி உரையில் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நித்ரா 'ஐக்கிய நாடுகளவை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சங்கத்தின் (United Nations Association for Development and Peace (UNADAP) )ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஊக்கத் தொகையாக ரூ.1 லட்சம் சிறுமி நேத்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
    • நேத்ராவின்  உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஜம்மு-காஷ்மீரில் எதிரிகளின் தாக்குதலால் வீரமரணமடைந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
  • கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 125-வது பிறந்தநாள்  5-6-2020 அன்று அனுசரிக்கப்பட்டது.  கூ.தக.  :இவர் 5 ஜீன் 1896 ல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.    பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
    • 1947 இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் இசுமாயில். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத்தில் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது. பின்னர் 1996ல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது. (நன்றி : விக்கிபீடியா)
  • சென்னையில் கொரானா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார். அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆ‌ர். விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், உதயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடருங்கள்https://www.facebook.com/groups/tamilcurrentaffairs/

இந்தியா

  • ’நன்றி அம்மா’ (”Thank Mom") என்ற பெயரில் மரம் நடும் இயக்கத்தை மத்திய பிரதேச அரசு 5-6-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையை கணக்கிட, 'இம்யூனோகுளோபுலின் ஜி எலிசா (Ig-ELISA) 'பரிசோதனையை, இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.நோயைக் கண்டறிய தற்போது, பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது. இது, ஒருவர் உடலில், தொற்று ஏற்பட்ட ஏழு - எட்டு நாட்களில் தான், 'பாசிட்டிவ்' எனக் காட்டும்.இதை விட, உடலில், 'ஆன்டிபாடி' அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிந்தால், நோய்க்கான வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம். அதுமட்டும் இன்றி, யாருக்கெல்லாம் அறிகுறி இன்றி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அறிகுறிகள் இல்லாமலேயே குணமடைந்தனர் என்பதையும் கண்டறிந்து விடலாம். இதற்காக தற்போது, 'இம்யூனோகுளோபுலின் ஜி எலிசா' பரிசோதனையை, மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • "நகர் வன்” திட்டம் (‘Nagar Van’ scheme) என்ற பெயரில்  இந்தியாவில் 200 நகர்புற காடுகளை (Urban forests) உருவாக்குவதற்கான திட்டத்தை  மத்திய அரசு, உலக சுற்றுசூழல் தினம் 2020 கொண்டாட்டத்தின் போது அறிவித்துள்ளது.
  • தாய்மை அடையும் வயது குறித்து ஆராய 10 உறுப்பினர் கொண்ட சிறப்பு  குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா ஜேட்லி தலைமையில்  மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் தாய்மை அடையும் வயது, பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் மரணம் அடைவதை குறைப்பதற்கான வழிமுறைகள், ஊட்டச்சத்து அளவை அதிகரித்தல் ஆகியவற்றை குறித்து பெண்கள் நலனை மேம்படுத்த  வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும்.
  • "மேரா விதான்" (MeraVetan) என்ற பெயரில் அரசு ஊழியர்கள் தங்களது சம்பளம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான மொபைல் செயலி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச ஆளுநர் கிரீஸ் மர்மு (Girish Chandra Murmu) வெளியிட்டுள்ளார்.
  • விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்வதில் உள்ள தடைகளை களையும் வகையில், வேளாண் துறையில் சீா்திருத்தங்களை செயல்படுத்த வழிவகுக்கும் இரு அவசர சட்டங்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 5-6-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
    • வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், 2020 , விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம், 2020 ; ஆகிய அந்த இரு அவசர சட்டங்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
    • வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், 2020 மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் தடைகளின்றி விற்பனை செய்ய வழிவகை ஏற்படும்.
    • மொத்த மற்றும் சில்லறை வணிகா்கள், ஏற்றுமதியாளா்கள் உள்ளிட்டோருடன் விவசாயிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம், 2020 கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் சுரண்டப்படுவது தடுக்கப்படும். இந்த சீா்திருத்தத்தின்படி, வேளாண் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • கேரள மாநிலம் மலப்புரம் அருகே கர்ப்பிணி யானை ஒன்று அன்னாசி பழத்தினுள் வெடிமருந்து வைத்து கொல்லப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • புகழ்பெற்ற ‘பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலை அகதமியின்’ (British Academy of Film and Television Arts(BAFTA)) தலைமைப் பொறுப்பிற்கு இந்திய வம்சாவளி ’கிரிஷ்னேண்டு மஜூம்தார்’ (Krishnendu Majumdar) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை வகிக்கும் முதல் இந்தியர் இவராவர்.

பொருளாதாரம்

  • கடன் செலுத்த தவறியவர்களுக்கு சலுகையாக, திவால் சட்டத்தை திருத்தி மத்திய அரசு அவசர சட்டம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா தொடர்பாக ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25 அல்லது அதற்கு பிறகு ஓராண்டுவரை கடனை திருப்பி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது.

நியமனங்கள்

  • உலக வர்த்தக நிறுவனத்திற்கான இந்தியாவிற்கான நிரந்தர திட்டத்தின் தூதுவராக(Ambassador to the Permanent Mission for India (PMI) at the WTO in Geneva) ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர நவ்நீத் ( Brajendra Navnit) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக வங்கியின் செயல் இயக்குநருக்கான மூத்த ஆலோசகராக (Senior Advisor to the Executive Director of the World Bank) பிரதமர் மோடி அவர்களின் தனிச் செயலராக (Private Secretary) 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய ராஜீவ் டோப்னோ (Rajeev Topno) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) - ஜீன் 7 | மையக்கருத்து 2020 - உணவு பாதுகாப்பு, அனைவரின் கடமை (Food Safety, Everyone’s Business)
    • கூ.தக. : ஐக்கிய நாடுகளவையின் உலக உணவு திட்டம் (World Food Programme) 1961 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ளது.
  • உலக பூச்சிகள் தினம் (World Pest Day) - ஜீன் 6
  • ஐ.நா. ரஷிய மொழி தினம் - ஜீன் 6
  • சட்டத்திற்கு புறம்பான மீன்பிடித்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing ) - ஜீன் 5
  • உலக சுற்றுசூழல் தினம் ( World Environment Day) ஜூன் 5 | மையக்கருத்து 2020- இயற்கைக்கான நேரம் ( 'Time for Nature')

அறிவியல் & தொழில்நுட்பம்

  • "சோடார்"( ‘Sodar’) என்ற பெயரில் சமூக இடைவெளியை (Social distancing) பேணுவதற்கான மொபைல் செயலியை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • "சுமேரு பாக்ஸ்" (SUMERU-PACS) என்ற பெயரில் தனிநபர் பாதுகாப்பு உபகரண உடை ( Personal Protective Equipment (PPE)) அணிவோர் வியர்வை பிரச்சனை இன்றி இலகுவாக உணர்வதற்கான கருவியை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ( Defence Research Development Organisation (DRDO)) கண்டுபிடித்துள்ளது.

விளையாட்டுகள்

  • ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ( Asian Football Confederation(AFC) ) ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டி 2022  (AFC Women’s Asian Cup 2022)   இந்தியாவில் நடக்கவுள்ளது.  கடைசியாக 1980 ஆம் ஆண்டில் இந்தியாவில் (கோழிக்கோட்டில்) இந்த போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Share:

TNPSC Current Affairs 4,5 June 2020

TNPSC Current Affairs 4,5 June 2020

தமிழ்நாடு

  • தமிழக தலைமைச் செயலர் திரு K சண்முகம் அவர்களுக்கு  மூன்று மாதம் (1 ஆகஸ்டு 2020 முதல் 31 அக்டோபர் 2020) பதவி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் ‘எஸ்.ஆர்.எம்.’ கல்வி நிறுவனம் முதல் இடம் : ‘நேச்சர் இன்டெக்ஸ்’ என்ற அமைப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தேசிய அளவில் 21-வது இடத்தையும், இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்து இருக்கிறது. இந்த நிறுவனம் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், அவை சமர்ப்பிக்கும் ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அதன் தரத்தை நிர்ணயித்து, பட்டியலிடுகிறது.
  • அகஸ்தியன், கடுகு என்கிற புனைப்பெயா்களில் எழுதிய பிரபல நகைச்சுவை எழுத்தாளா் பி.எஸ்.ரங்கநாதன் (88) 2-6-2020 அன்று அமெரிக்காவில் உள்ள நியூஜொ்சியில் காலமானாா்.இவரது சொந்த ஊா் செங்கல்பட்டு. கணினி மீது ஆா்வம் கொண்ட இவா், எழுத்துருக்களை உருவாக்கி அதற்கு கதைகளின் கதாபாத்திரப் பெயா்களையே சூட்டினாா்.
  • முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 25% படுக்கைகளை காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ15000 மட்டுமே வசூலிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இந்தியா

  • ’இணையதள சேவைக்கான அணுகலை அடிப்படை மனித  உரிமையாக மாற்றிய இந்தியாவின் முதல் மாநிலம்’  எனும் பெருமையை கேரளா பெற்றுள்ளது.  அம்மாநிலத்தில்  பாரத் மின்னணு நிறுவனத்தின் உதவியுடன் அமலாக்கப்படும் ‘கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வர்க்’ (Kerala Fiber Optic Network(K-FON) ) திட்டத்தின் மூலம் டிசம்பர் 2020 க்குள் அனைத்து குடிமக்களுக்கும் இணைய சேவை உறுதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 'விமல் ஜீல்கா குழு’ (Bimal Julka Committee) : திரைப்பட கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்காக விமல் ஜீல்கா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை 2-6-2020 அன்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
  • பெண்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் இறுதி தவணையாக ரூ.500 செலுத்தும் பணிகள் 5-6-2020 அன்று முதல் தொடங்கவுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிடும் விதமாக, பெண்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் மூன்று மாதங்களுக்கு தலா ரூ.500 செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாா்ச் 26-ஆம் தேதியன்று அறிவித்தன் படி இந்த தொகை வழங்கப்படுகிறது.
  • கரோனா பொது முடக்க காலத்தில் விசா விதிமுறைகளை மீறி இந்தியாவுக்குள் தங்கியிருந்த வெளிநாடுகளைச் சோ்ந்த 2,550 தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் கருப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டவா்களாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ரே சமயத்தில் இத்தனை பேரை இந்தியா கருப்புப் பட்டியலில் வைப்பது இதுவே முதல்முறையாகும். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ரஷியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உள்பட 40 நாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
  • ”துலிப்” (TULIP - The Urban Learning Internship Programme) என்ற பெயரில் புதிதாக தொழிற்கல்வி  பயின்ற பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு  ‘ஸ்மார்ட் சிட்டி’  திட்டங்களில்  ‘இண்டர்ன்ஷிப்’ எனும் உள்ளிருப்புப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்,  அனைத்திந்திய தொழிற்கல்வி கவுண்சில் ( All India Council for Technical Education (AICTE)) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.
  • ’ஸ்வதேஷ்’ (Skilled Workers Arrival Database for Employment Support(SWADES)) என்ற பெயரில், வேலை வாய்ப்பு உதவிக்கான திறன் பணியாளர்கள் தரவு தளம் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் (Vande Bharat Mission)  கீழ் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த திட்டமானது    மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம், மத்திய உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அமல்படுத்தப்படுகிறது. 
    • கூ.தக. : வந்தே பாரத் திட்டம் என்பது, கொரோனாவையொட்டி, சர்வதேச ஊரடங்கினால், வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை விமானங்களின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்துவருவதற்கான திட்டமாகும்.

வெளிநாட்டு உறவுகள்

  • உலக தடுப்பூசி கூடுகையில் ( மெய்நிகர்) (Global Vaccine Summit ) பிரதமர் மோடி அவர்கள் 4-6-2020 அன்று கலந்து கொண்டார்கள். இங்கிலாந்து நாட்டினால் கூட்டப்பட்ட இந்த கூடுகையில், இந்தியாவின் சார்பாக ‘உலக தடுப்பூசி கூட்டமைப்பு அமைப்பிற்கு’ (GAVI - Global Alliance for Vaccines and Immunization) 15 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமாா் ரூ.113.13 கோடி)  வழங்குவதாக இந்தியாவின் சார்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : ’GAVI’ எனப்படும் உலக தடுப்பூசி கூட்டமைப்பு  2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ளது.
  • இந்தியா, ஆஸ்திரேலியாவிலுள்ள ராணுவப் படைத்தளங்களை பரஸ்பரம் இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் 4-6-2020 அன்று கையெழுத்தானது. இதுபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூா் ஆகிய நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது. இது, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள உதவும் என பார்க்கப்படுகிறது.
    • இந்திய - ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு முதன்முறையாக மெய்நிகர் மாநாடாக 4-6-2020 அன்று நடைபெற்றது.இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து பொது சீர்திருத்தங்கள், பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பம் தொடர்பான இரு நாடுகளிடையே 7 ஒப்பந்தகள் கையெழுத்தாகின. 
  • இந்தியாவுக்கு நன்கொடையாக 100 வென்டிலேட்டர்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

விருதுகள்

  • இந்திய எழுத்தாளர் கிருத்திகா பாண்டே (Indian writer Kritika Pandey) ஆசியாவிற்கான காமன்வெல்த் சிறு கதை  பரிசை (Asia in 2020 Commonwealth short story prize) அவரது  “The Great Indian Tee and Snakes” என்ற சிறுகதைக்காக வென்றுள்ளார்.

நியமனங்கள்

  • இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவராக (Confederation of Indian Industry (CII)) கோட்டக் மகிந்திரா வங்கியின் நிா்வாக இயக்குநா் உதய் கோட்டக் 3-6-2020 அன்று  பொறுப்பேற்றாா்.
  • பின்லாந்துக்கான இந்திய தூதராக ரவீஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிரதமர் மோடி அவர்களின் தனிச் செயலராக (Private Secretary) 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய ராஜீவ் டோப்னோ (Rajeev Topno) உலக வங்கியின்  செயல் இயக்குநருக்கான மூத்த   ஆலோசகராக (Senior Advisor to the Executive Director of the World Bank)  நியமிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய தினங்கள்

  • உலக மிதிவண்டி தினம் (World Bicycle Day) - ஜீன் 3
  • சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம் (International Sex Workers Day) - ஜீன் 2

அறிவியல் & தொழில்நுட்பம்

  • சரிகம இந்தியா நிறுவனத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் சா்வதேச அளவிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஃபேஸ்புக் பயனாளா்கள் தாங்கள் இடும் பதிவுகளில் பல்வேறு தரப்பட்ட இசையையும் பாடல்களையும் இணைக்க முடியும். சரிகம செயலியில் 25 இந்திய மொழிகளைச் சோ்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமான பாடல்கள் உள்ளன. திரையிசைப் பாடல்கள் முதல் பக்திப் பாடல்கள் வரை பலதரப்பட்ட பாடல்கள் காணப்படுகின்றன.

Share:

TNPSC Current Affairs in Tamil for 2-3 June 2020

தமிழ்நாடு
  • இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன.
  • தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (47) நியமிக்கப்பட்டுள்ளார்
  • திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில்துறை சார்பில் ரூ.235 கோடி மதிப்பில் புதிதாக டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு 1-6-2020 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்தியா

  • ’கிஷான் கடனட்டை திட்டத்தின்’ (Kisan Credit Cards(KCC)) கீழ் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் (ஜூன் - ஜூலை 2020) நாடெங்கிலுமுள்ள பால் தயாரிப்பு தொழிலாளர் ஒன்றியங்கள் மற்றும் பால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைச் சேர்ந்த 1.5 கோடி பால் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு திட்டம் மத்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் (Atma Nirbhar Bharat) ஒரு பகுதியாக அமல்படுத்தப்படுகிறது.
  • கொரோனாவுக்கு சிகிச்சைக்கு ரெம்டெசிவர் ( Remdesivir) மருந்தினை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஜூன் 1 முதல் கொரோனா அவசர சிகிச்சையின் போது நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 5 டோசுகள் வரை இம்மருந்தினை வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
  • ”ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை” (One Nation One Card Scheme) திட்டத்தில் சிக்கிம் , ஒடிஷா மற்றும் மிஷோராம் மாநிலங்கள் 1 ஜீன் 2020 ல் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். இதன் மூலம் இத்திட்டத்தில், 1-6-2020 வரையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • ”பிரதான் மந்திரி ஸ்வாநிதி திட்டம்” (Pradhan Mantri SVANidhi - PM Street Vendors Atmanirbhar Nidhi) என்ற பெயரில் தெருவோர வியாபாரிகளுக்கான நலத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10,000 கடனுதவி நகர்புற மற்றும் ஊர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
  • "நிஷார்கா புயல்” (NISARGA Cyclonic Storm) அரபிக்கடலின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி 3-6-2020 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் வட பகுதி மற்றும் குஜராத் மாநிலத்தின் தென் பகுதிகளைக் கடக்கவுள்ளது.
    • கூ.தக. : நிஷார்கா புயலுக்கு பெயர் சூட்டிய நாடு - வங்காளதேசம்
  • பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளா் வாஜித் கான் 1-6-2020 அன்று கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தாா்.
வெளிநாட்டு உறவுகள் 
  • ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.ஜி-7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி பொருளாதாரம், வர்த்தகம், வியாபாரம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவர். இந்த மாநாட்டை இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் அடுத்தடுத்து நடத்தும்.அதன்படி இந்த ஆண்டுக்கான (2020) மாநாடு செப்டம்பர் மாதத்தில் (ஜீன் மாதத்தில் நடைபெறவிருந்தது) நடத்த முடிவு செய்வதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்
  • தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 23 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. StartupBlink நிறுவனம் வெளியிட்டுள்ள Ecosystem Rankings 2020 எனும் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
நியமனங்கள்
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (Micro, Small & Medium Enterprises(MSME)) அறிவிக்கப்பட்டிருந்த ரூ.3 இலட்சம் கோடி கடனுதவி திட்டத்தை அமல்படுத்துவதற்கான சிறப்பு குழுவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பிரதமர் மோடி 31-5-2020 அன்று அமைத்துள்ளார்.

புத்தகங்கள்
  • ‘One Year of Modi 2.0 – Towards A Self-Reliant India’ என்ற பெயரிலான பிரதமர் மோடி அவர்களின் இரண்டாம் ஆட்சி காலத்தின் முதலாண்டு சாதனைகளை உள்ளடக்கிய மின் - புத்தகத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விளையாட்டு 

  • ”கேலோ இந்தியா இ-பாத்ஷாலா” ( ‘Khelo India e-Pathshala‘) என்ற பெயரில் இந்தியாவில் முதல் தேசிய அளவிலான ஆன்லைன் விளையாட்டுக் கல்வி பயிற்சி திட்டத்தை இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India (SAI)) மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு ( National Sports Federations (NSF)) ஆகியவை இணைந்து 1 ஜீன் 2020 அன்று தொடங்கியுள்ளன.
Share:

Current Affairs in Tamil for TNPSC Exams - 01 June 2020

தமிழ்நாடு
  • பிரதமரின் பாராட்டைப் பெற்ற தமிழக சலூன் கடைக்காரர் சி.மோகன்  : தனது மகளின் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை   கொரோனா காலத்தில் பாதிப்படைந்த ஏழைகளுக்கு வழங்கிய மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் சி.மோகன் என்பவரின் சேவையை   பிரதமர் மோடி அவர்கள்   31-5-2020 அன்றைய தனது மான்கிபாத் வானொலி உரையில் பாராட்டியுள்ளார். 
  • தமிழக அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா
  •  ”எனது வாழ்க்கை எனது யோகா” (“My Life My Yoga”) என்ற பெயரில்  வீடியோ போட்டியை   பிரதமர் மோடி அவர்கள் 31-5-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார்.  இந்த போட்டியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சி கவுண்சில் (ICMR (Indian Council of Cultural Research) ஆகியவை இணைந்து நடத்துகின்றன. 

உலகம்
  • ஜூன் மாதம்  10 ஆம் தேதி  நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை டொனால்டு டிரம்ப் செப்டம்பர் 2020 மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா , இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க தாம் அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 
    • கூ.தக. : அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • ஜியார்ஜ் பிளையாட் (George Floyd) எனும் ஆப்பிரிக்க அமெரிக்க மனிதர்  அமெரிக்காவின் மின்னசோடா மகாணத்தில் போலிஸ் அதிகாரி ஒருவரால் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அந்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. 

நியமனங்கள்
  • இந்தியா உட்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் (India Infrastructure Finance Company Limited (IIFCL))  மேலாண் இயக்குநராக PR ஜெய்சங்கரை மத்திய நிதி அமைச்சகம் நியமித்துள்ளது. 
  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) முதன்மை செயல் அதிகாரியாக அருண் சிங்கால் (Arun Singhal) நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வமைப்பின் தலைவராக ரீட்டா டியோடியா(Rita teotia ) உள்ளார். 

புத்தகங்கள்
  • ‘நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர்’ ("Narendra Modi – Harbinger of Prosperity & Apostle of World Peace") என்ற பெயரிலான பிரதமர் மோடி பற்றிய புதிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அகில இந்திய பார் அசோசியேசன் தலைவர் ஆதிஷ் சி.அகர்வாலா, அமெரிக்க எழுத்தாளர் எலிசபெத் ஹோரன் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

விளையாட்டு 
  • இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை  கிரண்ஜீத் கவுர் (Kiranjeet Kaur)  ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக  நான்கு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். 

Share:

TNPSC Current Affairs 11-20 May 2020

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 11-20 மே 2020 

தமிழ்நாடு

  • மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 8,255 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
  • திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு வட்டத்தில்  உள்ள நல்லூர் கிராமப்பகுதியில்   ரூ.337 கோடியில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19-5-2020 அன்று அடிக்கல் நாட்டினார்.
  • தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, பெரம்பலூர் மாவட்ட அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்துடன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சோகாரி கோவார் வண்ணங்கள் (Sohrai Khovar painting ) மற்றும் தெலுங்கானாவின்  தெலியா ரூமால் ஆடைகள் (Telia Rumal cloth )  ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம்  வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • மன்னாா் வளைகுடாவில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை (60 எம்எல்டி) செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.இந்தத் திட்டமானது, ராமநாதபுரம் கடலாடி தாலுகாவில் உள்ள குதிரைமொழி கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.
  • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் சட்டமேலவை உறுப்பினருமான க.மீனாட்சிசுந்தரம்14-5-2020 அன்று காலமானார்.  இவர், வானம்பாடி நான், வாழ்த்தி மகிழ்கிறேன் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்னார்.
  • ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவில் அர்ச்சர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த 8.39 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ரூ.1,000 வழங்க தமிழக அரசு 13-5-2020 அன்று நிதி ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் மீனவா் நல வாரியம், பட்டாசு தொழிலாளா், சிறு வணிகா்கள் நல வாரியம், பழங்குடியினா் நலவாரியம், பூஜாரிகள் நல வாரியம், திரைப்படத் தொழிலாளா் நல வாரியம் உள்ளிட்ட 14 வகையான நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்களைச் சோ்ந்தோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது போன்றே, இந்தத் தொழிலாளா் நல வாரியங்களைச் சோ்ந்தோருக்கும் நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

  • ”சரண் படுகா” (Charan Paduka) என்ற பெயரில் தனது மாநிலத்தினூடாக நடந்து செல்லும்  புலம் பெயர் தொழிலாலர்களுக்கு  இலவசமாக  காலணி வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
  • விசாகப்பட்டிணம் எல்.ஜி.பாலிமர்  நிறுவனத்தின் , ஸ்டைரின் (styrene)  விஷவாயு  கசிவு தொடர்பாக விசாரிக்க ‘நீரப் குமார் பிரசாத்’ (Neerabh Kumar Prasad ) தலைமையில் 5 நபர் குழுவை ஆந்திரப்பிரதேச மாநில அரசு அமைத்துள்ளது.
  • இந்தியாவின் குழந்தைகள் இறப்பு வீதம் (infant mortality rate (IMR) )  2018 ஆம் ஆண்டில் 32 ஆக உள்ளது.  இதற்கு முந்தைய ஆண்டில் (2017) இந்த வீதம் 33 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  மேலும் , 2009 ஆம் ஆண்டில்  50 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு வீதம் 2018 ல் 32 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குள் இறந்தால் அது குழந்தை இறப்பு வீதம் புள்ளிவிபரத்தில் சேர்க்கப்படும். உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றன என்பதை குழந்தை இறப்பு வீதம் சுட்டுகின்றது.
  • இந்தியாவில் முதல் மாநிலமாக, முதல் தகவல் அறிக்கையை (First Information Report(FIR)) பொது மக்கள் இல்லங்களிலிருந்தே 100 என்ற எண்ணை அழைப்பதன்  மூலம் விண்ணப்பிப்பதற்கான ’ஆப்கே திவார் யோஜனா’  (Aapke Dwar Yojana‘(FIR at your doorstep) )  திட்டத்தை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • பிரதமர் வய வந்தனா திட்டத்தை (‘Pradhan MantriVayaVandanaYojana’ ) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை 20-5-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பிரதம மந்திரியின் மத்ஸய சம்ப்பட திட்டத்தை (Pradhan Mantri Matsya Sampada Yojana) – நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை  20-5-2020 அன்று  அனுமதி அளித்துள்ளது.
    • இந்தியாவில் மீன்வளத் தொழிலில் நீடித்த மற்றும் பொறுப்புடைமையான வளர்ச்சி மூலம் நீலப்புரட்சியை ஏற்படுத்துவதற்கான இந்தத் திட்டத்தில் இரண்டு முக்கியமான கூறுகள் உள்ளன: அவை மத்திய பிரிவுத் திட்டம் (Central Sector Scheme) மற்றும் மத்திய நிதி உதவித் திட்டம் (Centrally Sponsored Scheme) ஆகும்.  இந்தத் திட்டத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.20,050 கோடி ஆகும்.  இதில்
      • மத்திய அரசின் பங்கு ரூ. 9,407 கோடி
      • மாநில அரசின் பங்கு ரூ.4,880 கோடி மற்றும்
      • பயனாளிகளின் பங்கு ரூ.5,763 கோடி ஆகும்.
    • இந்தத் திட்டத்தின் செயலாக்க காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதாவது இந்தத் திட்டமானது 2020-2021 நிதியாண்டில் இருந்து 2024-2025 நிதியாண்டு வரை நடைமுறைப்படுத்தப்படும்.
பி.எம்.எம்.எஸ்.ஒய் திட்டத்துக்கு கீழ்வரும் முறையில் நிதி அளிப்பு இருக்கும்:
  • மத்திய பிரிவுத் திட்டம்
    • அ. செயல்திட்டம் / அலகு முழுமைக்குமான செலவை மத்திய அரசு ஏற்கும் (அதாவது 100% மத்திய அரசு நிதியுதவி)
    • ஆ. திட்டமானது பயனாளியை நேரடியாகச் சார்ந்து இருந்தால் அதாவது தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (National Fisheries Development Board - NFDB) போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் தனிநபர் / குழு சார்ந்த நடவடிக்கைகளுக்கு பொதுப்பிரிவில் அலகு / செயல்திட்ட செலவில் 40 சதவீதம் வரை மத்திய அரசு நிதியுதவி கிடைக்கும். எஸ்சி / எஸ்டி / மகளிர் பிரிவுக்கு 60 சதவீதம் வரை மத்திய அரசு நிதியுதவி கிடைக்கும்.
  • மத்திய நிதி உதவித் திட்டம்
    • சிஎஸ்எஸ் பிரிவின் கீழ் பயனாளியை நேரடியாகச் சார்ந்து இருக்காத துணைக்கூறுகள் / நடவடிக்கைகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நடைமுறைப்படுத்தும். செயல்திட்டம் / அலகின் மொத்த செலவும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் கீழ்க்கண்டவாறு பகிர்ந்து கொள்ளப்படும்:
    • அ. வடகிழக்கு, இமாலயப்பகுதி மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 10 சதவீதம்.
    • ஆ. ஏனைய மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம்.
    • இ. யூனியன் பிரதேசங்கள் (சட்டமன்றம் உள்ளவை மற்றும் சட்டமன்றம் இல்லாதவை): மத்திய அரசின் பங்கு 100 சதவீதம்.
  • பயனாளியைத் சார்ந்த திட்டங்களுக்கு அதாவது சிஎஸ்எஸ் கூறின் கீழ் தனிநபர் / குழு நடவடிக்கைகள் தொடர்பான துணைக்கூறுகள் / செயல்பாடுகள் மாநில / யூனியன் பிரதேசங்களால் நடைமுறைப்படுத்தப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி மொத்தமாகச் சேர்ந்து பொதுப்பிரிவில் செயல்திட்டம் / அலகின் செலவுத் தொகையில் 40 சதவீதம் என்ற அளவுடன் இருக்கும்.  எஸ்சி / எஸ்டி / பெண்கள் ஆகிய பிரிவுக்கு செயல்திட்டம் / அலகின் செலவுத் தொகையில் 60 சதவீதம் என்று இருக்கும்.  அரசு நிதி உதவி என்பது மத்திய அரசு மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு இடையில் கீழ்வரும் விகிதங்களில் பகிரப்படும்:
    • அ. வடகிழக்கு, இமாலயப்பகுதி மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 10 சதவீதம்.
    • ஆ. ஏனைய மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம்.
    • இ. யூனியன் பிரதேசங்கள் (சட்டமன்றம் உள்ளவை மற்றும் சட்டமன்றம் இல்லாதவை): மத்திய அரசின் பங்கு 100 சதவீதம் (யூனியன் பிரதேசத்தின் பங்கு ஏதும் இல்லை.
(ஆதாரம் : https://pib.nic.in/PressReleasePage.aspx?PRID=1625314)
  • ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் (Shramik Special Trains) மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
  • எல்லைப்புறக் கட்டமைப்பு தொடர்பாக லெப். ஜெனரல் டி.பி. ஷேக்கட்கர் (ஓய்வு) தலைமையிலான நிபுணர்கள் கமிட்டி (Shekatkar Committee) அளித்த மூன்று முக்கியப் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு அமல் படுத்தியுள்ளது. எல்லைப்புறப் பகுதிகளில் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சாலைகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துதல், தொடர்பான பரிந்துரைகளாக இவை உள்ளன.
    • எல்லைப்புறக் கட்டமைப்பு உருவாக்குதல் தொடர்பான விஷயத்தில், எல்லைப்புற சாலைகள் அமைப்பின் (Border Roads Organisation – BRO) அதிகபட்சத் திறனுக்கும் அதிகமான சாலை அமைக்கும் பணிகளை வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் செயல்படுத்தலாம் என்று, கமிட்டி அளித்த பரிந்துரையை அரசு அமல் செய்துள்ளது. ரூ.100 கோடிக்கும் மேலான மதிப்புள்ள அனைத்துப் பணிகளையும் செயல்படுத்துவதற்கு பொறியியல் கொள்முதல் ஒப்பந்த (ஈ.பி.சி.) நடைமுறையைk கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்முதல்கள் மூலம், பி.ஆர்.ஓ.வுக்கு ரூ.7.5 கோடி முதல் ரூ.100 கோடி வரையில் கொள்முதல் செய்ய அதிகாரத்தை உயர்த்தி, நவீன கட்டுமானத் தளங்கள், சாதனம் மற்றும் இயந்திரங்கள் அறிமுகம் தொடர்பான பரிந்துரை அமல் செய்யப் பட்டுள்ளது.  சாலைகள் அமைத்தலை விரைவுபடுத்த Hot-Mix Plant 20/30 TPH வசதியை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு பெற்றுள்ளது. கடினமான பாறைகளை அறுப்பதற்கு தொலைவில் இருந்து ரிமோட் மூலம் இயக்கக் கூடிய hydraulic Rock Drills DC-400 R  இயந்திரத்தையும், பனிக் கட்டிகளை வேகமாக அகற்றுவதற்கு, தானே முன்னேறிச் சென்று பனிக்கட்டியை அறுத்தல் மற்றும் தள்ளுதலுக்கான எப்-90 வகை இயந்திரங்களும் வாங்கப் பட்டுள்ளன.
    • சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த, துல்லியமாக வெடி வைப்பதற்கு புதிய வெடி வைப்புத் தொழில்நுட்பம், மண்ணை உறுதிப்படுத்த ஜியோ-டெக்ஸ்டைல்ஸ், நடைபாதைகளுக்கு சிமெண்ட் பிடிமானப் பலகைகள், மேற்பரப்புக்கு பிளாஸ்டிக் பூச்சு கொண்ட கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. கள அதிகாரிகளுக்கு நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை அதிகரித்துக் கொடுத்திருப்பதன் மூலம், பணிகளுக்கான நிதி வழங்கும் பணிகள் வேகமாக மேம்பட்டுள்ளன.
  • ”பிரதமர் மின்-கல்வி” (”PM e-VIDYA”) என்ற பெயரில் டிஜிட்டல்/இணையம்/காற்றில் வரும் கல்வி உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் ஒன்று சேர்க்கும் ஒருங்கிணைந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • மிஷன் சாகர்” (Mission Sagar)  எனும் திட்டத்தின் கீழ்,  கோவிட் 19 பெருந்தொற்று  பாதிப்பான  , இந்தியாவிடம் நட்புறவு கொண்ட  5 தீவு நாடுகளுக்கு (மாலத்தீவு, மொரிசியஸ், செஷல்ஸ்,  மடகாஸ்கர் மற்றும் காமரோஸ்)   இந்திய அரசு  உதவியளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்  ஐ என் எஸ் கேசரி, 580 டன் உணவுப் பொருட்களுடன், மாலத்தீவின் மாலே துறைமுகத்துக்கு  மே  12 ம் தேதி அன்று சென்று சேர்ந்தது.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனடைந்த ஒரு கோடியாவது நபர் -  பூஜா தாபா (Pooja Thapa) , மேகாலயா
    • கூ.தக. : 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி ஆயுஷ் மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தினார். உலகின் மிகப்பெரிய அரசு சுகாதார காப்பீடு திட்டமாக கருதப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் தரமான சிகிச்சையை ஏழைகள் இலவசமாக பெற முடியும். 
  • இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19-5-2020 அன்று ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.
  • 'அம்பான்' ('Amphan')  புயல் :  வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'அம்பான்'  ('Amphan') புயல் ஒடிசா   மற்றும் மேற்கு வங்கம் இடையில் 20ம் தேதி கரையை கடந்தது.
    • கூ.தக. : ஆம்பன் புயலுக்கு பெயர் சூட்டிய நாடு - தாய்லாந்து .  (2004 ஆம் ஆண்டில் 8 நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்ட 64  பெயர்களின் பட்டியலில் , இதுவே கடைசி பெயராகும்.
புயல்களுக்கு பெயரிடும் முறை பற்றி...
  • வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்த பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள் லெஹர் (அலை),மேக், சாஹர், வாயு ஆகியவையாகும்.
  • 2000 ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் படி மாநாட்டில் 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலை தயாரித்தன. 8 நாடுகளின் புயல் பட்டியல் சுழற்சி முறையில் பெயர் வைக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. 5 முறை புயல் ஏற்பட்டது.
  • ’ஸ்நேகர் போரோஷ்’ (‘Sneher Porosh’ ) என்ற பெயரில் கோவிட்-19 சூழ்நிலையால் புலம் பெயர் தொழிலாளருக்கு ஏற்படுட்டுள்ள  துயர் நீக்க திட்டத்தை மேற்கு வங்காள மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ’ப்ரோசெஸ்டா” ( ‘Prochesta’ ) என்ற பெயரில் கோவிட்-19 சூழ்நிலையில் அமைப்புசாரா தொழிலாளருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திட்டத்தை மேற்கு வங்காள மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ’மதிர் சம்ரிஷ்டி’ (‘Matir Smristi’) என்ற பெயரில் 50,000 ஏக்கர் தரிசு நிலங்களை  அந்தந்த பகுதி மக்களின் பங்களிப்புடன்   தோட்டக்கலை மற்றும்  மீன்வளர்ப்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்துவதற்கான திட்டத்தை மேற்கு வங்க அரசு 14-5-2020 அன்று அறிவித்துள்ளது.
  • ’உலக ஆற்றல் மாறுநிலை பட்டியல் 2020’ (global Energy Transition index(ETI) 2020) ல் இந்தியா 74 வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றம் (World Economic Forum(WEF)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல்  மூன்று இடங்களை முறையே  ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
  • GOAL’ (Going Online As Leaders Programme) என்ற பெயரில்  மலைவாழின இளைஞர்களின் டிஜிட்டல் திறன் மேம்பாட்டு திட்டத்தை மத்திய  பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும்  ஃபேஷ்புக் (Facebook)  நிறுவனம் இணைந்து  15-5-2020 அன்று தொடங்கியுள்ளன.
  • ”சமர்த்” (SAMARTH) என்று பெயரிடப்பட்டுள்ளநிறுவனங்கள் வள திட்டமிடல் என்ற இணைய தள செயல்பாட்டை ,  மனிதவளத் துறை அமைச்சகம்,  தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் தேசிய கல்வித் திட்டத்தின் (NMEICT - National Mission of Education in Information and Communication Technology Scheme ) கீழ் உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரமான திறந்த ஆதாரக் கட்டமைப்பாகும்.இது பல்கலைக்கழகம் / உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரிய, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இந்த திட்டமானது, குருக்ஷேத்ராவிலுள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின்(NIT Kurukshetra)  மூலம்  செயல்படுத்தப்படுகிறது.
  • கடலோர காவல்படையின் கப்பல் ”சாஷே” (Indian Coast Guard Ship ‘Sachet’ -  ICGS)  மற்றும் இரண்டு இடைமறிக்கும் படகுகள் ( interceptor boats (IBs))  சி -450 (C-450) மற்றும் சி -451(C-451)  ஆகியவற்றை கோவாவில் இருந்து 15-5-2020 அன்று  காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  ஐசிஜிஎஸ் சாஷே கப்பலானது கடற்கரையில் இருந்து கடலில் தொலைதூரத்திற்கு கண்காணிப்பு வேலையை மேற்கொள்ளும் கப்பல்களின் வரிசையில் முதலாவது கப்பல் ஆகும்.  முழுவதும் உள்நாட்டிலேயே அதாவது கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கப்பலில் உலகத் தரம் வாய்ந்த திசைகாட்டும் மற்றும் தொடர்பியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
    • 105 மீட்டர் நீளமுள்ள ”சாஷே” கப்பல் தோராயமாக 2350 டன் பாய்பொருளை இடம்பெயர்க்கிறது மற்றும் 26 நாட் என்ற அதிகபட்ச வேகத்தை அடைவதற்காக இரண்டு 9,100 கிலோ டீசல் எஞ்சின்கள் மூலம் உந்து சக்தி தரப்படும். இதன் தாங்கும் ஆற்றல் 6,000 நாட்டிகல் மைல் ஆகும்.
  • நாட்டிலேயே முதல் மாநிலமாக அரியானா மாநிலம் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை அரியானா மாநிலம் 15-5-2020 அன்று  தொடங்கியுள்ளது.
  • மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் சாம்பியன்ஸ் (www.Champions.gov.in) இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும்.சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிக்கிறது. சிறிய தொழில் பிரிவுகளின் குறைகளைத் தீர்த்து வைத்து, ஊக்குவிப்பு, ஆதரவு, உதவிகள் அளித்து, கைபிடித்துத் தூக்கிவிடும் செயல்பாடுகள் மூலம் அவற்றைப் பெரிய நிறுவனங்களாக ஆக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் செயல்படும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும்

வெளிநாட்டு உறவுகள்

  • கரோனா நோய்த்தொற்று பாதிப்பை எதிா்கொள்வதற்காக இந்தியாவுக்கு 200 செயற்கை சுவாசக் கருவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
  • 73வது உலக சுகாதாரக் கூட்டத்தில் (73rd World Health Assembly) 18-5-2020 அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
  • உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக், காலாபாணி உள்ளிட்ட பகுதிகள் தொடா்பாக இந்தியா-நேபாளம் இடையே பிரச்னை காணப்படும் சூழலில், அப்பகுதிகளைத் தங்கள் நாட்டின் அதிகாரபூா்வ வரைபடத்தில் நேபாளம் இணைத்துள்ளது.
    • இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு தெரிவித்து வருகிறது. அதேபோல், அப்பகுதிகள் நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தைச் சோ்ந்தவை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
    • இந்தச் சூழலில், திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்ரீகா்கள் பயணம் செய்வதற்கான நேரத்தைக் குறைக்கும் வகையில் லிபுலேக் கணவாய் வழியாக இந்திய அரசு சாா்பில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதற்கு நேபாள அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது.
    • இந்நிலையில், காலாபாணி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளைத் தங்கள் நாட்டின் அதிகாரபூா்வ வரைபடத்தில் இணைக்க நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான அமைச்சரவை 20-5-2020 அன்று ஒப்புதல் வழங்கியது.
  • உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் 22-05-2020 அன்று பதவியேற்றார். தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்தயொட்டி, இவ்வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
  • பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் பணியில் உள்ள ஈடுபட்டுள்ள ஐ.நா. நிவாரணப் பணிகள் அமைப்புக்கு இந்தியா 2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.15.13 கோடி) நிதியுதவி அளித்துள்ளது. ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் குழுவுக்கு இந்தியா அளித்து வரும் நிதி ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு 1.25 மில்லியன் டாலா் அளிக்கப்பட்ட நிலையில் 2016-ஆம் ஆண்டு இதுவே 5 மில்லியன் டாலா் நிதியுதவியாக அதிகரிக்கப்பட்டது. இப்போது 2 மில்லியன் டாலா் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 5 மில்லியன் டாலா் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது தவிர கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கான மருந்துகளையும் இந்தியா விரைவில் அனுப்பி வைக்க இருக்கிறது.
  • இரவீந்திர நாத் தாகூரின் 159 வது பிறந்ததினத்தையொட்டி(7 May 1861) , அவரின் பெயரை இஸ்ரேல் நாட்டின், டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு தெருவிற்கு அந்நாட்டு அரசு சூட்டியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ‘iFeel-You’ என்ற பெயரில் சமூக இடைவெளியை பேணுவதற்கான கையில் அணியும் கருவியை  இத்தாலி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Italian Institute of Technology (IIT)  ) தயாரித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் 11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, புகையிலை புரதத்தில் இருந்து கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • 2020-ம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் 2-வது இடத்திற்கு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருந்தனர்.
  • இஸ்ரேலுக்கான சீனத் தூதா் டூ வெய் (58), டெல் அவிவ் நகரிலுள்ள தனது இல்லத்தில் உயிரிழந்ததாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு 17-5-2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டது. ஆளும் கூட்டணியுடன் தற்போது புதிதாக கூட்டணி அமைத்துள்ள புளூ அண்ட் ஒயிட் கட்சித் தலைவா் பென்னி கான்ட்ஸ் துணைப் பிரதமா் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆட்சி அதிகாரத்தைப் பகிா்ந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, 18 மாதங்களுக்குப் பிறகு பென்னி கான்ட்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்பாா்.
  • உலக சுகாதார சபையில் தைவான் இடம் பெறுவதற்கு நியூஸிலாந்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும், அந்த நாட்டை தங்களது அங்கமாக சீனா கருதி வருகிறது. இதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பின் ஒரு பிரிவான உலக சுகாதார சபையில் தைவானுக்கு இடமளிக்கக் கூடாது என்று சீனா வலியுறுத்தி வருகிறது. எனினும், அந்த சபையில் இடம் பெற்றால்தான் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள முடியும் என்று தைவான் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு, நியூஸிலாந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
  • உலக சுகாதார சபைக் கூட்டத்துக்கு தைவானை அழைக்க வலியுறுத்தி 205 அமெரிக்க எம்.பி.க்கள் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனா்.
  • ஜொ்மனியில் பயன்பாடு நிறுத்தப்பட்ட அணு மின் நிலையத்தின் இரு குளிரூட்டு கோபுரங்கள் அழிக்கப்பட்டன.மின்சாரத்துக்காக அணு மின் நிலையங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த ஜொ்மனி முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த நாட்டு அணு மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. 2022-ஆம் ஆண்டுக்குள் அணு மின் நிலையங்கள் அனைத்தையும் மூட ஜொ்மனி அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு 13-5-2020 அன்று காணொலி முறையில் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்த மாநாட்டை மாஸ்கோவில் ஜூன் 9, 10 தேதிகளில்தான் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், இப்போதைய சூழ்நிலை கருதி, முன்னதாகவே நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. 26 ஏப்ரல் 1996 ல்  நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் இந்த அமைப்பில் இணைந்தன.
  • பல்வேறு அகராதிகளின் 2019 இன் சிறந்த ஆங்கிலச் சொற்கள் :
    • கிளைமேட் எமர்ஜென்சி (Climate emergency) - ஆக்ஸ்போர்டு
    • அப்சைக்கிளிங் (upcycling) - கேம்பிரிட்ஜ்
    • தே (they) - மெரியம் வெப்ஸ்டர்
    • கிளைமேட் ஸ்ட்ரைக் (Climate strike) - காலின்ஸ்
    • எக்சிஸ்டென்சியல் (existential) - டிக் ஷனரி இணையதளம்
    • ’சம்விதான்’ (Samvidhan) - ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்திச் சொல்

விருதுகள்

  • இங்கிலாந்து அரசின் ‘அலெக்சாண்டர் தால்ரிம்பிள் விருது 2019’ (Alexander Dalrymple Award 2019)  இந்திய அரசின் தேசிய ஹைட்ரோகிராபர்   (National Hydrographer to the Government of India)  வைஸ் வினய் பாட்வர் (Vice Admiral Vinay Badhwar) க்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (International Hockey Federation(FIH) ) தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் துருவ் பத்ரா (Narinder Dhruv Batra)  மே 2021 வரையில் தொடர்வதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக எயிட்ஸ் தடுப்பூசி தினம் (World AIDS Vaccine Day) - மே 18
  • சர்வதேச அருங்காட்சியக தினம் (International Museum Day) - மே 18
  • உலக உயர் இரத்த அழுத்த தினம் (World Hypertension Day) - மே 17
  • உலக தொலைதொடர்பு மற்றும் தகவல் சமுதாய தினம் (World Telecommunication and Information Society Day) - மே 17
  • சர்வதேச அமைதியாக இணைந்து வாழும் தினம் (International Day of Living Together in Peace)  - மே 16
  • சர்வதேச ஒளி தினம் (International Day of Light) - மே 16
  • தேசிய டெங்கு தினம் (National dengue day) - மே 16
  • தேசிய அருகிவரும் விலங்கின தினம் (National Endangered Species Day) - மே 15
  • சர்வதேச குடும்ப தினம் (International Day of Families) - மே 15
  • சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day) - மே 12  | மையக்கருத்து 2020 - செவிலியர் :  தலைமைக்கான ஒரு குரல் -  உலகின் ஆரோக்கியத்திற்கான சேவை (Nurses: A voice to lead - Nursing the World to Health)
  • தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day) - மே 11
    • கூ.தக. : 11-5-1998 அன்று பொக்ரான் அணு குண்டு சோதனை நடைபெற்ற தினத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

 அறிவியல் & தொழில்நுட்பம்

  • “ரெயில் பாட்” (“RAIL-BOT” (R-BOT)) என்ற பெயரில் இரயில்வே மருத்துவமனை மருத்துவர்களுக்கு உதவிடும் ரோபோவை தென் மத்திய இரயில்வே மண்டலம் (South Central Railway) உருவாக்கியுள்ளது.
  • ”ட்ரோக்லோமைசிஸ் டிவிட்டரி” ( ‘Troglomyces Twitteri’ ) என்ற பெயரில் புதிய ஒட்டுண்ணி பூஞ்சையை (parasitic fungus) டென்மார்க்கைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் அனா சோஃபியா ரெபோலேய்ரா (Ana Sofia Reboleira) கண்டுபிடித்துள்ளார்.
  • ”ஸ்வஸ்த் வாயு” (‘Swasth Vayu’) என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெண்டிலேட்டரை பெங்களூரிலுள்ள சி.எஸ்.ஐ.ஆர்.  - தேசிய  விண்வெளி ஆய்வகம் (Council of Scientific & Industrial Research – National Aerospace Laboratories(CSIR-NAL)) உருவாக்கியுள்ளது.
  • ’ஜிங்யுன்-2 01, 02’ (Xingyun-2 01, 02) எனும் இரண்டு தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை சீனா   தனது குயாஷோ -1 A (Kuaizhou-1A) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.
  • “போஸ்கியூ” (Bosque) என்ற பெயரில், மேகக் கணினியின் (cloud computing) செயற்கை நுண்ணறிவு  நிரல்களை வடிவமைப்பதற்கான புதிய  நிரலாக்க மொழியை (programming language)  மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய இரண்டு செயற்கைகோள் குய்சோ-1ஏ ராக்கெட் மூலம் சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
  • ”செவிலி ரோபோ” என்ற பெயரில்,  நேரடி மருத்துவ பணியாளர்களை நோய் தொற்றிலருந்து காத்திடும் நோக்கில்  இந்துஸ்தான் (HITS) பல்கலைகழகத்தின் ரோபோடிக்ஸ் ஆய்வு மையம் (Centre for Automation and Robotics-ANRO)  ஒரு ரோபோவை வடிவமைத்து உருவாக்கி உள்ளது. நோயாளிகளுக்கு நேரடி உதவி, கண்காணிப்பு மற்றும் கவனிப்பு பணிகளை மேற்கொள்வதால் 'செவிலி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்துஸ்தான் பல்கலைக்கழகம் வழங்கிய ஒரு ரோபோட் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், மேலும் 4 ரோபோட்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி & மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது இந்த முயற்சிக்கு ரெனால்ட் நிஸ்ஸான் துணை நின்றது

விளையாட்டுகள்

  • சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் , ’ஃபெட் கப் ஹார்ட் விருது 2020’ (Fed Cup Heart Award 2020) பெறும் முதல் இந்தியர் எனும் பெருமையை சானியா மிர்ஷா (Sania Mirza) பெற்றுள்ளார்.
  • 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை (U-17 Women’s World Cup) கால்பந்து போட்டி 17 பிப்ரவரி 2021 முதல் 7 மார்ச் 2021 வரையில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
  • கோவிட்-19 ஊரடங்கிற்க்குப் பின்னர்  விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி கட்டுப்பாடுகளுக்கான  வரையறைகளை வகுப்பதற்காக   இந்திய விளையாட்டு ஆணையத்தின்  செயலர் ரோகித் பரத்வாஜ் (Rohit Bharadwaj) தலைமையில்  6 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • உமிழ்நீரை பயன்படுத்தி கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்வதை தடை செய்ய வேண்டும் என சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனைக் குழு (ஐசிசி) பரிந்துரை செய்துள்ளது. கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்ய உமிழ்நீரை பயன்படுத்துவதால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என டாக்டா் பீட்டா்ஹாா்கோா்ட் தலைமையிலான மருத்துவக் குழு எச்சரித்தது. இதனால் உமிழ்நீரை பயன்படுத்தி பளபளக்கச் செய்ய தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • Wuhan Diary: Dispatches from a Quarantined City” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஃபங்க் ஃபங்க் (Fang Fang)
  • “Fear of God” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - வதான் (Vadhan)   எனும் புனைப்பெயரைக் கொண்ட  பொம்ம தேவரா சாய் சந்த்ரவதன் (Bomma Devara Sai Chandravadhan) 

பொருளாதாரம்

  • ”தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு” ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20.97 லட்சம் கோடியில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
    • முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி
      • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அவசர கடன் வசதி - ரூ. 3,00,000 கோடி
      • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் கடன் - ரூ.20,000 கோடி
      • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான Fund of Funds - ரூ. 50,000 கோடி
      • பி.எப். நிறுவனத்துக்கு - ரூ.2,800 கோடி
      • பி. எப் வட்டித் தொகை குறைப்பு - ரூ. 6,750 கோடி
      • நிதித்துறை நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி - ரூ 30,000 கோடி
      • என்.பி.எப்.சி மற்றும் எம்.எப்.ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் - ரூ. 45,000 கோடி
      • மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகங்களுக்கு - ரூ.90,000 கோடி
      • டி.டி.எஸ் வரிப்பிடித்தம் - ரூ. 50,000 கோடி
    • இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி
      • புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்- ரூ. 3,500 கோடி
      • முத்ரா கடன் திட்ட மானியம் - ரூ. 1,500 கோடி
      • சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி - ரூ. 5,000 கோடி
      • CLSS - MIG வீட்டுக்கடன் திட்டம் - ரூ.70,000 கோடி
      • நபார்டு வங்கி மூலமாக கூடுதல் அவசர நிதி - ரூ.30,000 கோடி
      • கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு கூடுதல் நிதி - ரூ. 2,00,000 கோடி
    • மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி
      • குறு உணவு உற்பத்தி நிலையங்கள் - ரூ. 10,000 கோடி
      • பிரதான் மந்திரி மத்யச சம்பத யோஜனா - ரூ. 20,000 கோடி
      • ஆபரேஷன் க்ரீன் திட்டம் - ரூ. 500 கோடி
      • விவசாய உள்கட்டமைப்பு நிதி - ரூ. 1,00,000 கோடி
      • கால்நடை வளர்ப்புத் துறை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு - ரூ. 15,000 கோடி
      • மூலிகை உற்பத்தி - ரூ. 4,000 கோடி
      • தேனீ வளர்ப்பு - ரூ. 500 கோடி
    • நான்காம் , ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி
      • நம்பகத்தன்மை, இடைவெளி நிதி (வி.ஜி.எப்) - ரூ. 8,100 கோடி
      • ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு - ரூ.40,000 கோடி
    • பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை (PM CARES (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations) Fund Trust), கோவிட்-19-க்கு எதிராகப் போராடுவதற்காக ரூ.3,100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ரூ.3,100 கோடியில் செயற்கை சுவாசக் கருவிகளை வாங்குவதற்கு சுமார் ரூ.2,000 கோடியும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடியும், தடுப்பு மருந்துத் தயாரிப்புப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க ரூ.100 கோடியும் பயன்படுத்தப்படும்.
      • கூ.தக. : பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை அறக்கட்டளை மார்ச் 27, 2020-இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக (அலுவல்சாரா) பிரதமரும், மற்ற உறுப்பினர்களாக (அலுவல்சாரா) (ex officio) பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரும் இருப்பர்.
    • கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்வதற்காக ”பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய வளா்ச்சி வங்கி” இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி அளித்தது.


கோவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை மறுகட்டமைப்பு செய்ய ரூ.20 இலட்சம் கோடியில் (இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு இணையான வகையில்)  சுயசார்பு பாரதம் திட்டம் (ஆத்ம நிர்பார் பாரத் அபியான் ) (“Atmanirbhar Bharat Abhiyaan” / self-reliant India Movement))  என்ற பெயரில்  விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி 12-05-2020 அன்று அறிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான ஐந்து தூண்களாக  பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகம்,  துடிப்புள்ள ஜனநாயகம் மற்றும் தேவைகள் ஆகியவற்றை பிரதமர் அறிவித்துள்ளார்.  இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் இந்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் வருமாறு. Click here to Read in details


Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language