Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

இலக்கணக்குறிப்பு கண்டறிதல் - பண்புத்தொகை | Tamil Grammar for TNPSC TET TRB Study Material


பண்புத்தொகை என்றால் என்ன?

ஒரு சொல்லானது பொருளின் பண்பையும், குணத்தையும் உணர்த்திவந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

(
எ.கா) செந்தாமரை

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

கொடுக்கப்பட்ட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக.

(
ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம். பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.)

'
செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை + தாமரை என்று பிரியும்.

'
மை' விகுதி தெரிகிறதா. ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால் தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.

நிறத்தை குறிக்கும் சொற்கள்:
பசுமை, நீலம், வெண்மை

குணத்தைக் குறிக்கும் சொற்கள்:
நன்மை, தீமை, கொடுமை, பொறாமை

சுவையைக் குறிக்கும் சொற்கள்:
காரம், புளிப்பு, கசப்பு

வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:
சதுரம், வட்டம், நாற்கரம்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை :
சிறப்புப் பெயர்கள் முன்னும் பொதுப் பெயர்கள் பின்னும் நின்று இடையில் ஆகியஎனும் பண்பு உருபு மறைந்து வருவதே இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

(
எ.கா)

சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, இந்தியநாடு, தமிழ்நாடு,
மாமரம், குமரிப்பெண், வாழைமரம், தாமரைப்பூ
பொருட்செல்வம், கடல்நீர் , தைத்திங்கள், அவிஉணவு
அரவணை, செருக்களம் போன்றவை.



0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language