நடப்பு ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்து என்பது தவறான தகவல்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
அடுத்த ஆண்டில், அரசு சமர்ப்பிக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பணியிடங்களின் எண்ணிக்கை,தேர்வு அட்டவணை உள்ளிட்டவை வெளியிடப்படும்.
நடப்பு ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
தேர்வர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தொடர்ந்து தேர்வுக்குத் தயாராகலாம் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.