தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்து வருவதால் மாணவர்காள் நலன்கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுகாதாரத்துறை, தலைமைச் செயலாளருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே CBSR, ICSE மற்றம் சில மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைத்த நிலையில் தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.