Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

G.O NO: 122 தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்று அறிவித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.



இந்த நிலையில் இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு மையங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.


இதேபோல போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், கணவனை இழந்தவர்கள், சாதி மறுப்பு திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வரிசை எண்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வோர் முறையும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகவுள்ளது.

அரசாணை இங்கே

Download here

Share:

துறைத் தேர்வு - TNPSC முக்கிய அறிவிப்பு

துறைத் தேர்வர்களுக்கான 2-ம் நிலை & 3-ம் நிலை மொழிப்பாடங்களுக்கான Viva Voce தேர்வு ஒத்திவைப்பு!

10 முதல் 13-ம் தேதி வரையிலான நாட்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. 


14 முதல் 17-ம் தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும். 


- TNPSC அறிவிப்பு

Share:

TNPSC Monthly Current Affairs - October 2021

 Students can get Monthly current affairs in English, Tamil, Current affairs for TNPSC, TNPSC Monthly current affairs Pdf, TNPSC Current affairs in Tamil pdf, English pdf.

Click the Respective link to Get TNPSC Monthly Current affairs – October 2021

English

Tamil

Share:

G.O NO : 120 INSENTIVE FOR GOVERNMENT EMPLOYEES - அரசு ஊழியர் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு.

அரசு ஊழியர் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு.

ஊக்கத்தொகை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில் , விதி 110 - இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.





GO NO : 120 , DATE : 01.11.2021 - Download here

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language