இந்தியா
- இந்தியாவில் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR) 2016-2018 ஆம் ஆண்டுகளில் 113 ஆக குறைந்துள்ளது (இந்த விகிதம் இந்தியாவில், 2014-2016 ஆம் ஆண்டில் 130 ஆகவும், 2015-17-ம் ஆண்டில் 122 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது). இந்திய பதிவாளர் ஜெனரலின் மாதிரி பதிவு முறைமை (Registrar General’s Sample Registration System (SRS)) இந்த தகவலை வழங்கியுள்ளது.
- 2016-18 ஆண்டுகளில் தமிழகத்தின் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR) 60 ஆக உள்ளது.
- இந்தியாவிலேயே அதிக இறப்புகளுடன் (215 இறப்புகள்) அஸ்ஸாம் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களிலும் 197 இறப்புகளுடன் இந்த மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன.
- பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 43 எண்ணிக்கையுடன் கடைசி இடத்தில் கேரளா உள்ளது.
- 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய எம்.எம்.ஆரை 70 ஆகக் குறைப்பதே ஐ.நா-வின் குறிக்கோள்.
- ”Ind-SAT” (Indian Scholastic Assessment Test) என்ற பெயரில், இந்தியாவில் படிக்க விரும்பும் வெளி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாவது நுழைவுத் தேர்வு 22-7-2020 அன்று ஆன்லைன் மூலம் தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) மூலம் நடத்தப்பட்டது.
- டிஜிட்டல் வங்கி முறைமைகளில் பயன்படுத்தப்படும் ‘கியூ.ஆர். குறியீடுகளைப்( QR (Quick Response) Code) பற்றி ஆராய தீபக் B பதக் (Deepak B. Phatak) தலைமையில் ரிசர்வ் வங்கியினால் அமைக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் , ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு கியூ.ஆர் குறியீடுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக இந்திய அரசின் Bharat QR மற்றும் UPI QR ஆகியவற்றை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- கங்கை மற்றும் கோதாவரி நதிகளை தூய்மைப் படுத்துவதற்காக குறைந்த செலவிலான உயிரி-தொழிழ்நுட்பத்தை உருவாக்குவதற்காக இந்திய ஐ.ஐ.டி, கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இணைந்து செயல்படவுள்ளன. இந்த திட்டமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறையினால் அமல்படுத்தப்படும்.
நியமனங்கள்
- உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படோலுக்கு, மத்திய பிரதேச ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச ஆளுநராக பதவியில் இருந்த லால்ஜி டாண்டன் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த உத்தரவை குடியரசு தலைவா் அலுவலகம் பிறப்பித்துள்ளது.
- ’பிரிக்ஸ்’ வர்த்தக மற்றும் தொழில் அமைப்பின் (BRICS (Brazil, Russia, India, China and South Africa) Chamber of Commerce and Industry (CCI)) கவுரவ ஆலோசகராக (honorary advisor) இந்தியாவைச் சேர்ந்த ஷகில் சேத் (Sahil Seth) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2020 முதல் 2030 வரை இப்பதவியில் நீடிப்பார்.
முக்கிய தினங்கள்
- “ஃபை தோராயமாக்க தினம்” (Pi approximation day) - ஜீலை 22
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
- “The Endgame” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஹீசைன் ஷெய்டி (Hussain Zaidi)