

இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் தலையிடாவண்ணம் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.
அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதே சமயச்சார்பின்மை.
உலகின் மிகப் பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 395 உறுப்புகளைக் (Articles ) கொண்டது.
முகவுரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (Schedules) கொண்டது.
Ads here
மாறிவரும் காலத்திற்கேற்ப இந்திய அரசியலமைப்பு 98 முறைகள் (2013 வரை) திருத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு வரலாறுஇந்தியர்களுக்கு அரசியலமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற கருத்தை முன்வைத்தவர் எம்.என்.ராய்.
நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.
நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.
டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.
முழு விடுதலைத் தீர்மானத்தை, 1929-ல் கொண்டு வரலாம் என்றார் காந்திஜி.
அமைச்சரவை தூதுக்குழு (1946) அறிவுரைப்படி இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
அமைச்சரவை தூதுக்குழுவின் தலைவராக இருந்தவர் சர் பெத்திக் லாரன்ஸ்.
அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.
அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப் பட்டது.
Ads here
அரசியலமைப்புச் சட்டம் 1948 பிப்ரவரியில் தயாரானது.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளே இந்திய சட்ட தினம்.
அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26, 1950.
அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாளே இந்திய குடியரசு தினம்.
அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் 299 பேர்.
2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் அரசியல் அமைப்பு சபை கூடி விவாதித்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர் அம்பேத்கர் என்பது அனைவரும் அறிந்ததே. அரசியலமைப்புச் சட்டத்தை தன் கைப்பட முழுவதுமாக எழுதியவர் பிரேம் பெஹாரி நரேன் சக்ஸேனா. அரமைப்பு சட்டத்தை எழுதி முடிக்க ஆறு மாத காலம் ஆனது.
Ads here
Ads here
Ads here
Ads here
Ads here
Ads here
Ads here
Indian Constitution Study Material
Ads here
Ads here
Ads here
This blog is very helpful and informative for this particular topic. I appreciate your effort that has been taken to write this blog for us. 10th pass govt job
ReplyDeleteSuper very useful blog...thank you somuch
ReplyDelete