Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

General Tamil ( பொதுத் தமிழ்) Model Test Questions Part - 2


General Tamil ( பொதுத் தமிழ் ) Model Questions its contains 100 Questions 

with answers for TNPSC Group II

TNPSC Group 2 Quiz



Online Test Questions General Tamil
Pothu Tamil Model Questions with answers

Online Model Test Question for TNPSC
Part -2

Questions 11 – 20 with answers available

Pothu Tamil Mock Test 100 Questions

11. தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக விளங்குவது எது?
     1. கம்பராமாயணம்
     2. அகத்தியம்
     3. நாலடியார்
     4. ஏலாதி

     விடை – அகத்தியம்

12. திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது?
     1. திருவிளையாடற்புராணம்
     2. நாலாயிர திவ்வியப்பிரபந்தம்
     3. முத்தொள்ளாயிரம்
     4. திருவாய்மொழி

     விடை – திருவாய்மொழி

13. ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே
   இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
     1. புறநானூறு
     2. குறுந்தொகை
     3. திரிகடுகம்
     4. நன்னூல்

      விடை – நன்னூல்

14. தமிழ்த்தூதர் என அழைக்கப்படுபவர் யார்?
     1. ஒட்டக்கூத்தர்
     2. ஔவையார்
     3. தனிநாயகம் அடிகள்
     4. கபிலர்

      விடை – தனிநாயகம் அடிகள்

15. நாச்சியார் திருமொழி யாரால் பாடப்பெற்றது?
     1. ஆண்டாள்
     2. திருமூலர்
     3. சுந்தரர்
     4. சீத்தலைச்சாத்தனார்

      விடை – ஆண்டாள்

16. சேர்த்து எழுதுக. நன்மை அறிஞர்
     1. நல்லறிஞர்
     2. நன்மை அறிஞர்
     3. நன்மையறிஞர்
     4. நல்ல அறிஞர்

      விடை – நல்லறிஞர்

17. செயப்பாட்டு வினை வாக்கியத்தை கண்டறிக.
     1. வேலன் மரத்தை வெட்டினான்
     2. மரம் வேலனால் வெட்டப்பட்டது
     3. வேலன் மரத்தை வெட்டு
     4. மரம் வேலனால் வெட்டு

      விடை – மரம் வேலனால் வெட்டப்பட்டது.

18. குற்றால மலையின் அழகு தான் என்னே
   வாக்கிய வகையினைக் குறிப்பிடுக.
1.       கலவை வாக்கியம்
2.       வினா வாக்கியம்
3.       உணர்ச்சி வாக்கியம்
4.       தொடர் வாக்கியம்

விடை – உணர்ச்சி வாக்கியம்

19. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
     நாட்டின் வளத்துக்கு காடுகளே அடிப்படை
1.       காடுகளின் பயன் யாது?
2.       நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?
3.       காடுகள் அடிப்படையாக எதற்கு அமைகிறது?
4.       காடுகள் நாட்டுக்கு அவசியமானதா?

விடை – நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?

20. பொருந்தாதச் சொல்லைக் காண்க.
     1. வாய்மை
     2. மெய்மை
     3. உண்மை
     4. நன்மை

      விடை – நன்மை


Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language