Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

{Flash News}TN TET / TRB | இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்



TN TET – TN TRB Latest News
From Honorable TN Education Minister



6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா டேப்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நலத்திட்டங்கள் மூலம் 11 லட்சத்து 76 ஆயிரம் மாணவ மாணவியர்கள் தங்கள் அறிவாற்றலையும் ஆங்கில கல்வி ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என தெரிவித்த அமைச்சர், அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்த மாத இறுதிக்குள் 626 ஆய்வகங்களை அனைத்து அரசு பள்ளிகளிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் தெரிவித்தார்.

பின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


TNTET General Tamil Illakanam | General Grammar 

Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language