Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

8904 Clark Posts in SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | கிளார்க் உள்ளிட்ட பணி - மொத்த காலிப்பணியிடம்: 8,904 | கடைசி நாள்: 03.05.2019. இணைய முகவரி: www.sbi.co.in


Related image
STATE BANK OF INDIA

SBI RECRUITMENT 2019

SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவி: கிளார்க் உள்ளிட்ட பணி
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904
விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019
இணைய முகவரி : www.sbi.co.in

ஸ்டேட் வங்கியில் 8,904 கிளார்க் பணிகள் ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 904 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

State Bank of India – Clark and Junior Associate Posts

விவரம் வருமாறு:- கடந்த வாரம் புரபெசனரி அதிகாரிகளுக்கான தேர்வை அறிவித்து இருந்தது. தற்போது கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 904 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள்:-

வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:-
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்:-
பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750/- கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.125/- கட்டணம் செலுத்தினால் போதுமானது.

நெட்பேங்கிக் மற்றும் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் கட்டணம் செலுத்தவும் மே 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதமும்,
முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10-ந்தேதியும் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language