Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs Online Test 15-16 July 2020


தமிழ்நாடு

  • நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க 14-7-2020 அன்று தமிழ அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று, பிறகு அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
    • கூ.தக : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, தனது பரிந்துரையை முதலமைச்சரிடம் ஏற்கனவே சமர்ப்பித்து இருந்தது. அந்த அறிக்கையை தீர ஆராய்ந்த, தமிழக அரசு, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது.

இந்தியா

  • "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India initiative) திட்டத்தின் கீழ், இஸ்ரேல் நாட்டின் அதிநவீன துப்பாக்கி ரகங்களான (Assault Rifles) 'ஆரட்' (Arad) மற்றும் கார்மல்(Carmel) ஆகியவை இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான பி எல் ஆர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (PLR Systems Private Limited) என்ற நிறுவனத்தின் மூலம் மத்திய பிரதேசத்திலுள்ள ஆலையில் தயாரிக்கப்படவுள்ளன.
    • கூ.தக. : பி எல் ஆர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (PLR Systems Private Limited) தான் இந்தியாவில், சிறிய ரக ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு உரிமம் பெற்றுள்ள முதல் தனியார் நிற்வனம் ஆகும்.
  • கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான 4ஜி/5ஜி போன்களை தயாரிக்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் 5ஜி நெட்வொர்க் சேவையை ஜியோ நிறுவனம் துவங்க உள்ளதாகவும் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 7.7 சதவீத பங்குகளில் கூகுள் நிறுவனம் 33,737 கோடி முதலீடு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அஸ்ஸாம் மாநிலத்தின் தேமாஜி (Dhemaji) மாவட்டத்திலுள்ள ஃபோபா ரிசர்வ் காடுகளை (Poba Reserve Forest) வனவிலங்கு சரணாலயமாக ( wildlife sanctuary) மாற்றுவதற்கு அஸ்ஸாம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
  • உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் முகேஸ் அம்பானி: புளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தற்போது ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • ஜீலை 2020 ல் உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 6 மற்றும் 7வது இடத்தில் இருந்த கோடீஸ்வரர்களான எலன் மாஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் ஆகிய இருவரையும் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
    • இந்த நிலையில் உலகின் முதல் பணக்காரராக அமேசான் நிறுவனம் ஜெப் பெசோஸ் என்பவர் உள்ளார் என்பதும், இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ், மூன்றாமிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், நான்காம் இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க், ஐந்தாம் இடத்தில் ஸ்டீவ் பால்மர் உள்ளனர்.
  • “COROSURE” என்ற பெயரில் உலகின் மிகக் குறைந்த விலையிலான கோவிட் -19 பரிசோதனைக் கருவியை (COVID-19 kit) ஐ.ஐ.டி டெல்லி உருவாக்கியுள்ளது. இதன் பயன்பாட்டை 15-7-2020 அன்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • “அஞ்சி காட் பாலம்” (“Anji Khad Bridge”) என்ற பெயரில் இந்தியாவின் முதல் கம்பி வடத்தால் தாங்கப்பட்ட இரயில்வே பாலத்தை (India’s first cable-stayed Indian Railways bridge) இந்திய ரயில்வேயின் கொங்கன் ரயில்வே கார்பரேசன் லிமிடெட் உருவாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சீனாப் ஆற்றின் குறுக்கே (Chenab River) அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் காத்ரா (Katra) மற்றும் ரேசி (Reasi) பகுதிகளை இணைக்கிறது.
  • இந்தியாவில் 14 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு : ஐ.நா. சா்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 2004-06 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.7 சதவீதம் போ் ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்களாக இருந்தனா். இது 2017-19 காலகட்டத்தில் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடையோா் எண்ணிக்கை சுமாா் 6 கோடி குறைந்துள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக 18.92 கோடி போ் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனா். நாட்டில் உள்ள சிறுவா்களில் சிலரே வளா்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்து வெளியிட்டுள்ளது.
    • உலக மக்கள் தொகையில் 19 சதவீதத்தை சீனா கொண்டுள்ளது. உலகத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும் 2 சதவீதம் மட்டுமே கொண்டிருக்கும் இந்தியா, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18% மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. தற்போதைய இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 139 கோடியாகும். ஆனால், தற்போதிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சியே தொடர்ந்தால் 2027-ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்தில் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஐக்கிய நாடுகளவையின், சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு 2021 (International Year of Fruits and Vegetables 2021) அனுசரிப்பை நடத்துவதற்காக  ஐ.நா. உணவு மற்றும் வேளான்மை நிறுவனத்துடன் (Food and Agriculture Organization(FAO))  இந்தியா மற்றும் சிலி நாடுகள் இணைந்துள்ளன.
    • கூ.தக. : 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஆண்டுகளின் பட்டியல்
ஐக்கிய நாடுகளவையின் 2021 ஆம் ஆண்டு அனுசரிப்புகள் (International Years Of United Nations - 2021)
☞ சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டு (International Year of Peace and Trust) 
 ☞ நீடித்த வளர்ச்சிக்கான  படைப்புத் திறன் பொருளாதாரத்திற்கான ஆண்டு (International Year of Creative Economy for Sustainable Development)
☞ சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு (International Year of Fruits and Vegetables)
☞ சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஆண்டு (International Year for the Elimination of Child Labour)
ஐக்கிய நாடுகளவையின் 2020 ஆம் ஆண்டு அனுசரிப்புகள் (International Years Of United Nations - 2020)
☞ சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டு (International Year of Plant Health)
☞ சர்வதேச செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் ஆண்டு ( International Year of the Nurse and the Midwife)
  • போலந்து அதிபா் தோ்தலில் அந்த நாட்டின் அதிபா் ஆண்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) பெரும்பான்மை வாக்குகளுடன் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

நியமனங்கள்

  • ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) துணைத் தலைவராக (vice president) இந்தியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தற்போது இந்திய தேர்தல் ஆணையராக பணியாற்றி வரும் அசோக் லவாசா(Ashok Lavasa) 15-7-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • உலக இளைஞர் திறன்கள் தினம் (World Youth Skills Day) - ஜீலை 15 | மையக்கருத்து 2020 - நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய இளையோருக்கான திறன்கள் (Skills for a resilient youth)

விளையாட்டுகள்

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India) தற்காலிகத் தலைமைச் செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : பிசிசிஐ தலைவர் பதவியில் சவுரவ் கங்குலி உள்ளார்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ” If It Bleeds” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஸ்டீபன் கிங் ( Stephen King)
Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language