Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs 1-10 மே 2020

TNPSC Current Affairs 1-10 மே 2020

தமிழ்நாடு

  • சி.ரங்கராஜன் குழு  நியமனம் :  கொரோனா நோய்த் தாக்குதலால்  பாதிப்படைந்துள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத்தில் எப்படி மீள்வது என்பது குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும். 24 பேர் கொண்ட இக்குழுவில், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெப் உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.
  • பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் புதிய இயக்குநராக டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம் 2-5-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் , தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை (Dalit Ezhilmalai)   6-5-2020 அன்று காலமானார்.

இந்தியா

  • “NSafe” என்ற பெயரில் மறுபடியும் பயன்படுத்தக் கூடிய  நுண்ணுயிர்க் கொல்லி  மாஸ்க்கை (antimicrobial mask) ஐ.ஐ.டி .டெல்லி  ஆராய்ச்சிக் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
  • ” பிரவாசி ராகத் மித்ரா“ (Pravasi Raahat Mitra) என்ற பெயரில் தமது மாநிலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு  அரசின் திட்டங்களைச் சென்றடையச் செய்வதற்கான மொபைல் செயலியை  உத்தரப்பிடதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • ”மதிய உணவு ரேசன் திட்டத்தை” (Mid-Day Meal ration) அமல் படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.  இத்திட்டத்தின் மூலம், தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கில் அவர்களுக்கான மதிய உணவிற்கான செலவுத் தொகை மாநில அரசினால் அனுப்பி வைக்கப்பட்டது.
  • இந்தியாவின் முதல் நடமாடும் கோவிட்-19 சோதனை பேருந்து ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் குழுவின் மூலம்  தயாரிக்கப்பட்டு மும்பையில்  பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
  • அறிவியல் ஆராய்ச்சி வெளியீடுகளில் 2018 ஆம் ஆண்டில், உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்திலுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் மேலாண்மை முறைமை (National Science and Technology Management Information Sysytem (NSTMIS)) தெரிவித்துள்ளது.
  • ”கோவிட் கதா” ( “COVID KATHA- A Multimedia Guide for Mass Awareness”) எனும்  பல்லூடக  கோவிட்-19 விழிப்புணர்வு  கையேட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷ்வர்த்தன் வெளியிட்டுள்ளார்.
  • காஷ்மீர் குங்குமப்பூ (Kashmir saffron) விற்கு புவிசார் குறியீடு   வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் குங்குமப்பூ ஜம்மு காஷ்மீரின்   கரீவா (Karewa) உயர்நிலப்பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.  மேலும்,  மணிப்பூரின் கருப்பு அரிசி (Manipur black rice) மற்றும் கோரக்பூரின்  டெரகோட்டா (Gorakhpur terracotta) ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
    • கூ.தக. : 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் புவிசார் குறியீடு  டார்ஜிலீங் தேயிலைக்கு (Darjeeling Tea) வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ’தேசிய உட்கட்டமைப்பு திட்டத்திற்கான” (National Infrastructure Pipeline (NIP))  உயர்மட்டக் குழு தனது இறுதி அறிக்கையை  மத்திய நிதியமைச்சரிடம்  29 ஏப்ரல் 2020 அன்று சமர்ப்பித்தது.   மத்திய பொருளாதார விவகார  துறை செயலர் அதானு சக்ரவர்த்தி (Atanu Chakraborty) தலைமையில்  கடந்த டிசம்பர் 2019 ல் அமைக்கப்பட்ட இந்த உயர்மட்ட குழுவின் நோக்கம்,  இந்திய அரசின் இலக்கான 2025 ஆம் ஆண்டிற்குள்  இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக   உயரத்துவதற்கான  உட்கட்டமைப்பு  வசதிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு   ரூ.102 இலட்சம் கோடி செலவி ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதாகும். தேசிய நில மேலாண்மை நிறுவனம் (National Land Management Corporation) எனும் அமைப்பை உருவாக்க இந்த குழு  பரிந்துரை செய்துள்ளது. 
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (Mahatma Gandhi National Rural Employment GuaranteeScheme (MGNREGS))  அதிக அளவு வேலைவாய்ப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களில் முதலிடத்தை சட்டிஷ்கர் மாநிலம் பெற்றுள்ளது.  2,34 மற்றும் 5 ஆம் இடங்களை முறையே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன.
  • 2019 ஆம் காலண்டர் ஆண்டில்   மொத்தம் 7.3 ஜிகா வாட் சூரிய ஆற்றலை நிறுவி  உலகளவில் இந்தியா மூன்றாவது சூரிய ஆற்றல் சந்தையாக உருவெடுத்துள்ளது.   Mercom India Research எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை முறையே சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் உள்ளன.
  • ”ஜனாசாதி சுகம் செயலி” (Janaushadhi Sugam app) என்ற பெயரில் ஜெனரிக் மருந்து கடைகள் அமைந்திருக்கும் இடங்களை பொதுமக்கள் எளிதாக கண்டறிவதற்கான மொபைல் செயலியை  மத்திய வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • ”கிசான் சபா செயலி” (Kisan Sabha App) : விநியோகச் சங்கிலி மற்றும் சரக்குப் போக்குவரத்து மேலாண்மை முறையுடன் விவசாயிகளை இணைக்கும் கிசான் சபா செயலியை புதுதில்லி அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில் சிஎஸ்ஐஆர்- மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்(CSIR-Central Road Research Institute (CSIR-CRRI))  உருவாக்கியுள்ளது.

பயன்பாடுகள் : 

  • விவசாயிகள், போக்குவரத்து நிறுவனங்கள், சேவை வழங்குவோர் பூச்சி மருந்துகள், விற்பனையாளர்கள், பதனக் கிடங்குகள் மற்றும் சேமிப்புக் கிடங்கு உரிமையாளர்கள், மண்டி விற்பனையாளர்கள், நுகர்வோர் பெரிய சில்லரை விற்பனை கடைகள், ஆன்லைன் கடைகள், நிறுவன வாங்குவோர் மற்றும் சம்பந்தப்பட்ட இதர நிறுவனங்களை இந்தச் செயலி இணைக்கிறது.
  • தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை தேவைப்படும் விவசாயிகள் அல்லது அதிக விவசாயிகளின் தொடர்பை விரும்பும் மண்டி விற்பனையாளர்கள் அல்லது பல நேரங்களில் காலியாகவே மண்டிக்குச் செல்லும் லாரி உரிமையாளர்கள் என விவசாயத்துடன் தொடர்புள்ள யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒற்றைத் தளமாக இது செயல்படுகிறது.
  • உரங்கள், பூச்சி மருந்து விற்பனையாளர்கள் போன்ற விவசாய சேவைகள் துறைச் சேர்ந்தவர்கள், தங்கள் சேவைக்கு அதிக விவசாயிகளை அடையக்கூடிய வகையில் கிசான் சபா செயலி பயன்படுகிறது.
  • பதனப்படுத்தும் கிடங்குகள் அல்லது சேமிப்பு கிடங்குகளுடன் தொடர்புடையவர்களுக்கும் இது பயனுடையதாக இருக்கும். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய விரும்புபவர்களுக்கும் கிசான் சபா செயலி ஒரு தளமாக விளங்குகிறது.
  • ” ஆயுஷ் சஞ்சீவனி செயலி” ("Ayush Sanjivani") என்ற பெயரில் பொது மக்களிடையே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வுகள் மற்றும் கோவிட்-19 பற்றிய தகவல்களடங்கிய செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 7-5-2020 அன்று வெளியிட்டுள்ளது.
  • “நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” (Dekho Apna Desh) என்ற பெயரில்  15 வது இணையதள காட்சி தொடரை  'பஞ்சாப்- கையேட்டுக்கு அப்பால்' என்ற பெயரில்  சுற்றுலா அமைச்சகம்  வெளியிட்டுள்ளது.
  • “ஆபரேஷன் சமுத்திர சேது” (Operation Samudra Setu) : வெளிநாடுகளிலிருந்து இந்திய குடிமக்களை அழைத்துவருவதற்காக தேசிய அளவிலான முயற்சியின் ஒரு அங்கமாக “சமுத்ர சேது”, அதாவது கடல் பாலம் செயல்பாட்டை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது.  முதற்கட்டமாக  ஐ.என்.எஸ். ஜலஸ்வா (INS Jalashwa) மற்றும் ஐ.என்.எஸ். மாகர் (INS Magar) ஆகிய  இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் மாலத்தீவிலுள்ள இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
  • GARUD - Government Authorisation for Relief Using Drones
  • ‘CMAPP (Comprehensive Monitoring of Agriculture, Price, and Procurement)’ என்ற பெயரில் விவசாயிகளின் தேவைகளை கண்காணிப்பதற்கான  மொபைல் செயலியை ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • ஆயுா்வேத மருந்தான அஸ்வகந்தாவை கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.
  • ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில்   7-5-2020 அன்று அதிகாலை விஷ வாயு கசிவு ஏற்பட்டதில்  10 க்கும் மேற்பட்டோர்   சம்பவ இடத்திலேயே பலியாகினர்.நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் விபத்திற்கு காரணமான வாயுவின் பெயர் ஸ்டைரீன் (styrene)  என்பதாகும். இவ்வாயு  எத்தனைல் பென்சீன் எனவும் அழைக்கப்படுகிறது.   கூ.தக. :  இந்த  விபத்திற்கு அபராதமாக, எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • ஹிஸ்புல் முஜாஹிதீன் பங்கரவாத அமைப்பின் தலைவர் ரெயாஸ் நைக்கூ -வை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவனது கிராமத்தில் பாதுகாப்பு படையினா் 6-5-2020 அன்று  சுட்டுக் கொன்றனா்.
  • ”வந்தே பாரத் திட்டம்” (Vande Bharat Mission) என்ற பெயரில் கரோனா நோய்த்தொற்று சூழலில் உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்டு வரும் நடவடிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
  • 2020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களில் முதலிடத்தை தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது.அமெரி்க்காவின் முன்னணி பத்திரிகையான போர்ப்ஸ், 2020ம் ஆண்டின் முதல் 10 பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 36.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் தரவரிசையில் முதலிடத்தையும், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் தமனி, 13.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், 11.9 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் மூன்றாம் இடத்திலும், உதய் கோட்டாக், 10.4 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் நான்காம் இடத்திலும், கௌதம் அதானி 8.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 5 வது இடத்திலும் உள்ளனர்.மேலும், பார்தி ஏர்டெல் சுனில் மிட்டல் 6 வது இடத்திலும், சைரஸ் பொன்னவாலா, 7-வது இடத்திலும், குமார் பிர்லா, 8-ம் இடத்திலும், லஷ்மி மிட்டல்,9-ம் இடத்திலும், அசிம் பிரேம்ஜி, 10-வது இடம் என 10 பேர் பணக்கார இந்தியராக போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த லோக்பால் உறுப்பினரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான அஜய்குமாா் திரிபாதி (62) 2-5-2020 அன்று  மாரடைப்பால் காலமானார்.
  • உலகிலேயே அதிகமானோரால் பாா்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற சாதனையை ராமாயணம்  தொடா் படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் 7.7 கோடி மக்கள் இந்தத் தொடரைப் பாா்த்துள்ளனா்.
  • "மிஷன் சாகர்” (“Mission Sagar”) என்ற பெயரில் கோவிட்-19 பேராபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் நட்பு    நாடுகளான மாலத்தீவு, மடகாஸ்கர், செஷல்ஸ் மற்றும் காமரோஸ் ஆகியவற்றிற்கு  உணவுப் பொருட்கள், ஆயுர்வேத மருந்துகள், HCQ மாத்திரைகள்  ஆகியவற்றை கடல்வழியாக  இந்திய கடற்படைக் கப்பல்  ஐ.என்.எஸ். கேசரி  (Indian Naval Ship Kesari) மூலம்  அனுப்பி வைப்பதற்கான திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட செகாதர் குழுவின் (Shekatar Committee) பரிந்துரையின் படி இந்திய இராணுவ பொறியியல் சேவைகளிலுள்ள  9,304 பதவிகளை ஒழிப்பதற்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • நிதி அயோக் மற்றும்  பிரிமால் பவுண்டேசன் (Primal Foundation) இணைந்து   தாத்தா - பாட்டி திட்டம்(Surakshit Dada-Dadi and Nana-Nani Abhiyan)   எனும் திட்டத்தை 5-5-2020 அன்று தொடங்கியுள்ளன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்  நாடு முழுவதிலுமுள்ள  மூத்த குடிமக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களைக் குறித்த பெருமளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • ”யாஷ்” (YASH - Year of Awareness on Science & Health) என்ற பெயரில் கோவிட் -19 பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கான திட்டத்தை   தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  தகவல் தொடர்பு கவுண்சில் (National Council for Science & Technology Communication (NCSTC) )  மற்றும்  மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை ( Department of Science & Technology (DST)) இணைந்து தொடங்கியுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

  • இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 75-ஆவது தினத்தையொட்டி, ஆங்கிலேய ராணுவத்துக்காகப் போரிட்டு உயிா்த்தியாகம் செய்த 87,000 இந்திய வீரா்களுக்கு பிரிட்டனில் 8-5-2020 அன்று மரியாதை செலுத்தப்பட்டது.
  • ” தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” எனும் புதிய பயங்கரவாத அமைப்பை  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் , பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின்  மூன்று உயர் தலைவர்களால் இந்த அமைப்பு கட்டுப்படுத்தப்படுகிறது  என உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
  • கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு உதவிடும் வகையில் இந்தியாவுக்கு 7 மெட்ரிக் டன் மருத்துவப் பொருள்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஈராக் நாட்டின் 6வது பிரதமராக முஸ்தஃபா அல் காதிமி (Mustafa Al Kadhimi) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய வம்சாவழி அமெரிக்க பெண்மணி மனிஷா சிங் (Manisha Singh) பொருளாதார ஒத்துழைப்பு மற்றூம் வளர்ச்சிற்கான அமைப்பின் (Organization for Economic Cooperation and Development(OECD)) அமெரிக்க பிரதிநிதியாக ( US envoy) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக வங்கியின் சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கிக்கான ( International Bank for Reconstruction and Development (IBRD)) அமெரிக்க பிரதிநிதியாக  இந்திய அமெரிக்க வழக்கறிஞர்  அசோக் மைக்கேல் பிண்டோ (Ashok Michael Pinto) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் (President of the European Council) -  E. சார்லஸ் மைக்கேல்  (H.E. Charles Michel)
  • இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் பெஞ்சமின் காண்ட் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • சீனாவின் லாங் மார்ச் 5-பி ஏவூர்தி 5-5-2020  அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • 2-ம் உலகப்போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு ரஷியா பதக்கம் வழங்கியுள்ளது
  • கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ரூ.61,500 கோடி வழங்க சம்மதித்து உள்ளன. கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சிக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான 40 நாடுகளின் தலைவர்கள் கூட்டம், ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் 5-5-2020 அன்று நடைபெற்றது. காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஐரோப்பிய கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உலக நாடுகள் 7.4 பில்லியன் யூரோ (சுமார் ரூ.61 ஆயி ரத்து 500 கோடி) வழங்க முன் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத்தேவையான நிதி திரட்டும் இந்தக் கூட்டத்தில் உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய அமெரிக்கரான சரிதா கோமட்டிரெட்டியை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
  • முதல்முறையாக பாகிஸ்தான் விமானப்படையில் தேர்வு செய்யப்பட்ட ‘இந்து’ விமானி எனும் பெருமையை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின்  இந்து இளைஞரான ராகுல் தேவ் பெற்றுள்ளார்.
  • கொரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்தை முதன் முதலாக இஸ்ரேல் கண்டு பிடித்து உள்ளது.இஸ்ரேலின் இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 
  • இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது தனது உயிரை காப்பாற்றிய மருத்துவர்களின் பெயர்களை  தன்னுடைய மகனுக்கு   (வில்ஃபிரெட் லாரி நிக்கோலஸ் என) சூட்டியுள்ளார் .
  • பிரிட்டன் ராயல் சொஸைட்டியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட   விக்ரம் தேஷ்பாண்டே சோ்க்கப்பட்டுள்ளாா்.  மும்பையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயின்ற விக்ரம் தேஷ்பாண்டே, தனது ஆராய்ச்சிகள் மூலம் இயந்திரப் பொறியியலுக்குப் பல்வேறு முக்கியப் பங்களிப்புகளை நல்கியுள்ளாா்.
    • கூ.தக. : அறிவியல் சாா்ந்த பயன்பாடுகளை ஊக்குவிப்பதற்கான கூட்டமைப்பான பிரிட்டன் ராயல் சொஸைட்டி 1660-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • பிரிட்டன் மற்றும் அந்நாட்டின் ஆளுகையின் கீழிருந்த காமன்வெல்த் நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழில்நுட்பவியலாளா்கள் ஆகியோா் ராயல் சொஸைட்டியின் உறுப்பினா்களாக உள்ளனா்.
    • புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன், சாா்லஸ் டாா்வின், ஸ்டீபன் ஹாக்கிங், ஸ்ரீநிவாச ராமானுஜன் உள்ளிட்டோா் ராயல் சொஸைட்டியின் உறுப்பினா்கள் ஆவா்.
  • கொரோனாவுக்கான சிகிச்சைக்கு அமெரிக்காவின் கைலீட் சயன்சஸ் நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்’ (remdesivir) மருந்தை பயன்படுத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
  • அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை ரஷ்யா வடிவமைத்துள்ளது.
  • ஈரான் நாட்டில் ‘தோமான்’ (Toman) என்ற புது நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தோமானின் மதிப்பு  10,000 ஈரானிய ரியால் (Rial) ஆக இருக்கும்.

பொருளாதாரம்

  • 2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தை மூடிஸ் நிறுவனம் (Moody's)   தனது முந்தைய கணிப்பான 2.6% த்திலிருந்து  பூஜ்ஜியமாக குறைத்து கணித்துள்ளது.
  • ”பாரத்மார்க்கெட்” (‘bharatmarket’) என்ற பெயரில் இந்தியாவிலுள்ள அனைத்து வியாபாரிகளுக்குமான மின் வணிக சந்தை (e-commerce marketplace)  வசதியை  bharatemarket.in எனும் இணையதளத்தின் மூலமாக  ஏற்படுத்துவதாக   அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders (CAIT) )  அறிவித்துள்ளது.
  • இந்தியாவின் ’ENCORE’ எனப்படும்  கடலோர மற்றும் கடல் வள திறன் மேம்பாட்டு’ (‘ Enhancing Coastal and Ocean Resource Efficiency  - ENCORE ) திட்டத்திற்கு  உலக வங்கி  400 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் ’ஓபன் பட்ஜெட் சர்வே 2019’ (Open Budget Survey 2019) எனப்படும் நிதியறிக்கை வெளிப்படைத்தன்மை கொண்ட நாடுகளின் பட்டியலில்   இந்தியா 53 வது இடத்தைப் பெற்றுள்ளது.  International Budget Partnership (IBP) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல்  மூன்று இடங்களை முறையே  நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்வீடன் நாடுகள் பெற்றுள்ளன.
  • கோவிட்-19 தொற்றைத் தடுக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு உதவும் 500 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்திய அரசு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) 8-5-2020 அன்று கையெழுத்திட்டுள்ளன.

விருதுகள்

  • புலிட்சர் பரிசு 2020 (Pulitzer Prize) ல் தனிசிறப்பு புகைப்படப் பிரிவில்  (feature photography)  இந்தியாவின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த   தார் யாசின், முக்தர் கான் மற்றும் சன்னி ஆனந்த் ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • ஜப்பான் நாட்டின் ‘ஆர்டர் ஆஃப் ரைசிங் சன்’ (‘Order of Rising Sun’ ) விருது மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் தன்ஞம் தபாலி சிங்கிற்கு (Thangjam Dhabali Singh) வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • ”ஐ.நா. சுற்றுசூழல் திட்டத்தின்” ( United Nations Environment Programme (UNEP) ) அடுத்த இரண்டாண்டுகளுக்கான  தேசிய  நல்லெண்ண தூதுவராக  (National Goodwill Ambassador)   பாலிவுட் நடிகை  ‘தியா மிர்ஷா” (Dia Mirza) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : 5 ஜீன் 1972 ல் தொடங்கப்பட்ட ஐ.நா.  சுற்றுசூழல் திட்டத்தின் (United Nations Environment Programme)  தலைமையிடம் கென்யா நாட்டிலுள்ள நைரோபி (           Nairobi )  நகரில் உள்ளது.  இவ்வமைப்பின் தற்போதைய  செயல்  இயக்குநராக டென்மார்க்கை சேர்ந்த இங்கர் ஆண்டர்ஸன் (Inger Andersen) உள்ளார்.
  • பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் (Parliament’s Public Accounts Committee(PAC)) தலைவராக  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ( Adhir Ranjan Chowdhury) மறுபடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ரிசர்வ் வங்கியின் மைய வாரியத்தின் (Central Board of the Reserve Bank of India(RBI)) இயக்குநராக தருண் பஜாஜ் (Tarun Bajaj) 6-5-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day ) - மே 11
  • சர்வதேச அன்னையர் தினம் - மே 10
  • இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோரின் சர்வதேச நினைவு தினம் (Time of Remembrance and Reconciliation for Those Who Lost Their Lives during World War II)  - மே 8,9
  • உலக வலசை போகும் பறவைகள் தினம் (World Migratory Bird Day) - மே 9 | மையக்கருத்து 2020 - ‘பறவைகளே, எங்கள் உலகை இணையுங்கள்’ (“Birds Connect Our World”)
  • உலக ரெட் கிராஸ் / ரெட் கிரசண்ட் தினம் (World Red Cross and Red Crescent Day) - மே 8
    • கூ.தக. : 1863 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச ரெட் கிராஸ் குழுவின் (International Committee of the Red Cross(ICRC))  தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ளது.
  • உலக தாலசீமியா நோய் தினம் (World Thalassaemia day)  - மே 8
  • உலக தடகள தினம் (World Athletics Day) - மே 7
  • உலக கை சுகாதார தினம் (World Hand Hygiene)  - மே 5
  • உலக ஆஸ்துமா நோய் தினம் (World Asthma Day) - மே 5 | மையக்கருத்து 2020 - போதும், ஆஸ்துமா இறப்புகள் (Enough Asthma Deaths)
  • சர்வதேச மருத்துவச்சிகள் தினம் (International Day of the Midwife) - மே 5
  • உலக தீயணைப்புப்படை வீரர்கள் தினம் (International Firefighters’ Day) - மே 4
  • உலக ஊடக சுதந்திர தினம் (World Press Freedom Day ) - மே  3
  • உலக சிரிப்பு தினம் (World Laughter Day) - மே 3
  • உலக சூரைமீன் தினம் (World Tuna Day) - மே 2
  • சர்வதேச வானியல் தினம் (International Astronomy Day) - மே 2
  • சர்வதேச தொழிலாளர் தினம் (International Labour Day) - மே 1
  • ஆயுஷ்மான் பாரத் தினம் (Ayushman Bharat Diwas) - ஏப்ரல்  30

அறிவியல் & தொழில்நுட்பம்

  • “ Luhman 16A” என்று பெயரிடப்பட்டுள்ள வியாழன் கோளையொத்த  குறுங்கோள் (dwarf) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • “UV blaster” என்ற பெயரில் புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமி ஒழிப்பு கோபரத்தை (Ultraviolet Disinfection Tower)  மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி  மற்றும் வளர்ச்சி நிறுவனம் (Defence Research and Development Organisation(DRDO)) உருவாக்கியுள்ளது.
  • ”ஆர்க்டிகா-எம்” ( ‘Arktika-M’ ) என்ற பெயரில்  ஆர்டிக்  பருவநிலை மற்றும் சுற்றுசூழல் ஆராய்ச்சிக்கான ரஷியாவின்  முதல் செயற்கைக் கோள் Soyuz-2.1b  ராக்கெட்டின் மூலம் டிசம்பர் 2020 ல் அனுப்பப்படவுள்ளது.
  • “eCovSens” என்ற பெயரில்  கோவிட்-19  கொரோனா வைரஸை 30 நொடிகளில் கண்டறிவதற்கான  ‘உயிரி உணர்வி’ (biosensor)  தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவியை  ஹைதராபாத்திலுள்ள, தேசிய  விலங்குகள் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Animal Biotechnology(NIAB))  உருவாக்கியுள்ளது.
  • முதல் முறையாக “ஸ்பைனோசரஸ் ஆகிப்டியாகஸ்” ( ‘Spinosaurus aegyptiacus’)  ‘நீரில் வாழும் தகவமைப்புடைய  , இறைச்சி உண்ணும் டைனோசர் (meat-eating aquatic Dinosaur) வகை  வாழ்ந்ததற்கான ஆதாரங்களை   வட ஆப்பிரிக்காவின் மொரோக்கா சகாரா பகுதியில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இந்த டைனோசர்கள் வகை  வாழ்ந்த காலம் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக கணிக்கப்பட்டுள்ளது.
  • “அதுல்யா” ( ‘Atulya’ ) என்ற பெயரில் , கொரோனா வைரஸ் கிருமியை 30 நொடிகளில் ஒழிக்கவல்ல, மைக்ரோ வேவ் தொற்றுநீக்கியை ( microwave steriliser)  பூனேவைச் சார்ந்த   அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் ( Defence Institute of Advanced Technology (DIAT))  தயாரித்துள்ளது.
  • நாசாவின் முதல் செவ்வாய் கிரக ஹெலிகாப்டருக்கு   இந்திய வம்சாவளி இந்திய சிறுமி வனீஷா ரூபானி    (Vaneeza Rupani) பரிந்துரைத்த “இஞ்செனிட்டி” (Ingenuity)  என்ற பெயரி சூட்டப்பட்டுள்ளது.
  • ”HCARD - Hospital Care Assistive Robotic Device” என்ற பெயரில் மருத்துவ பணியாளர்களுக்கு உதவிபுரியும் ரோபோவை  மேற்குவங்க மாநிலம் துர்க்காப்பூரிலுள்ள  சி.எஸ்.ஐ.ஆர். - மத்திய எந்திரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR- Central Mechanical Engineering Research Institute (CMERI)) உருவாக்கியுள்ளது.
  • "நோட்ஸ்கிளீன்” (NOTESCLEAN) என்ற பெயரில் ரூபாய் நோட்டுகளிலுள்ள தொற்றுக் கிரிமிகளை அகற்றுவதற்கான  கருவியை   ஹைதராபாத்திலுள்ள  மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation (DRDO)) இம்ராட் ஆராய்ச்சி மையம்  (Research Centre Imarat (RCI))  உருவாக்கியுள்ளது.
  • ”துருவ்ஸ்” (Defence Research Ultraviolet Sanitiser (DRUVS)) என்ற பெயரில் புற ஊதாக்கதிர்கள் மூலம்  செயல்படும்  கிருமி நாசினி  கருவியை  ஹைதராபாத்திலுள்ள   மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation (DRDO)) இம்ராட் ஆராய்ச்சி மையம்  (Research Centre Imarat (RCI)) உருவாக்கியுள்ளது.
  • கோவிட் கவாச் எலைஷா” (COVID KAVACH ELISA) என்ற பெயரில் கோவிட்-19 க்கு எதிரான உடலிலுள்ள நோயெதிர்ப்பு ஆண்டிபாடியை சோதனை செய்வதற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட   எலைஷா ( IgG ELISA test)   சோதனைக் கருவியை   பூனேவிலுள்ள     தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Council of Medical Research (ICMR)-National Institute)  தயாரித்துள்ளது.
  • பூமியின் வட துருவத்தில் ஏற்பட்டிருந்த 620,000 சதுர மைல்கள்  பரப்புள்ள மிகப்பெரிய ஓஷோன்  ஓட்டை அடைபட்டுள்ளதாக   ஐரோப்பிய ஒன்றியத்தின்   கோப்பர்நிக்கஸ்  வானியல் ஆராய்ச்சி சேவைகள் மையம் (Copernicus Atmosphere Monitoring Service (CAMS)) அறிவித்துள்ளது.

விளையாட்டுகள்

  • 2020 ஆம் ஆண்டில் நடைபெறுவதாக இருந்த பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் (Badminton World Championship) போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு,    29 நவம்பர் 2021 முதல் 5 டிசம்பர் 2021 வரை ஸ்பெயின் நாட்டின் ஹீல்வா எனுமிடத்தில் நடைபெறவுள்ளதாக  உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் நடைபெறுவதாக இருந்த காமன்வெல்த் இளையோர் விளையாட்டுகள் (Commonwealth Youth Games)   2023 ஆம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • டென்னிஸ் விளையாட்டிற்கான ‘ஃபெட் கோப்பை இதய விருது’ (Fed Cup Heart Award) பெறும்  முதல் இந்தியர் எனும் பெருமையை  சானியா மிர்ஷா பெற்றுள்ளார்.  இந்த விருதை சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (International Tennis Federation(ITF) ) வழங்கியுள்ளது.
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது . சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை முறையே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் பெற்றுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Shivaji in South Block: The Unwritten History of a Proud People” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - கிரிஷ் கூபர் (Girish Kuber)
  • “The Room Where It Happened: A White House Memoir” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஜான் போல்டன் (John Bolton)
  • ’Vijyant at Kargil: The Life of a Kargil War Hero’ எனும் புத்தகத்தின் ஆசிரியர்கள் - வி.என்.தாபர், நேகா திவேதி

  Download as PDF

Share:

நடப்பு நிகழ்வுகள் 22-30 ஏப்ரல் 2020

நடப்பு நிகழ்வுகள் 22-30 ஏப்ரல் 2020

தமிழ்நாடு

  • கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
    • மேலும், இத்துடன், மணிப்பூர் கருப்பு அரிசி, உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் டெரகோட்டா ஆகியவற்றுக்கு  புதிதாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
  • சென்னைக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் ஜே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது வரை மத்திய நீா் வளம், நதிநீா் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் அமைச்சகத்தின் கீழ் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இருந்தது.
    • பிரதமா் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றவுடன் நீா் தொடா்பான அனைத்து பிரச்சினைகளையும் கையாள ஜல் சக்தி துறையை ஏற்படுத்தினாா். நீா் வளம், நதி மேம்பாடு, கங்கை புத்தாக்கம் போன்றவைகளும் இந்த துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவைகளைப் போன்று முந்தைய மத்திய நீா் வளம், நதிநீா் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் அமைச்சகத்தின் கீழ் இருந்த மற்ற நதிகள் நீா் மேலாண்மை ஆணையங்களும் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன
  • கூ.தக. : தமிழகம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் காவரி நடுவா் மன்ற தீா்ப்பின்படி காவிரி நதி நீரை பகிா்ந்து கொள்ள உச்சநீதிமன்றம் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டது. அதன்படி 2018 - ஆம் ஆண்டில் இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
  • தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கு : ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க நெல்லை மாநகராட்சி, தமிழகத்திலேயே முதல் சமூக இடைவெளி திரையரங்கை உருவாக்கியுள்ளது.
  • கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிர் இழப்பவர்களுக்கான நிதி உதவியை, ரூ.10 லட்சத்திலிருந்து, ரூ.50 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா

  • உலகளவில் பட்ஜெட்  வெளிப்படைத்தன்மை மற்றும்   பொறுப்புடைமை (Budget Transparency and Accountability)  பட்டியல் 2020 ல் இந்தியா 53 வது இடத்தைப் பெற்றுள்ளது. International Budget Partnership என்ற அமைப்பு வெளியிட்ட இந்த பட்டியலில்  முதல் நான்கு  இடங்களை முறையே நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • 2020 ஆம் நிதியாண்டில் நிறுவப்பட்ட மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில்   கர்நாடகா மாநிலம் 15,232 மெகாவாட்  உற்பத்தி திறனுடன் முதலிடத்தையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே தமிழ்நாடு (14,347 மெகா வாட்)  மற்றும் குஜராத் (10,586 மெகா வாட்) மாநிலங்களும் பெற்றுள்ளன.  CRISIL எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
    • இவ்வறிக்கையின் படி, புதிதாக சேர்க்கப்பட்ட, சூரிய ஆற்றல் உற்பத்தி திறனில்  முதல் மூன்று இடங்களை முறையே ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களும்,
    • காற்று ஆற்றல் உற்பத்தி திறன்களில்  முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களும் உள்ளன.
  • பத்மஸ்ரீ விருது பெற்ற பாலிவுட் நடிகர் ‘இர்ஃபான் கான்’ (Irrfan Khan) தனது 53 வது வயதில் 29-4-2020 அன்று காலமானார்.
  • “ஜீவன் அம்ரித் யோஜனா” (Jeevan Amrit Yojana) என்ற பெயரில் கொரானா நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கான ”திரிகுட் சர்னா” (three peppers)  என்ற ஆயுர்வேத மருந்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய  பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் கிராமப்புறங்களில் மின்சார இணைப்பு வழங்குவதற்கான திட்டத்திற்கு  346 மில்லியன் டாலர்  கடனுதவி வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி  ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • கோவிட் - 19 நோய்க்கு பிளாஸ்மா  தெரபி சிகிச்சை முறையை (Convalescent Plasma Therapy (CPT) ) தொடங்கியுள்ள இந்தியாவின் முதல் அரசு மருத்துவமனை எனும் பெருமையை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள ’கிங் ஜியார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம்’ (King George Medical University (KGMU)) பெற்றுள்ளது.
  • ”ஜீவன் சக்தி யோஜனா” (Jeevan Shakti Yojana) என்ற பெயரில் நகர்ப்புற பெண்கள், அரசு நிதியுதவியுடன், வீட்டிலிருந்தே  மாஸ்க் தயாரிப்பதை ஊக்குவிக்கும்  திட்டத்தை   மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
  • ”முதலமைச்சர் கோவிட்-19 யோதா கல்யாண் யோஜனா” (‘Chief Minister COVID-19 Yoddha Kalyan Yojana’) என்ற பெயரில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களுக்கு ரூ.50 இலட்சம் சுகாதார காப்பீட்டு திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், உலகளவில் இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ’ஸ்டாக் கோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ (Stockholm International Peace Research Institute (SIPRI)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை  முறையே  அமெரிக்கா (732 பில்லியன் டாலர்) , சீனா (261 பில்லியன் டாலர்)   , இந்தியா (71.1 பில்லியன் டாலர்), ரஷியா (65.1  பில்லியன் டாலர்) மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • ”இ-கார்யாலாய்” (‘e-karyalay’) என்ற பெயரில்  மின்னணு அலுவலக (e-office)   முறைமையை   மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force(CISF)) தொடங்கியுள்ளது.
  • ”தன்வந்தரி” ( ‘Dhanwantari’) என்ற பெயரில் மருந்துகளை நோயாளிகளின் வீட்டிற்கு சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை அஸ்ஸாம் மாநில அரசு  தொடங்கியுள்ளது.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடனுதவி திட்டத்தை ஆந்திரப்பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • ”ஸ்வாமித்வா திட்டத்தை” (Swamitva Scheme) தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (ஏப்ரல் 24) முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் 24-4-2020 அன்று தொடங்கி வைத்தார்கள்.  உரிமைத்துவம்(Ownership)  எனப்பொருள்படும்  ’ஸ்வாமித்வா’ திட்டத்தின் முக்கிய அம்சம்  கிராமப்புறங்களில்   ஒருங்கிணைந்த சொத்து சரிபார்த்தல் வசதியை வழங்குவதாகும்.  இத்திட்டம் முதற்கட்டமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, உத்தரக்காண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது.
  • ”இ-கிராம் ஸ்வராஜ் செயலி” (”E-Gram Swaraj application”) என்ற பெயரில்  கிராமப் புறங்களில் வளர்ச்சி திட்டங்களை மேற்பார்வையிட  பஞ்சாயத்து  அமைப்புகளுக்கு உதவிடும் செயலியை  பிரதமர் மோடி அவர்கள் தேசிய பஞ்சாயத்து தினமான 24-4-2020 அன்று வெளியிட்டார்.
  • ”அப்தாமித்ரா” (“Apthamitra”) என்ற பெயரில் கோவிட்-19 பாதிப்பு பகுதிகளில் மருத்துவ வசதி மற்றும்  தொலைதூர மருத்துவ கவுண்சிலிங் வழங்குவதற்கான மொபைல் செயலியை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலக ஊடக சுதந்திர பட்டியல் 2020 (“The World Press Freedom Index 2020” )  ல்  இந்தியா  142 வது இடத்தைப் பெற்றுள்ளது.  பாரிஸ் நகரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ’Reporters Without Borders’ அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில்  முதல் மூன்று இடங்களை முறையே நார்வே, பின்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.
  • ”eSanjeevaniOPD” என்ற பெயரில் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனையை வழங்குவதற்கான சேவையை  ஹிமாச்சல் பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • கோவிட்-19 நோய்க்கான பிளாஸ்மா ஆராய்ச்சியை மேற்கொள்ள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுண்சிலின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள முதல் ஆராய்ச்சி நிறுவனம் எனும் பெருமையை  குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நிறுவனம் (Sardar Vallabhbhai Patel Institute)   பெற்றுள்ளது.
  • மிதமிஞ்சிய அரிசியை சானிட்டைசர் தயாரிப்பதற்கான எத்தனாலாக மாற்றுவதற்கு  இந்திய உணவுக் கழகத்திற்கு  (Food Corporation of India (FCI))   தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழு   (National Biofuel Coordination Committee (NBCC) ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ’ஹங்பன் தாதா பாலம்’ (Hangpan Dada Bridge) -  அருணாச்சலப் பிரதேசத்தில்  சுபன்சிரி (Subansiri) ஆற்றின் குறூக்கே அமைந்துள்ளது. 
  • புயல்களுக்கான பெயர் பட்டியலில், முதன் முதலாக 'முரசு, நீர்' என்ற இரண்டு தமிழ் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
    • இந்திய பெருங்கடலில் இணைந்துள்ள வங்கக்கடல், அரபிக்கடல் ஆகியவற்றில் உருவாகும் புயல்களுக்கு, உலக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில், பெயர் சூட்டப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதிகளை, கரைகளாக கொண்ட நாடுகளில் உருவாகும் புயல்களுக்கு, இந்த பெயர் சூட்டப்படுகிறது. கடந்த, 2004ல் தயாரான பெயர் பட்டியல், இதுவரை பயன்படுத்தப்பட்டது. எட்டு நாடுகள் சார்பில், 64 பெயர்கள் இடம் பெற்றன. தற்போது, அனைத்து பெயர்களும் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில், தாய்லாந்து தேர்வு செய்துள்ள, 'அம்பான்' என்ற, பெயர் மட்டும் மீதம் உள்ளது.
    • இந்நிலையில், புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருந்த, எட்டு நாடுகளுடன், புதிதாக, ஐந்து வளைகுடா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஈரான், கத்தார், ஏமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் தலா, 13 பெயர்கள் வழங்கியுள்ளன. அதன்படி, 139 பெயர்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தியா அளித்த பெயர்களில், முதல் முறையாக, இரண்டு தமிழ் பெயர்கள் உள்ளன. 'முரசு, நீர்' என்ற, இரண்டு பெயர்களையும்,சென்னை வானிலை மையம் தேர்வு செய்து கொடுத்துள்ளது.மேலும், சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காள மொழி பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
  • உலக அளவில் 2019-ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கிய நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
    • பாதுகாப்புப் படைக்கு அதிகமாக செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்தப் பட்டியலில் சீனா, இந்தியா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்தியா பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.98 லட்சம் கோடியை 2019-ஆம் ஆண்டில் செலவிட்டது. இது 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.8 சதவீதம் அதிகமாகும். பட்டியலில் ரஷியா, சவூதி அரேபியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 
  • உலக சுகாதார அமைப்பின் நிா்வாகக் குழுவுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா மே 2020 மாதத்தில் ஏற்கவுள்ளது.மேலும், உலக சுகாதார அமைப்பின் நிதிநிலைக் குழுவிலும் இந்தியா இடம்பெறவுள்ளது. இந்தோனேசியாவின் பதவிக் காலம் முடிவடையவுள்ள சூழலில், இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
  • ஸ்பானிஷ் ஃப்ளூ நோய்த்தொற்று இந்தியாவில் ஏற்பட்ட ஆண்டு - 1918
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் புதிய திட்டம் “ஸ்வமித்வா” ( SVAMITVA scheme) : கிராமப்புறப் பகுதிகளில் திட்டமிடலை ஒழுங்குபடுத்துதல், வருவாய் வசூல் ஆகியவற்றுக்கு இந்தத் திட்டம் உதவும் . தங்கள் வீட்டு சொத்துகளை ஆவணப்படுத்தும் உரிமையை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்கும் என்றும், இந்த விவரங்களைப் பொருளாதாரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் .
  • ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் சீனாவின் ஜாக் மாவை விட 3 பில்லியன் டாலர் அதிக சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி.

வெளிநாட்டு உறவுகள்

  • ’அந்திகுவா’ (Antigua) நாட்டிற்கு கொரோனா நோயை எதிர்த்து போராடுவதற்கான நிதியுதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்தியா வழங்கவுள்ளது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஜி-20 நாடுகளின் மெய்நிகர்  பொருளாதார அமைச்சர்கள் கூடுகை (G20 Digital Economy Ministers meeting)  30-4-2020 அன்று  நடைபெற்றது.  இந்தியாவின் சார்பாக மத்திய சட்டம் மற்றும் நீதி,  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார்.
  • ”பீட்டர்ஸ்பர்க் பருவநிலை பேச்சுவார்த்தையின் (Petersberg Climate Dialogue) ” 11 வது கூடுகை இணைய வழியில் 27-28 ஏப்ரல் 2020 தினங்களில் நடைபெற்றது.   ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து தலைமையேற்று நடத்திய இந்த கூடுகையில் இந்தியாவின் சார்பில் மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார்.
    • ”பிட்ச் பிளாக் இராணுவ ஒத்திகை” (Exercise Pitch Black) என்ற பெயரில்  இரண்டாண்டுகளுக்கொரு முறை ஆஸ்திரேலிய நாட்டினால்  நடத்தப்படும்  பன்னாட்டு விமானப்படை ஒத்திகையின்  2020 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு  கோவிட்-19  பரவலினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
  • சீனாவின் முதலாவது செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்திற்கு ‘ தியான்வென்1’ (Tianwen-1) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • “விட்டல்” (VITAL - Ventilator Intervention Technology Accessible Locally) என்ற பெயரில் கோவிட்-19 நோயாளிகளுக்கான சிறப்பு வெண்டிலேட்டர்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ உருவாக்கியுள்ளது.
  • ”நூர்” ( “Noor” ) என்ற பெயரில் ஈரான் நாட்டின் முதல்  இராணுவ செயற்கைக் கோள் “காசெட்” (‘Qased’) எனும்  ஏவுகணையின் மூலம் 22-4-2020 அன்று  விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
  • சார்க் (South Asian Association for Regional Cooperation (SAARC)) அமைப்பின் சுகாதார அமைச்சர்களின் மெய்நிகர் மாநாடு  (virtual conference)  23-4-2020 அன்று நடைபெற்றது. பாகிஸ்தான் நாடு நடத்திய இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில்  சுகாதார சேவைகளின் பொது இயக்குநர் ராஜிவ் கார்க் பங்கேற்றார்.
  • ”கஞ்சா” (cannabis) சாகுபடியை சட்டபூர்வமாக்கியுள்ள முதல் அரபு நாடு எனும் பெயரை லெபனான் பெற்றுள்ளது.
  • ரஷிய பிரதமா் மிகயீல் மிஷுஸ்டினுக்கு (54) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
  • சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையத்தின் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) 2020 ஆம்  ஆண்டு அறிக்கையில்  மத சுதந்திரத்தை மீறும்  நாடுகள் என பர்மா, சீனா, எரித்ரியா, இந்தியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, சிரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வியட்நாம் என 14 நாடுகளை பட்டியலிட்டு உள்ளது. சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் செயலற்ற நிலைக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்டது தான் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம். இதன் பரிந்துரைகள் வெளியுறவுத்துறைக்கு கட்டுப்படாதவை ஆகும்.
    • 2004 முதல் முதல் முறையாக பாகிஸ்தான், சீனா, வட கொரியா உள்ளிட்ட 14 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்து உள்ளது.
  • 24 ஆயிரம் கொள்கலன்களை ஏற்றிச்செல்லும் அளவுடைய உலகின் மிகப்பெரிய சரக்குக்கப்பல் ஒன்று சீனாவின் ச்சிங்தாவ் துறைமுகத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
  • சௌதி அரேபியாவில் புகழ்பெற்ற பிரம்படி தண்டனைக்கு முற்றுப்புள்ளை வைப்பதற்கான அறிவிப்பை சௌதி உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இனி பிரம்படிக்குப் பதிலாக, அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது சிறைக்குச் செல்ல வேண்டியல்லாத சமுதாய சேவைகள் போன்றவற்றைத் தண்டனைகளாக நீதிபதிகள் விதிப்பார்கள்.
  • அமெரிக்காவின் கலை அறிவியல் அகாதெமியில் இந்திய-அமெரிக்கரான ரேணு கத்தோா் (61) சோ்க்கப்பட்டுள்ளாா்.  கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் முக்கியப் பங்களித்த நபா்கள் அமெரிக்க கலை அறிவியல் அகாதெமியில் இணைக்கப்படுவா். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், புலிட்ஸா் விருது வென்றோா் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோா் அந்த அகாதெமியில் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனா்.
  • ”டிஜிட்டல் கரன்சி எலக்ட்ரானிக் பேமெண்ட் (DC/EP) ” என்ற பெயரில் சீனா யென் பணத்தின் டிஜிட்டல் வெர்ஷனை சீனா நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.   ஒரு நாட்டு வங்கியே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இந்த டிஜிட்டல் கரன்சி என்பது பயனர்களின்  வங்கி கணக்கில் சேர்க்கப்படாது. அதற்கு பதிலாக இந்த டிஜிட்டல் கரன்சிக்கு என்று தனியாக வேலட் ஒன்று அளிக்கப்படும். அதில் இந்த பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
  • “நூர் செயற்கைக்கோள்” என்ற பெயரில் ஈரான் நாட்டின் முதல் ராணுவ செயற்கைக்கோளை  இரண்டடுக்கு காசெத் கலம் மூலம் ஏவி,  வெற்றிகரமாக விண்வெளி சுற்றுப்பாதையில் ஈரான்  நிலைநிறுத்தியுள்ளது.

பொருளாதாரம்

  • வங்கி சேவைகளை அக்டோபர் 2021 வரையில்  ‘பொது பயன்பாட்டு சேவைகளாக’ (Public Utility Services)   தொழிற்சாலைகள்  தர்க்க சட்டம் 1947 (Industrial Disputes act, 1947) கீழ்  மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • சர்வதேச நிதி சேவைகள் அனைத்தையும்  ஒழுங்குமுறைப் படுத்துவதற்காக  “சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையம்” (International Financial Services Centres Authority(IFSCA)) எனும் புதிய அமைப்பை மத்திய அரசு 27-4-2020 அன்று உருவாக்கியுள்ளது. இவ்வமைப்பின் தலைமையிடம் குஜராத் மாநிலம் காந்திநகரில் அமையவுள்ளது.
  • ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) நிறுவனத்தின் 9.99 % பங்குகளை  ஃபேஷ்புக் (Facebook)  நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
  • கோவாவின் மிகப் பழமையான வங்கியான மாபூஷா நகர்புற கூட்டுறவு வங்கியின் (Mapusa urban co-operative bank of Goa Ltd) உரிமத்தை ரிசர்வ் வங்கி  16-4-2020 அன்று இரத்து செய்துள்ளது.
  • சுட்டுரையில் அதிக நபா்களால் பின்தொடரப்படும் மத்திய வங்கியாக, இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 7.45 லட்சம் போ் சுட்டுரையில் ரிசா்வ் வங்கியை பின்தொடா்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆா்பிஐ-க்கு அடுத்தபடியாக, இந்தோனேசியாவின் ’பேங்க் இந்தோனேசியா’ 2-ஆவது இடத்திலும், மெக்ஸிகோவின் ’ பேங்கோ டி மெக்ஸிகோ’ 3-ஆவது இடத்திலும் உள்ளன.

முக்கிய தினங்கள்

  • உலக நோய்த்தடுப்பு வாரம் (World Immunization Week)   -  ஏப்ரல் கடைசி வாரம் | மையக்கருத்து 2020-  அனைவரிலும் செயல்படும் தடுப்பூசிகள்  (Vaccines work for All)
  • சர்வதேச நடன தினம் (International Dance Day) - ஏப்ரல் 29   
  • பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான உலக தினம் (World Day For Safety And Health At Work 2020) - ஏப்ரல் 28
  • உலக மிருகங்களுக்கான மருத்துவ தினம் (World Veterinary Day) - ஏப்ரல் 25
  • உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day) - ஏப்ரல் 23
    • உலக புத்தக தலைநகரம் 2020 (World Book Capital 2020) - கோலாலம்பூர், மலேசியா
    • உலக புத்தக தினமான ஏப்ரல் 23 ஐ முன்னிட்டு #எனது புத்தகம், எனது நண்பன் (#MyBookMyFriendcampaign) என்ற பரப்புரையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • உலக அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) - ஏப்ரல் 26  | மையக்கருத்து  2020 - பசுமை எதிர்காலத்திற்காக கண்டுபிடியுங்கள் (“Innovate for a Green Future”)
  • உலக பெங்குயின்கள் தினம் (World Penguin Day ) - ஏப்ரல் 25
  • உலக மலேரியா தினம் (World Malaria Day) - ஏப்ரல் 25
  • முதலாவது ஐ.நா. சர்வதேச பிரதிநிதிகள் தினம் (International Delegate’s Day) - ஏப்ரல் 25
  • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (National Panchayati Raj Day) - ஏப்ரல் 24
  • உலக சோதனைக் கூட விலங்குகள் தினம் (World day of laboratory animals) - ஏப்ரல் 24
  • உலக நோய்த்தடுப்பு வாரம் 2020 (World Immunization Week 2020)  - ஏப்ரல் 24-30
  • சர்வதேச தகவல் தொழில்நுட்பத்தில் பெண்குழந்தைகள் தினம் (International Girls in ICT day)   -  ஏப்ரல் 23
  • தேசிய தீயணைப்பு சேவைகள் தினம்  (National Fire Service Day )   - ஏப்ரல் 14
  • ஐக்கிய நாடுகளவை ஆங்கில மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் தினம்  - ஏப்ரல் 23
  • புவி தினம் (Earth Day) - ஏப்ரல் 22 | மையக்கருத்து 2020- ‘பருவநிலை செயல்பாடு’ (“Climate Action”)
  • உலக படைப்பாற்றல் மற்றும் கண்டு பிடிப்பு தினம் (World Creativity and Innovation Day)   - ஏப்ரல் 21
  • தேசிய குடிமைப் பணிகள் தினம் (National Civil Service Day) - ஏப்ரல் 21

விருதுகள்

நியமனங்கள்

  • பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் (Public Enterprises Selection Board(PESB) ) தலைவராக ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய கப்பல் போக்குவரத்து வாரியத்தின் (National Shipping Board (NSB)) தலைவராக மாலினி சங்கர் (Malini Shankar.) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (International Motorcycle Manufacturers Association (IMMA)) தலைவராக  இந்தியாவைச் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராகேஷ் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஊழல் கண்காணிப்பு ஆணையராக (vigilance commissioner) , பிரபல வங்கி அதிகாரி சுரேஷ் என்.படேல் (Suresh N Patel) 29-4-2020 அன்று பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு, தில்லியில் இருந்து காணொலி வழியாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவா் சஞ்சய் கோத்தாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
  • ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த டி.எஸ். திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஒடிஸா உயா்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் மற்றும் மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஸ்வநாத் சோமாதர் ஆகியோர்   27-4-2020 அன்று  பதவியேற்றுக் கொண்டனா்.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி 25-5-2020 அன்று பதவியேற்றுக் கொண்டார்.

அறிவியல் தொழில்நுட்பம்

  • ”HCARD” (Hospital Care Assistive Robotic Device) என்ற பெயரில் கோவிட்-19 சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு உதவிடும் ரோபோவை   துர்க்காப்பூரிலுள்ள சி.எஸ்.ஐ.ஆர். (CSIR-Council of Scientific & Industrial Research)   ஆய்வகம் உருவாக்கியுள்ளது.
  • ”ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலம் கொண்டு இயங்கும் பேருந்துகளை’ (Hydrogen Fuel Cell based buses) தேசிய தெர்மல் பவர் கார்பரேசன் (National Thermal Power Corporation)  தயாரித்துள்ளது.
  • ”எக்ஸ்-ரே ஸ்கேன்” (X-ray scan) மூலமாக ஐந்து நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கான  மென்பொருளை   ரூர்கே ஐ.ஐ.டி.   பேராசிரியர்    கமல் ஜெயின் (Kamal Jain) என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
  • "ரூதார்” (Rudhaar) என்ற பெயரில் குறைந்த விலை வெண்டிலேட்டரை மும்பை ஐ.ஐ.டி, தேசிய தொழில்நுட்ப நிறுவனம், ஸ்ரீநகர், இஸ்லாமிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து    உருவாக்கியுள்ளனர். 
  • ”வார்ட் பாட்” ( ‘WardBot’ ) என்ற பெயரில் கோவிட்-19 நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வழங்குவதற்கான ரோபோவை  ஐ.ஐ.டி ரோபாரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • ”ஃபெலூடா” ( ”Feluda” ) என்ற பெயரில் குறைந்த விலை கொரானா வைரஸ் சோதனைக் கருவியை  CSIR-IGIB ( Genomics and Integrative Biology, The Council of Scientific and Industrial Research)  அமைப்பு  உருவாக்கியுள்ளது.
  • “ஃபக் ஸ்னிப்பர்” ( “bug sniffer” ) என்ற பெயரில் பாக்டீரியா நோய்க்கிருமிகளை  30 நிமிடத்தில் கண்டுபிடிப்பதற்கான கருவியை  மகாராஷ்டிர மாநிலம் பூனேவைச் சேர்ந்த ஆகாகர் ஆராய்ச்சி நிறுவனம் (Agharkar Research Institute (ARI) உருவாக்கியுள்ளது.
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சாா்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த "இன்ஜெனியூயிட்டி" என்ற  பெயா் சூட்டப்பட்டுள்ளது.
  • “ருஹ்தார்” (RUHDAAR) என்ற குறைந்த செலவிலான, உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படக்கூடிய செயற்கை சுவாசக் கருவியை  இந்தியத் தொழில்நுட்பக்கழகம் (IIT), மும்பை; தேசிய தொழிநுட்பக்கழகம் (NIT), ஸ்ரீநகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இஸ்லாமிக் பல்கலைக்கழகம், அவந்திபுரா, புல்வாமா, ஜம்மு காஷ்மீர் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பொறியியல் மாணவர் குழு கண்டுபிடித்துள்ளது.
  • மொபைல் வைராலஜி ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகத்தை (Mobile Virology Research and Diagnostics Laboratory (MVRDL)) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் 23-4-2020 அன்று  திறந்து வைத்தார்.  இதனை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழக மருத்துவமனை (ESIC) மற்றும் ஹைதராபாத் தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளன.  

விளையாட்டு

  • பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மால் (Umar Akmal) மேட்ச் பிக்சிங் குற்றசாட்டுகளுக்காக  அடுத்த மூன்றாண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
  • உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின்(Badminton World Federation (BWF)) “I am Badminton” என்ற பரப்புரைக்கான நல்லெண்ணத் தூதுவராக இந்தியாவைச் சேர்ந்த  உலக பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து  22-4-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ’பிளிட்ஸ் கோப்பை 2020’ ( Blitz Cup 2020 ) செஸ் போட்டியில் ஈரானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ‘அலிரேஷா ஃபிரோஷ்ஜா’ (Alireza Firouzja)  தற்போதைய உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த  ஸ்வன் மாக்னஸ் கார்ல்சனை (Sven Magnus Oen Carlsen) தோற்கடித்துள்ளார்.
  • அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கர்நாடக முன்னாள் வீரர் ஜே. அருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தகங்கள்

  • ” Sayajirao Gaekwad III: The Maharaja of Baroda” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - உமா பாலசுப்ரமணியம்   
  • “Midnight in Chernobyl: The Untold Story of the World’s Greatest Nuclear Disaster” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஆடம் ஹிக்கின்பாதம்ஸ் (Adam Higginbotham)
Share:

Current Affairs for TNPSC Exams 13-21 April 2020

Current Affairs for TNPSC Exams 13-21 April 2020
தமிழ்நாடு
  • நீதியரசர் பொன்.கலையரசன் குழு :  தமிழகத்தில், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை, நீதித்துறை செயலாளர்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.ஜோதி முருகன், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் ஜி.பழனிசாமி ஆகியோர் உறுப்பினராகவும், மருத்துவக்கல்வி இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும் உள்ளனர்.
  • 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • டாடா நிறுவனம், கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதற்காக, சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பி.சி.ஆர். கிட் கருவிகளை தமிழக அரசுக்கு அளித்துள்ளது.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக கா.பாலச்சந்திரன் 13-4-2020 அன்று பொறுப்பேற்றாா்.
இந்தியா
  • இந்தியாவின் முதல் கோவிட்-19 இல்லா மாநிலமாக  கோவா மாநிலம் 21-4-2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ளதுமணிப்பூர் மாநிலம் இரண்டாவது கோவிட் -19 இல்லா மாநிலமாகியுள்ளது.
  • கோவிட்-19 நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்காக மத்திய அரசு உயர்மட்ட குழுவை  வினோத் பால் மற்றும் விஜய் ராகவன் ஆகியோர் தலைமையில் அமைத்துள்ளது.
  • ”சித்ரா ஜென்லாம்ப் - என்” (“Chitra GeneLAMP-N”) என்ற பெயரில், குறைந்த விலை கோவிட்-19 துரித பரிசோதனைக் கருவியை  கேரளாவிலுள்ள  ஸ்ரீ சித்திரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
  • உலகளவில் உற்பத்தியாகும் மொத்த ‘ஹைட்ரோகுளோரோகுயின்’ (Hydroxychloroquine (HCQ)) மருந்துகளில் 70 %  இந்தியாவில் உற்பத்தியாகிறது.
  • இந்தியாவின் முதல் விலங்குகளுக்கான கோவிட்-19 தனிமைப்படுத்துதல் மையம் உத்தரக்காண்டிலுள்ள ஜிம் கார்பட் தேசிய பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • ”செரோபஸ்” (Pteropus (Indian Flying Fox)) மற்றும் “ரோசட்டஸ்” (Rousettus (old world fruit bats)) எனும் இரண்டு இந்திய வெளவ்வால் இனங்களில் ’வெளவ்வால் கொரானா வைரஸ்’ தாக்கி உள்ளதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுண்சில்,  தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம், பூனே (National Institute of Virology (NIV), Pune) ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன்   15-4-2020 அன்று கண்டறிந்துள்ளது.
  • 'கிசான் ரத்' (‘Kisan Rath’) செயலி : ஊரடங்கின் போது, உணவு தானியங்கள், அழுகக்கூடிய பொருள்களை விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை  ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவியாக 'கிசான் ரத்' எனும் அலைபேசி செயலியை மத்திய அரசு  17-4-2020 அன்று அறிமுகம் செய்துள்ளது.
    • தேசிய தகவலியல் மையம் உருவாக்கியுள்ள இந்தச் செயலி, விவசாய மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை போக்குவரத்து வாகனங்களைத் தேடும் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்குப் பெரிதும் பயன்படும். விளை நிலங்களில் இருந்து மண்டிகள், விவசாய உற்பத்தி அமைப்பின் சேகரிப்பு மையங்கள், உணவுக் கிடங்குகளுக்கு பொருள்களைக் கொண்டு செல்வது உள்ளிட்டவை முதல்நிலை போக்குவரத்தாகும். மண்டிகளில் இருந்து பொருள்களை மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலான மண்டிகள், பதப்படுத்தும் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், மொத்த விற்பனையாளர்களுக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை இரண்டாம் நிலை போக்குவரத்தாகும்.
  • “தேக்கோ அப்னா தேஷ்” (பாருங்கள் நம் தேசத்தை) (‘Dekho Apna Desh’) என்ற இணையதள தொடர் மூலமாக உலக பாரம்பரிய தினம் (World Heritage Day 2020) 18 ஏப்ரல் 2020 அன்று மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது.
    • கூ.தக. : ஏப்ரல் 18 அன்று கொண்டாடப்பட்ட 2020 ஆம் ஆண்டின் உலகப் பாரம்பரிய தினத்தின் மையக்கருத்து  -  பகிர்ந்தளிக்கப்பட்ட கலாச்சாரம், பகிர்ந்தளிக்கப்பட்ட பாரம்பரியம் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட  பொறுப்புணர்வு ("Shared Culture’, ‘Shared heritage’ and ‘Shared responsibility") என்பதாகும்.
  • எரிசக்தி அமைச்சகம் வகுத்துள்ள வரைவு மின்சாரச் சட்ட (திருத்த) மசோதா 2020 (Electricity Act(Amendment) Bill 2020) க்கு ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.
  • 2020-2021 சாகுபடி ஆண்டில் 30 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சம்பா பருவத்தில் 15 கோடி டன் உணவு தானியமும், குறுவை பருவத்தில் 14 கோடியே 84 லட்சம் உணவு தானியமும் என மொத்தம் சுமார் 30 கோடி டன் உணவு தானிய உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • டைம்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை (ரேங்கிங்) நடைமுறையில் இந்த ஆண்டு பங்கேற்கப்போவதில்லை என இந்தியாவின் முன்னணி ஐஐடிகளான மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி, கான்பூா் ஐஐடி, காரக்பூா் ஐஐடி, சென்னை ஐஐடி, ரூா்கி ஐஐடி ஆகியவை பங்கேற்கப்போவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    • டைம்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை நடைமுறைகளுக்கான அளவீடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை அளித்து, நடைமுறையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்தால் மட்டுமே, அடுத்த ஆண்டு (2021) டைம்ஸ் தரவரிசையில் பங்கேற்பது குறித்து ஐஐடிக்கள் மறுபரிசீலனை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஊரடங்கின்போது மக்கள் பிரச்சினை தீர்க்க மாவட்டங்களில் அவசர கால செயல்பாட்டு மையங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. 1930 மற்றும் 1944 என்னும் ஹெல்ப் லைன் சேவைகள், மக்களின் குறைகளை தீர்த்து வருகின்றன.112 மொபைல் செயலி, இந்த ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணிகளுக்கும், முதியவர்களுக்கும் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

வெளிநாட்டு உறவுகள்
  • ‘கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் ஸ்விட்சா்லாந்தின் மேட்டா்ஹாா்ன் மற்றும் ஆல்ப்ஸ் மலை உச்சியில் 1,000 மீட்டா் அளவுக்குப் பெரிதாக இந்திய மூவா்ணக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது.
  • இந்தியாவுக்கு சுமாா் ரூ.1,180 கோடி மதிப்பிலான ஹா்பூன் ரக கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகள், நீா்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய மாா்க் 54 ரக வெடிகுண்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
பொருளாதாரம்
  • கோவிட்-19 தடுப்பு மற்றும் நிவாரணத் திட்டங்களுக்காக இந்தியாவிற்கு 1 பில்லியல் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதாக பிரிக்ஸ் அமைப்பின்  புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank of the BRICS) அறிவித்துள்ளது.
    • கூ.தக. : ஜீலை 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கியின் தலைமையிடம்  சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது.  இதன் தற்போதைய தலைவராக  இந்தியாவைச் சேர்ந்த   V.  காமாத் உள்ளார்.
  • ரிசர்வ் வங்கி ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை 4% லிருந்து 75% ஆக குறைத்துள்ளது.
    • கூ.தக. : ஆர்பிஐ மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பது  ரெப்போ ரேட் எனவும், அதே போல் மற்ற வங்கிகள் ஆர்பிஐக்கு கடன் கொடுப்பதன் மீதான வட்டி வீதம் ரிவர்ஸ் ரிப்போ ரேட் எனவும் அழைக்கப்படுகிறது.  
    • இப்போது ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி குறைத்து இருப்பதால், வங்கிகள், ஆர்பிஐ இடம் பணத்தை போட்டு வைப்பதற்கு பதிலாக, பொதுமக்களுக்கு கடன் கொடுக்கத் தொடங்குவார்கள்.
உலகம்
  • கொரோனாவால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு கோரி ஜெர்மனி நாடு, 149 பில்லியன் யூரோக்கள் ( 162 பில்லியன் டாலர் )இழப்பீடு கேட்டு  சீனாவிடம் பட்டியல் அனுப்பியுள்ளது.  
  • அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
  • சர்வதேச அரபு புனைவு பரிசு 2020 ( International Arab fiction prize 2020) அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்தலோஹாப் ஐஷாஷி ( Abdelouahab Aissaoui) எழுதிய   ’தி ஸ்பார்டன் கோர்ட்’ (‘The Spartan Court’) எனும் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 122 ஆண்டு பழமையான ‘நார்டன் மோட்டார்சைக்கிள்’ ( Norton motorcycles )  நிறுவனத்தை  சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட  இந்தியாவின்  டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் ரூ.153 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.
  • ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்திய பிரேசில் சுகாதாரத்துறை மந்திரியை அதிபர் போல்சனாரோ பதவி நீக்கம் செய்துள்ளார்.
  • உலக சுகாதார அமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி சீரமைப்பு செய்யவேண்டும் என ஜி-7 நாடுகளின் தலைவர்களின் வீடியோ கான்ஃபரன்சிங் கூடுகையில் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
    • கூ.தக. : அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • 46 வது ஜி-7 நாடுகளின் கூடுகை 10-12 ஜீன் 2020 தினங்களில் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
  • வரும் 2025ம் ஆண்டில் மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது என்று ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
  • தென்கொரியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் மூன் ஜே இன்னின் ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
  • உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
விளையாட்டு
  • சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை 2020 (ITTF (International Table Tennis Federation) World Ranking 2020) ல் உலகளவில் 31 வது இடத்தைப் பெற்று  அச்சாந்தா சரத் கமல் ( Achanta Sharath Kamal) இந்திய வீரர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
முக்கிய நியமனங்கள்
  • உலக வனவிலங்குகள் நிதியத்தின் (World Wildlife Fund (WWF)) இந்தியாவிற்கான சுற்றுசூழல் கல்வி திட்டத்தின் ( India’s environment education programme)  நல்லெண்ண தூதராக உலக செஷ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் புதிய செயலராக கபில்தேவ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ’சர்வதேச நாணய நிதியத்தின்’ (International Monetary Fund (IMF)) வெளி ஆலோசனைக் குழுவின் (External Advisory Group) 12 உறுப்பினர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தீபாங்கா் தத்தாவையும், மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஸ்வநாத் சோமாதரையும், ஒடிஸா உயா்நீதிமன்ற நீதிபதியாக முகமது ரஃபீக்கையும் நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
முக்கிய தினங்கள்
  • ஐக்கிய நாடுகளவையின் சீன மொழி தினம் - ஏப்ரல் 20
    • கூ.தக. : ஐ.நா.வில் அராபிக், ஆங்கிலம், சீன மொழி, ரஷியன், ஸ்பானிஸ் மற்றும் பிரஞ்ச் ஆகிய ஆறு மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளன. 
  • உலக கல்லீரல் தினம் (World Liver Day ) - ஏப்ரல் 19
  • உலக ஹீமோபிலியா தினம் 2020 (World Haemophilia Day) -  ஏப்ரல் 17
  • உலக குரல் தினம் (World Voice Day) - ஏப்ரல் 16
  • உலக கலை தினம் 2020 (World Art Day 2020) - ஏப்ரல் 15
  • முதலாவது, சர்வதேச கணித தினம் (International Mathematics Day) - மார்ச் 14
  • மனிதன் விண்வெளிக்கு சென்றதற்கான சர்வதேச நினைவு தினம் (International Day of Human Space Flight)  - ஏப்ரல் 12  (1961 ஏப்ரல் 12 அன்று  ரஷியாவின்    யூரி காகரின்  ‘வோஷ்டாக் 1’ (Vostok 1) விண்கலத்தின் மூலம் முதல் முறையாக பூமியின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தார்)
  • தேசிய செல்ல பிராணிகள் தினம் (National Pet Day ) - ஏப்ரல் 11
  • தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் (National Safe Motherhood Day) - ஏப்ரல் 11
புத்தகங்கள்
  • “How the Onion Got Its Layers” என்ற புத்தகத்தின் ஆசிரியர்  - சுதா மூர்த்தி
  • ‘Shuttling to the Top: The Story of P V Sindhu’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - V.கிருஷ்ணஸ்வாமி 
Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language