Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Tamil Current Affairs Online Test 13-14 July 2020


தமிழ்நாடு

  • பாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் 12-7-2020 அன்று காலமானார். இவர் 1905 ஆம் ஆண்டில் ‘இந்தியா’ ப்த்திரிக்கையில் பாரதியார் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ’பாரதி தரிசனம்’ என்ற நூலை 2 பாகங்களாக வெளியிட்டுள்ளார். இதேபோல் பாரதியும் மத நல்லிணக்கமும், பாரதியும் சோசலிசமும், பாரதியும் ரஷ்யப் புரட்சியும், ஊணர் செய்த சதி (பாரதி வாழ்வில் நடந்த சம்பவம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில், தினமணி நாளிதழின் ‘பாரதி விருது’ ஆளுநர் பன்வாரிலால் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்தியா

  • ”சுத்” (“Shudh”) என்ற பெயரில் அறை முழுவதையும் புற ஊதாக் கதிர்களைக் கொண்டு சுத்திகரிக்கும் இயந்திரத்தை ஐ.ஐ.டி.கான்பூர் உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் 10*10 சதுர அடி அறையை 15 நிமிடங்களில் சுத்திகரிக்க முடியும்.
  • இந்தியாவை மின்னணுமயமாக்குவதற்காக செயல்படுத்தப்படவுள்ள திட்டத்துக்காக இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடியை கூகுள் முதலீடு செய்யவுள்ளதாக, கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். 13-07-2020 அன்று இணையவழியில் நடைபெற்ற “கூகுள் ஃபார் இந்தியா” நிகழ்வின் போது பிரதமர் மோடி அவர்களுடனான உரையாடலைத் தொடர்ந்து சுந்தர் பிச்சை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

  • 2019-2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவுடனான வர்த்தகம் செய்த நாடுகளில் முதலிடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • உலகின் முதல் கோவிட் - 19 தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி : கொரோ‌னா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யாவின் செசோனோவ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்துள்ளது.
  • போலந்து நாட்டின் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஆண்ட்ரெஜ் டூடா ( Andrzej Duda ) மறுபடியும் வெற்றி பெற்றுள்ளார்.

விருதுகள்

  • சர்வதேச விண்வெளிப் பயணவியல் அகதமியின் (International Academy of Astronautics(IAA) ) மிக உயரிய விருதான “வான் கர்மான் விருது 2020” ( Von Karman Award 2020) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்த்தின் ( Indian Space Research Organisation(ISRO)) தலைவர் K சிவன் (Dr. Kailasavadivoo Sivan) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூ.தக. : தியோடர் வான் கர்மான் (Theodore Von Karman) என்பவரால் தொடங்கப்பட்ட சர்வதேச விண்வெளிப் பயணவியல் அகதமியின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது.
  • 10வது ’தாதா சாகேப் பால்கே திரைப்பட விருதுகள் 2020’ (Dada Saheb Phalke Film Festival Awards) ல் சிறந்த ஆவணப் படத்திற்கான விருது, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த கேசங் டி தோங்டோக் (kezang D THongdok) என்பவர் தயாரித்த ”Chi Lupo” என்ற பெயரிலான தேன் வேட்டை பற்றிய ஆவணப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • இரண்டாவது தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான வாரம் 2020(Counter-Terrorism Week) - ஜிலை 6-10, 2020 | மையக்கருத்து 2020 - உலகளாவிய தொற்று சூழலில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான போர்த்திறஞ்சார்ந்த மற்றும் நடைமுறை சவால்கள்(Strategic and Practical Challenges of Countering Terrorism in a Global Pandemic Environment)
  • ஐ.நா. சர்வதேச ”மலாலா தினம்” (International Malala Day) - ஜீலை 12 (பெண் குழந்தைகள் கல்விக்காக போராடி வரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசாஃப்சாய்(Malala Yousafza) பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை, ஆரோக்கிய அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐ.ஐ.டி. உயிரிதொழில்நுட்பத்துறையைச் சோ்ந்த பேராசிரியா் ரமா சங்கா் வா்மா தலைமையிலான குழுவினா் கண்டுபிடித்துள்ளனா். மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ”குா்குமின்” ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • கூகுள் கரண்ட்ஸ் (Google Currents) என்ற பெயரில் கூகுள் பிளஸ் (Google plus) இன் புதுப்பித்த பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    • கூ.தக. : கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் (Google plus) சமூக வலைத்தள செவை கடந்த ஏப்ரல் 2019 ல் அந்நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘A Song of India’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond)
Share:

பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!

தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார் பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை.
இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது

சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

சார்பதிவாளர்கள் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.. அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் இனி தேவையில்லை என்றார்.
Share:

Current Affairs for TNPSC Exams 11-12 July 2020

தமிழ்நாடு

  • தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ (‘Paul Harris Fellow’) என்ற கவுரவத்தை வழங்கி அமெரிக்காவின் சிகாகோ நகரின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சிறப்பித்துள்ளது.

இந்தியா

  • இந்தியாவின் முதல் மாநில அளவிலான ‘இ-லோக் அதாலத்’ (E-Lok Adalat’) சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தினால் 11-07-2020 அன்று நடத்தப்பட்டது. இதனை சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசந்திர மேனன் தொடங்கி வைத்தார்.
  • கேமிரா மூலம் நடத்தப்படும், உலகின் மிகப் பெரிய வனவிலங்கு கணக்கெடுப்பாக, அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018 கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்குப்படி, உலகளவில் 75% புலிகள் இந்தியாவி்ல்தான் உள்ளன. புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்கும் தீர்மானத்தையும், இந்தியா ஏற்கனவே நிறைவேற்றிவிட்டது.

வெளிநாட்டு உறவுகள்

  • 2019 - 2020 ஆம் நிதியாண்டில் இங்கிலாந்து நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான நேரடி வெளிநாட்டு முதலீடு (Foreign Direct Investment (FDI)) செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும் 2,3,4 மற்றும் ஐந்தாம் இடங்களை முறையே ஜெர்மனி , பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகளும் உள்ளன.

சர்வதேச நிகழ்வுகள்

  • கோவிட்-19 நோய்ப் பரவலினால் உலகளவில் ஏற்பட்டுள்ள தயார் நிலை மற்றும் எதிர்கொள்ளல் குறித்து ஆராய்வதற்காக ஹெலன் எலிசபத் கிளார்க் (Helen Elizabeth Clark) (முன்னாள் நியூசிலாந்து பிரதமர்) மற்றும் எல்லன் ஜான்சன் சிர்லீஃப் (Ellen Johnson Sirleaf) (முன்னாள் லிபேரியா அதிபர்) தலைமையிலான குழுவை ( (Independent Panel for Pandemic Preparedness and Response (IPPR)) ) உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) 9-7-2020 அன்று அமைத்துள்ளது.
  • சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் லீயின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
    • 1965-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி புரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது .

பொருளாதாரம்

  • ”பரஸ்பர நிதி” (மியூச்சுவல் பண்ட் / mutual fund) நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான 20 நபர் குழுவை உஷா தோரத் ( Usha Thorat ) தலைமையில் செபி ( Securities and Exchange Board of India (SEBI) ) அமைப்பு அமைத்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

  • தேசிய மீன் பண்ணையாளர்கள் தினம் (National Fish Farmers Day) - ஜீலை 10
    • கூ.தக . : 2019 ஆம் ஆண்டின் ஐ.நா. வின் வேளாண் மற்றும் உணவு அமைப்பின் GLOBEFISH அறிக்கையின் படி, உலகளவில் மீன்வளர்ப்பு சார் தயாரிப்புகளில் இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளது.
  • உலக மக்கள் தொகை தினம் (World Population Day) - ஜீலை 11 | மையக்கருத்து 2020 - வீட்டில் அமைதி : கோவிட்-19 காலக்கட்டத்தில் , பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்போம். (Peace in the Home: Safeguarding the Health and Rights of Women and Girls- Even During COVID-19)

விளையாட்டுகள்

  • ஹாக்கி இந்தியா (Hockey India(HI)) அமைப்பின் தலைவராக மணிப்பூரைச் சேர்ந்த ஞானேந்திர நிங்கோம்பாம் (Gyanendro Ningombam) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் 2022 வரையில் இந்த பதவியை வகிப்பார்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘His Holiness the Fourteenth Dalai Lama: An Illustrated Biography’ என்ற பெயரில் 14 வது தலாய் லாமாவின் வாழ்க்கை வரலாற்றை டென்சிங் கெய்செ டெதோங் (Tenzin Geyche Tethong) என்பவர் எழுதியுள்ளார்.
Share:

TNPSC Current Affairs 9-10 July 2020

தமிழ்நாடு

  • ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாசலத்தை தலைவராகக் கொண்டு தமிழக பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் செயல்பாட்டுக் காலம் 2018-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த நிலையில், புதிய உறுப்பினா்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆணையத்தின் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டி.பிச்சாண்டி, டி.என்.ராமநாதன், வி.சந்திரசேகரன் ஆகியோா் உள்பட ஆறு போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அலுவல் சாரா உறுப்பினா்களாக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை இயக்குநா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறை இயக்குநரும் இருப்பாா்கள்.மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் ஆகிய பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த ஆணையம் பரிசீலிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஆணையம் செயல்பாட்டில் இருக்கும்.
  • தமிழ்நாடு ஹஜ் குழு தலைவராக கோவை அப்துல் ஜப்பாரை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் 7-7-2020 அன்று மேலும் ஒரு குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொந்தகை அகழாய்வில் தொடர்ந்து மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருவதால் இந்த இடம் பழங்காலத்தில் ஈமக்காடாக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
  • இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதுமக்கள் தாழிகள், இரும்புத் தாதுக்கள், பழைமையான ஓடுகள், கற்காலக் கருவிகள், வளையங்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன. 

இந்தியா

  • "வேளாண் உட்கட்டமைப்பு நிதியம்” (Agriculture Infrastructure Fund) எனப்படும் நாடு தழுவிய திட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவை 8-7-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 
    • இந்த திட்டமானது, மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும் சுயசார்பு இந்தியா தொகுப்பின் (AtmaNirbhar Bharat package) ஒரு பகுதியாக நிறைவேற்றப்படவுள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், விவசாய கடன்  சங்கங்கள் (Primary Agricultural Credit Societies (PACS)),  சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்கள் (Marketing Cooperative Societies), விவசாய தயாரிப்பு நிறுவனங்கள் (Farmer Producers Organizations (FPOs)), சுய உதவி குழுக்கள் (Self Help Group (SHG)), விவசாயிகள் (Farmers), பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் (Multipurpose Cooperative Societies),  வேளாண் தொழில்முனைவோர்,வேளாண் உட்கட்டமைப்பு வழங்குநர்கள் ( Aggregation Infrastructure Providers), மத்திய / மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் அரசு - தனியார் இணைந்து செயல்படுத்தும்  திட்டங்கள் ( Central/State agency or Local Body sponsored Public Private Partnership Project) ஆகியவற்றிற்கு  மொத்தம் 1 இலட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.
    • இந்த வேளாண் உள்கட்டமைப்பு நிதிய திட்டத்தின் காலம் 10 ஆண்டுகளுக்கு- 2020-21 நிதியாண்டு முதல் 2029-30 நிதியாண்டு வரையாகும்.
    • இந்த திட்டத்தின் கீழ் ரூ .1 லட்சம் கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும், இதில் நடப்பு 2020-21 நிதியாண்டில் ரூ .10,000 கோடி, அடுத்த மூன்று நிதியாண்டில் ரூ .30,000 கோடி அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும்.
    • திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு மானிய வட்டி விகிதம் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 3 சதவீதமாக இருக்கும். ஆண்டுக்கு 3 சதவீதம். 3 சதவீத வட்டி விகிதம் ரூ .2 கோடி வரை கடனுக்கு பொருந்தும்.
  • இந்தியாவின் முதல் மாநிலமாக, அரசுக்கு சொந்தமான நிலங்களை விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களின் உதவியுடன் கண்காணிக்கும் ”Bhubaneswar Land Use Intelligence System (BLUIS)” எனும் முன்னோடி திட்டத்தை ஒடிஷா மாநில அரசு 8-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • இ-சஞ்சீவனி இணையதளம் ((eSanjeevani OPD)) பற்றி : கொரோனா ஊரடங்கில் சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல முடியாத சூழலில் மத்திய அரசின் சுகாதார, குடும்பநல துறையின் www.esanjeevaniopd.in இணையதளம், செயலி வழி, ஆன்லைனில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி மருந்து சீட்டும் வழங்குகிறார்கள். இந்த 'இ-சஞ்சீவனி நேஷனல் டெலிகன்சல்டேஷன் சர்வீஸ்' கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.
  • ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டமான, மத்திய பிரதேசத்தின் ரீவா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி 10-7-2020 அன்று நாட்டுக்கு அா்ப்பணித்தார். இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்படும். இந்த ரீவா சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 24 சதவீதத்தை தில்லி மெட்ரோ நிறுவனம் பெறவுள்ளது. மீதமுள்ள 76 சதவீத மின்சாரமானது மத்திய பிரதேச மின் பகிா்மான நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
  • இந்தியாவிலுள்ள இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்உ தேசிய திறன் மேம்பாட்டு கழகம் ( National Skill Development Corporation (NSDC) ) மற்றும் மைக்ரோசாஃட் இந்தியா நிறுவனம் ( Microsoft India Private Limited ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கூ.தக. :
  • 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (National Skill Development Corporation (NSDC)) தலைமையிடம் புது தில்லியிலுள்ளது. இதன் தலைவராக மணிஸ் குமார் உள்ளார்.
  • Microsoft India Private Limited இன் தலைமையிடம் தெலுங்கானாவிலுள்ள ஹைதராபாத் நகரில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக ஆனந்த் மகேஸ்வரி உள்ளார்.
  • இந்தியாவின் மிகப்பெரிய “வண்ணத்துப் பூச்சி” எனும் பெயரை “கோல்டன் பேர்டுவிங்” (Golden Birdwing (Troides aeacus)) எனும் பெயருடைய இமாலயப் பகுதியிலுள்ள வண்ணத்துப்பூச்சி வகை பெற்றுள்ளது. முன்னதாக (88 ஆண்டுகளாக) இந்தியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி வகையினம் என அறியப்பட்ட ‘சதர்ன் பேர்டுவிங்’ (Southern Birdwing (Troides minos)) வகையினம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
  • ”Yotta NM1 Data Center” என்ற பெயரிலான ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தரவு மையம் (Data Center) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 7-7-2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த தரவு மையமானது மும்பையிலுள்ள பன்வல் தரவு மைய பூங்காவில் (Panvel data centre park) ஹிராநந்தனி குழுமத்தின் (Hiranandani Group ) மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
  • "பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின்" (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) மூலம் நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவையில் 8-7-2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி செலவாகும்.
  • "கோவாக்சின்" எனப்படும் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர் - மேற்கு வங்காளத்தின் துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் சிரஞ்சித் திபார் .
    • கூ.தக : ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்துடன் இணைந்து கொரோனாவிற்கு ‘கோவாக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதற்கான அடிப்படை சோதனைகள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மனிதர்களிடம் இந்தமருந்தை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதஇதற்கான பணி ஒடிசா மற்றும் ஐதராபாத் அரசு மருத்துவமனைகளில் 8-7-2020 அன்று தொடங்கியது.
  • ‘சேஷ்நாக்’ என்ற பெயரில்,இந்திய ரயில்வேத் துறை முதல் முறையாக நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயிலை நாகபுரியில் இருந்து கோா்பாவுக்கு இடையே இயக்கி புதிய சாதனை படைத்துள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் நாகபுரி கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச்செல்ல பயன்படும் சரக்குப் பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைந்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த ரயில் உருவாக்கப்பட்டது.நான்கு ஜோடி மின்சார என்ஜின்கள், 4 காா்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலி சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டன.

 வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு 15 ஜூலை 2020 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இந்த கூடுகையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஐரோப்பிய கவுண்சில் (European Council) தலைவர் சார்லஸ் மைக்கேல் (Charles Michel) மற்றும் ஐரோப்பிய கமிஷனின் (European Commission) தலைவர் உர்சுலா வோன் டெர் லேயேன் (Ursula von der Leyen) ஆகியோர் இணைந்து தலைமையேற்று நடத்தவுள்ளனர். 

சர்வதேச நிகழ்வுகள்

  • ’ஆபரேஷன் நரி வேட்டை’ என்ற பெயரிலான இரகசிய உளவு நடவடிக்கையின் மூலம் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து அவர்களை கட்டாயமாக நாடு திரும்புவதற்கு வலியுறுத்துவதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வசித்துவரும் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் சீனர்கள், விமர்சகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இதன் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தட்டம்மை நோயை (measles and rubella) முற்றிலுமாக ஒழித்துள்ள முதல் தென் கிழக்கு ஆசிய நாடுகளாக மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகள் உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளன. தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் தட்டம்மையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இலக்கு 2023 ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • நிலக்கரி மற்றும் அணு ஆற்றல் மூலம் மின்னாற்றல் தயாரிக்கும் ஆலைகளை முழுவதுமாக மூடுவதற்கு முடிவெடுத்துள்ள முதல் வளர்ந்த நாடு எனும் பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது. ஜெர்மனி அரசு வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரி மற்றும் அணு ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதை முற்றிலுமாக ஒழிக்க முடிவெடுத்துள்ளது.
  • கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காற்றில் மிதந்து மனிதா்களிடையே பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இருமல், தும்மல் ஆகியவற்றால் வெளிப்படும் நீா்த்துளிமங்கள் தரையில் படிந்து, அதனைத் தொடுவதால் மட்டுமே கரோனோ பரவி வருவதாக இதுவரை கூறி வந்த அந்த அமைப்பு, தற்போது முதல் முதலாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நியமனங்கள்

  • தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் ( National Company Law Appellate Tribunal(NCLAT)) பொறுப்பு தலைவராக செயல்பட்டு வரும் நீதிபதி பி.எல்.பட்டின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 'அமேசானியா-1’ (‘Amazonia-1’) என்ற பெயரிலான பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் (Indian Space Research Organisation (ISRO)) PSLV ராக்கெட்டின் மூலம் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஆகஸ்டு 2020 ல் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
  • ”APSTAR-6D” என்ற பெயரிலான வணிக ரீதியான தகவல் தொடர்பு செயற்கைக் கோளை Long March-3B ராக்கெட்டின் மூலம் சீனா 9-7-2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. 

விளையாட்டுகள்

  • கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உள்பட விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் 117 நாள் இடைவெளிக்கு பின் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தெற்கு இங்கிலாந்தின் சதாம்ப்டன் (Southampton) நகரிலுள்ள ரோஸ் பவுல் ( Rose Bowl ) எனுமிடத்தில் 8-7-2020 அன்று தொடங்கின.
  • 25 வருடங்களாக இந்தியத் தடகளத் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பகதூர் சிங், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

 புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘Mahaveer:The Soldier Who Never Died’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் - A.K. ஸ்ரீகுமார் (A.K. Srikumar), ரூபா ஸ்ரீகுமார் (Rupa Srikumar)
Share:

Current Affairs Tamil for TNPSC Exams 7-8 July 2020

தமிழ்நாடு

  • திருக்கோயில் தொலைக்காட்சி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளைப் பரப்பிட ‘திருக்கோயில்’ எனும் பெயரில் ரூ.8.77 கோடி மதிப்பில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • "அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டம்” என்ற பெயரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவா்களுக்காக சிறப்புத் திட்டம் ஒன்றை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • அத்திட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகமானது ரூ.2,500-க்கு வழங்கப்படும். அதைத் தவிர மருத்துவ ஆலோசனைகளும், செவிலியா் சேவைகளும் அளிக்கப்படும்.
    • அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தொ்மல் மீட்டா் ஆகிய உபகரணங்கள் இருக்கும். அதனுடன் 14 நாள்களுக்குத் தேவையான விட்டமின் சி, ஜிங்க், விட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், சோப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
    • இதைத் தவிர, அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டத்தில், முழு உடல் பரிசோதனை மைய அலுவலா்கள் நாள்தோறும் கரோனா நோயாளிகளுடன் விடியோ அழைப்பில் பேசுவா். மேலும், மருத்துவா்கள் மற்றும் மன நல ஆலோசகா்களும் காணொலி முறையில் அவா்களுடன் உரையாற்றி நோயாளிகளின் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பாா்கள். (நன்றி - தினமணி)
  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி 6-7-2020 அன்று புதுச்சேரியில் காலமானார்.

இந்தியா

  • உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு 2020 ல் (Global Real Estate Transparency Index (GRETI)) இந்தியா 34 வது இடத்தைப் பெற்றுள்ளது. Jones Lang LaSalle Incorporated (JLL) மற்றும் LaSalle அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பெற்றுள்ளன். இந்த பட்டியல் இரு ஆண்டுகளுக்கொருமுறை வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • ஜார்க்கண்ட் மாநிலம் ஹஷாரிபாக்கிலுள்ள கெளரியா கர்மாவில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Agricultural research Institute(IARI)) புதிய நிர்வாகக் கட்டடத்திற்கு பாரதிய ஜன் சங்க் கட்சி நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி (Dr.Shyama Prasad Mukherjee) யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது . (6-7-2020 அன்று 120 வது பிறந்த தின அனுசரிப்பின் ஒருபகுதியாக)
  • ”இன்ஃபார்ம்” (INFORM - Index For Risk Management) எனும் இடர் மேலாண்மைக்கான பட்டியலில் இந்தியா 31 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு (United Nations Office for the Coordination of Humanitarian Affairs (UN-OCHA)) அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • “நேகர் சம்மன் யோஜனா” (‘Nekar Samman Yojane’ / 'Weaver Samman Yojana') என்ற பெயரில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை கர்நாடக மாநில அரசு 6-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளது.
  • 100 சதவீத வீடுகளில் எல்.பி.ஜி வாயு இணைப்பை சாதித்துள்ள முதல் இந்திய மாநிலம் எனும் பெருமையை ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் 6-7-2020 அன்று அடைந்துள்ளது. இந்த சாதனையை எட்டுவதற்கு மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்துடன்’ (Pradhan Mantri Ujjwala Yojana) ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசின் ‘ஹிமாச்சல் சுவிதா யோஜனா’ திட்டமும் பெரும் பங்காற்றியது.
கூ.தக. : பிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம் (பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம்) பற்றி...
  • 1-5-2016 ல் மத்திய அரசினால் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள வயது வந்த பெண்களின் (adult woman) பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குடும்பங்களில் ஏற்கனவே சமையல் எரிவாயு இணைப்பு இருக்க கூடாது என்பது ஒரு முக்கியமான விதிமுறை.
  • இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு, எரிவாயு இணைப்புக்கு நிதி உதவியாக ரூபாய் 1600/- வழங்கப்படுகிறது, எண்ணெய் நிறுவனங்களால் எரிவாயு அடுப்பு மற்றும் முதல் மறு நிரப்பல் எரிவாயு உருளை ஆகியவற்றை வாங்க வட்டி இல்லாத கடன் வழங்கப்படுகிறது. முதல்முறை செலுத்தும் ரூபாய் 1600/- ல் ஒரு எரிவாயு உருளை, pressure regulator, பாதுகாப்பு குழாய் (safety hose), கையேடு ஆகியவையும் அடங்கும்.
  • இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, இத்திட்டத்தின்படி, ஐந்து கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக 8000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர், பிப்ரவரி 2018 ல் இந்த திட்டத்தின் இலக்கு 8 கோடி எரிவாயு இணைப்புகளாக திருத்தப்பட்டது.
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு, ஆன்லைன் நல்வாழ்வு மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டி (Augmented Reality ) குறித்த பயிற்சி அளிக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE) ) மற்றும் பேஸ்புக் (Facebook) இடையே 5-7-2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • கே.எஸ்.ரெட்டி குழு (Dr K S Reddy Committee) : இந்தியாவில் மனித உரிமைகளின் மீது கோவிட் - 19 நோய்ப்பரவல் சூழலின் தாக்கம் பற்றி ஆராய கே.எஸ்.ரெட்டி தலைமையில் 11 உறுப்பினர் வல்லுநர் குழுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission (NHRC) ) அமைத்துள்ளது.
  • இந்தியாவில் எம்.சி.ஏ., (Master of Computer Application -MCA) படிப்பு காலம், மூன்றாண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
  • ”நிலையான வளர்ச்சி அறிக்கை 2020” (Sustainable Development Report 2020) ல் இந்தியா 117 வது இடத்தைப் பெற்றுள்ளது. ‘ நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளும் கோவிட்-19 ம்’ ( ‘The Sustainable Development Goals and Covid-19) என்ற தலைப்பில் Cambridge University Press வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் முதல் ஐந்து இடங்களை முறையே ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ் மற்றூம் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.
  • அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • ”இந்தியா குளோபல் வீக் 2020” (India Global Week 2020) இணையவழி மாநாடு : இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் ”இந்தியா குளோபல் வீக்” என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு 9-11 ஜூலை 2020 தினங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்க உள்ளாா்.பிரிட்டனில் செயல்படும் இந்தியா- இன்க் என்ற அமைப்பு, 'இந்தியா குளோபல் வீக்' எனும் இந்த பொருளாதார மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
  • முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு 7-7-2020 அன்று நீக்கியுள்ளது. முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க செய்வற்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி மார்ச் 2020 ல் இந்த இரு பொருட்களையும் அந்த பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. 100 நாட்களுக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவித்தது. இதனால் பதுக்கலில் அவை சிக்காமல் மக்களுக்கு சென்ற சேர வழிவகுத்தது.தற்போது இப்பொருட்களின் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் அவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
  • அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ‘டேகிங் பட்காய் வனவிலங்கு சரணாலயத்தை (Dehing Patkai Wildlife Sanctuary) “தேசிய வனவிலங்கு பூங்கா” (National Park) வாக தரம் உயர்த்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவின் உதவியுடன் நேபாள நாட்டில் கட்டப்பட்ட ”ஸ்ரீ சப்த்மாய் குருகுல சமஸ்கிருத பாடசாலை” (‘Shree Saptmai Gurukul Sanskrit Vidhyalaya) 6 ஜீலை 2020 அன்று வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
  • ஆப்கானிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் 5-7-2020 அன்று கையெழுத்திட்டன.

சர்வதேச நிகழ்வுகள்

  • ‘ஒஃபேக் 16’ (Ofek 16) என்ற புதிய உளவு செயற்கைக்கோளை இஸ்ரேல்  நாடு  ஷாவிட் (Shavit rocket) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு 6-7-2020 அன்று அமெரிக்கா அனுப்பிய கடிதத்ததில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.
    • கூ.தக : 7 ஏப்ரல், 1948 ல் தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. இந்தியா உள்பட 194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ”நெக்லேரியா பவுலேரி” (Naegleria fowleri) என்ற மிக நுண்ணிய அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழையும் இந்த அமீபா மூளையில் தொற்றினை உண்டாக்கினால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பே அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • இங்கிலாந்து - இந்தியா வர்த்தக கவுண்சிலின் (UK India Business Council(UKIBC)) தலைமையேற்கும் முதலாவது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் எனும் பெருமையை ஜெயந்த் கிருஷ்ணா (Jayant Krishna) பெற்றுள்ளார். இவர் 3-8-2020 முதல் அந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்.
  • மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான வல்லுநர் குழுவின் (Central Government’s Expert Committee on Science and Technology Policy) உறுப்பினராக ‘ஸ்டார்ட் அப் வில்லேஜ்’ (Startup Village) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் ‘Re-think Foundation’ எனும் நிறுவனத்தின் நிறுவனர் சிஜோ கருவில்லா ஜார்ஜ் (Sijo Kuruvilla Georg) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக : மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான வல்லுநர் குழுவின் (Central Government’s Expert Committee on Science and Technology Policy) தலைவர் - ஹரேஷ் மிட்டல் (Harkesh Mittal )
  • புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தின் (International Financial Services Centre Authority(IFSCA)) முதல் தலைவராக இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ் (Injeti Srinivas) 6-7-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : இவ்வமைப்பின் தலைமையிடம் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக விலங்குவழிப் பரவும் நோய்கள் தினம் (”World Zoonoses Day 2020”) - ஜீலை 6
  • சரக்கு மற்றும் சேவை வரி தினம் (Goods and Service Tax(GST) day) - ஜீலை 1 (1-7-2017 முதல் ஜி.எஸ்.டி வரி முறை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ”செல்ஃப் ஸ்கேன்” (“SelfScan”) என்ற பெயரில் சீன செயலியான “கேம் ஸ்கேனருக்கு” மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் செயலியை மேற்கு வங்க மாநில அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Getting Competitive: A Practitioner’s Guide for India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - RC பார்கவா (R C Bhargava)
  • ‘Overdraft: Saving the Indian Saver’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - உர்ஜித் பட்டேல் (ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்)
Share:

TNPSC Tamil Current Affairs 5-6 July 2020

தமிழ்நாடு

  • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் (Friends of Police ) போலீஸ் என்ற தன்னார்வல அமைப்பிற்கு காவல்துறை தடை விதித்தது.
    • கூ.தக. : கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்த Friends of Police அரசுடன் இணைந்து செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். இந்த அமைப்பின் நோக்கமே போலீசாரின் அதிகாரங்களை மக்களுக்கும் பங்கிட்டு கொடுப்பது தான். 1993-ம் ஆண்டு ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்த பிரதீப் வி.பிலிப் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர், 1994ல் தமிழகம் முழுவதும் விரிவடைந்தது.
  • மதுரையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட கல்தூண் கண்டெடுக்கப்பட்டுள்ளது : மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே அமைந்துள்ள கிண்ணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏகநாதசுவாமி மடத்தில் இருந்த கல்தூண் ஒன்றில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கல்தூண் ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது எனவும், கல் தூணில் இதுபோன்ற தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுவது மிக முக்கியமான கண்டுபிடிப்பு எனவும் தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்தனர். கல்தூணில் தமிழி எழுத்து என்பது அந்த காலகட்டத்தில் தமிழர்கள் பின்பற்றிய சமயம், பண்பாடு கட்டடக்கலை ஆகியவற்றை குறிப்பிடுவதாக உள்ளது. அதுமட்டுமன்றி கல்தூணில் உள்ள தமிழி எழுத்துக்களை ஏகன் ஆதன் கோட்டம் எனவும் கூறுகின்றனர். கோட்டம் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி பிராமி வடிவில் கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
  • கீழடி அகழாய்வில் எடை கற்கள் கண்டுபிடிப்பு : சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் 6 ம் கட்ட அகழாய்வில் 4-7-2020 அன்றூ எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, வணிகத்துக்கான ஆதாரமாக கருதப்படுகிறது.

இந்தியா

  • "விரிக்‌ஷாரோபன் திட்டம்- 2020” (‘Mission Vriksharopan-2020’) என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 25 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு 5-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • உலகிலேயே மிகப் பெரிய கரோனா சிகிச்சை மையமான சா்தால் படேல் கோவிட் கோ் சென்டரை ( Sardar Patel Covid Care Centre and Hospital (SPCCCH) ) தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் 5-7-2020 அன்று திறந்து வைத்தாா்.
    • தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி - ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள தங்களது தியானக் கூடத்தை தற்காலிக கரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த தியானக் கூடம் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்ற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் 200 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 50 படுக்கைகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீா், கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரம்மாண்ட கரோனா சிகிச்சை மையத்தை இந்தோ திபேத் எல்லை போலீஸ் படை (Indo-Tibetan Border Police (ITBP) ) அமைத்துள்ளது.
  • "நிசர்கா புயல்" (Cyclonic Storm “NISARGA” ) - கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் (01 – 04 ஜுன், 2020) நிலை கொண்டு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைத் தாக்கிய புயல்.
  • இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா ஒரு தமிழர்.  இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவை இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆக., 15ல் நாட்டின் சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்யப்பட உள்ளது என, ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது.
    • இவரது பாரத் பயோடெக் நிறுவனம் தான், உலக அளவில் ஸிகா வைரசுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. (நன்றி : தினமலர்)

பொருளாதாரம்

  • உலக வங்கியின் நாடுகள் மற்றும் கடன் குழுக்களில் வகைப்பாடு 2021 ல் இந்தியாவின் நிலை (India in World Bank Country and Lending Groups 2021)
    • 1 ஜீலை 2020 அன்று உலக வங்கி வெளியிட்டுள்ள மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருவாய் அடிப்படையிலான ( GNI per capita) உலக நாடுகளின் வகைப்பாட்டு பட்டியல் 2021 ல், இந்தியா கீழ் - நடுத்தர வருவாய் பொருளாதாரமாக (LOWER-MIDDLE INCOME ECONOMY) ( $1,036 முதல் $4,045 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita ) கொண்ட நாடுகள்) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதே வகைப்பாட்டில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
    • குறிப்பிடத்தக்க மாற்றமாக , நேபாளம் குறைந்த வருவாய் பொருளாதார நாடு என்ற நிலையிலிருந்து கீழ் - நடுத்தர வருவாய் பொருளாதாரமாக மாறியுள்ளது.
    • இலங்கை உயர் நடுத்தர வருவாய் நாடு அந்தஸ்திலிருந்து கீழ் நடுத்தர வருவாய் நாடாக இறங்கியுள்ளது.
கூ.தக. : உலக வங்கி நாடுகளின் பொருளாதார வகைப்பாட்டிற்கான அளவீடு (2019 ஆம் ஆண்டின் படி)
  • குறைந்த -வருவாய் பொருளாதாரம் (low-income economies) - $1,035 டாலருக்கு குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • கீழ் - நடுத்தர -வருவாய் பொருளாதாரம் (lower middle-income economies) - $1,036 முதல் $4,045 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • உயர்-நடுத்தர - வருவாய் பொருளாதாரம் ( upper middle-income economies) -$4,046 முதல் $12,535 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • உயர்- வருவாய் பொருளாதாரம் ( upper income economies) - $12,535 டாலருக்கு அதிகமான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )

முக்கிய தினங்கள்

  • சர்வதேச கூட்டுறவு தினம் 2020 (International Day of Cooperatives) - ஜீலை 4 (ஜீலை மாதத்தின் முதல் சனிக்கிழமை) | மையக்கருத்து - பருவநிலை மாற்றத்திற்கான கூட்டுறவுகள் ( Cooperatives For Climate Action )

விளையாட்டுகள்

  • ”பிட் ஹே டு கிட் ஹே இந்தியா” (Fit Hai to Hit Hai India) என்ற பெயரில் ‘பிட் இந்தியா திட்டத்தின்’ கீழான பிரச்சாரத்தை மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜீ ஆகியோர் இணைந்து 3-7-2020 அன்று தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், இந்த நோய்த்தொற்றுப் பரவல் காலத்தில் பள்ளி மாணவர்களிடையே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முக்கியத்துவத்தை உணரச் செய்வதாகும்.
  • ”டாப்ஸ்” (Target Olympic Podium Scheme (TOPS)) என்ற பெயரில் 2024 ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெறவுள்ள மற்றும் 2028 ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்தியாவின் இளம் தடகள வீரர்களைப் பயிற்றுவிப்பதற்கான திட்டத்தை தொடங்கவுள்ளதாக மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சக இணையமைச்சர் கிரண் ரிஜீ (Kiren Rijiju) தெரிவித்துள்ளார்.
Share:

TNPSC Current Affairs Tamil 3-4 July 2020

TNPSC Current Affairs 3-4 July 2020
தமிழ்நாடு
    •  தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் புதிய தலைவராக டிஜிபி என்.தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பொதுமக்களுடன் ‘வீடியோ கால்’ மூலம் பேசி குறைகளை கேட்டறியும் புதுமையான திட்டத்தை சென்னை மாநகராட்சி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் 3-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தைப் பயன்படுத்தி, பொதுமக்கள் 6369100100 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் அடுத்து வரும் திங்கட்கிழமை அன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை கமிஷனரோடு வீடியோ காலில் பேசலாம். 
  • 159 வருடங்களில் முதல்முறையாக வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  
    • கூ.தக. : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில், 1861-ல் இந்திய போலீஸ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக,  ஒரு காவல்நிலையத்தை வருவாய்த்துறை தன் கட்டுப்பாட்டில் நீதிமன்றம் கொண்டுவந்து இதுவே முதல் முறையாகும்.
  • தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மூன்றாண்டு காலத்துக்கு, தலைவராக பணியாற்றுவார் என, கூறப்பட்டுள்ளது.இந்த கமிட்டியில், பள்ளிக் கல்வி, மெட்ரிக், தொடக்கக் கல்வி ஆகியவற்றின் இயக்குனர்கள், பொதுப்பணி துறையின் இணை தலைமை இன்ஜினியர், பள்ளி கல்வித் துறையின் இணை செயலர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வி செயலர் தீரஜ்குமார் 2-7-2020  அன்று பிறப்பித்தார்.
  • சென்னை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்திற்கு (Apollo Proton Cancer Centre (APCC)) ,  ஜே.சி.ஐ., எனப்படும், 'ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல்' (Joint Commission International (JCI)) என்ற சர்வதேச அமைப்பு, சிறப்பான செயல்பாட்டுக்கான அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறும், எட்டாவது மருத்துவமனை இது.  இந்தியாவில், இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் மருத்துவமனை என்ற, பெருமையும் கிடைத்துள்ளது.
இந்தியா
  • பதஞ்சலி நிறுவனம் தயாரித்த ”கொரோனில்” மருந்தை விற்பனை செய்வதற்கு ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.கரோனா நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்யாமல், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ரெயில்வே வாரிய (Railway Board) தலைவர்  - வி.கே.யாதவ்  (VK Yadav)
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து " BBV152" என்கிற கோவிட்-19 தடுப்பூசியை நாடு முழுவதும் உள்ள 13 மருத்துவமனைகள் நேரடியாக கொரோனா பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுத்து சோதனை செய்யப்படுகிறது . தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள SRM Medical College இதற்கான சோதனையை நடத்தவுள்ளது.
  • ”கோபால் - 19” மொபைல் செயலி (“COPAL-19”app)  கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக   பிளாஸ்மா கொடை செய்வோருக்காக (plasma donors)   ”கோபால் - 19”  என்ற பெயரில் மொபைல் செயலியை எய்ம்ஸ்  டெல்லி (AIIMS(All India Institute Of Medical Science) )மற்றும் ஐ.ஐ.டி. டெல்லி (IIT-Delhi) ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
  • 3-7-2020 அன்று லடாக்கில் இந்திய இராணுவ வீரர்களுடனான உரையின் போது, பிரதமர் மோடி அவர்கள் மேற்கோள் காட்டிய திருக்குறள்(அதிகாரம்-படைமாட்சி). 
‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு’
பொருள் :  "வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்”
சர்வதேச நிகழ்வுகள்
  •  பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஜீன் கேஸ்டெக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • கூ.தக. :பிரான்ஸ் அதிபர் - இமானுவேல் மெக்ரான்
  • ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில்  நடைபெறவுள்ள உலக உணவு கூடுகைக்கு (global food summit 2021) அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் உறுப்பினர்களாக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  உமா லெலீ (Uma Lele) மற்றும் ரத்தன் லால் (Rattan Lal) ஆகியோர் ஐ.நா. பொதுச்செயலர் அண்டானியோ குட்ரஸினால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதாரம்
  •  இந்தியாவின் வெளிக்கடன் (External debt) 2019-20 நிதியாண்டில்  முந்தைய நிதியாண்டை (2018-19) விட 2.8% அதிகரித்து 558.5 பில்லியன் டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவிலுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் ரூ.5,625 கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் கடந்த மாதம் வரை இந்தியாவுக்கு உலக வங்கி சாா்பில் ரூ.38,475 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும். கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்காக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவுக்கு ரூ.20,625 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுகள்
  •  காமன்வெல்த் சிறுகதைப் போட்டி 2020 (Commonwealth Short Story Prize) ல் முதல் பரிசை இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பாண்டே (Kritika Pandey) வின் ’தி கிரேட் இந்தியன் ட்ரீ அண்ட் ஸ்னேக்ஸ்” (“The Great Indian Tee and Snakes) எனும் சிறுகதைப் பெற்றுள்ளது.
  • ‘பிரேரக் தவுர் சம்மான்’ என்ற புதிய விருது அறிமுகம் : வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ ஒட்டி,  மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறையின் மூலம் 'ஊக்கமளிக்கும் மரியாதை' என்ற பொருள்படும் ‘பிரேரக் தவுர் சம்மான்‘   (Prerak Dauur Samman)      எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு.ஹர்தீப்சிங் பூரி அறிவித்துள்ளார்.   பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் ஆர்வத்துடன் பணியாற்றுவோர் என்ற 5 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று  நகரங்கள் அங்கீகரிக்கப்படும்.
முக்கிய தினங்கள் 
  •  உலக ஒவ்வாமை வாரம் ( World Allergy Week )  - ஜீன் 28 - ஜீலை 4
அறிவியல் & தொழில்நுட்பம்
  •  ”சுக்ரயான் - 1 திட்டம் “ (Mission Shukrayaan-1)  வெள்ளி கிரகத்தின் (Venus )  தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்கான  ”சுக்ரயான் - 1  “ எனும் திட்டத்த்தை  2023 - 2025ம் ஆண்டுவாக்கில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • ‘போபோஸ்’ ( Phobos ) என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் மர்மமான நிலவை, செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மங்கள்யான் செயற்கைகோளின்  கேமரா (Mars Colour Camera (MCC))  7200 கி.மீ மற்றும்   4200 கி.மீ. தொலைவில் 1 ஜீலை 2020 அன்று  படம் பிடித்துள்ளது.
விளையாட்டுகள்
  •  சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலின் (International Cricket Council)  தற்காலிகத் தலைவராக இம்ரான் கவாஜா தேர்வாகியுள்ளார்.  இதற்கு முன்னர் இந்த பதவியை வகித்த   சஷாங்க் மனோகர் (பதவிக்காலம் முடிவடைந்ததால் ) விலகியுள்ளதையடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
  •  “Future of Higher Education – Nine Mega Trends”  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - CA V பட்டாபி ராம் (CA V Pattabhi Ram)

Share:

TNPSC Current Affairs Tamil 1-2 July 2020

TNPSC Current Affairs 1-2  July 2020

தமிழ்நாடு

  • உலகின் முதல் ஆன்லைன் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு (world’s first online BSc Degree program in Programming and Data Science) ஐ.ஐ.டி. மெட்ராஸினால் (https://onlinedegree.iitm.ac.in/)  30 ஜீன் 2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் வீட்டு வசதியை வலுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1514 கோடியையும், வாழ்விட மேம்பாட்டுத்திட்டத்துக்கு (Tamil Nadu Housing and Habitat Development Project) ரூ 378.6 கோடியையும் உலகவங்கி கடனாகக் கொடுக்கிறது. இந்த இரு ஒப்பந்தங்களும் தில்லியில் 29-6-2020 அன்று கையெழுத்தானது.குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு மலிவான விலையில் வீடுகளை வழங்குவதை அதிகரிக்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரூ. 1,514.4 கோடி மதிப்புள்ள முதலாவது தமிழ்நாடு வீட்டுவசதி வலுப்படுத்தும் திட்டம் உதவி செய்வதாக அமையும்.
  • கொடுமணல் அகழ்வாய்வில் குஜராத் கல் பவளமணி கண்டெடுப்பு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரை கிராமமான கொடுமணலில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணியில் குஜராத் கல் பவளமணி உள்பட ஏராளமான பொருள்கள் கிடைத்துள்ளன. சில நாள்களுக்கு முன் பச்சை கற்கள், பாசி மணிகள் உள்பட பல பொருள்கள் கிடைத்தன.
  • கொரோனோவைக் கட்டுப்படுத்தும் மூலிகை மருந்து “இம்ப்ரோ” : மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். இந்த சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியா

  • ”மத்ஸ்யா சம்பதா” (‘Matsya Sampada’) என்ற பெயரில் மீன்வளத்துறை மற்றும் மீன்வளர்ப்பு துறையினால் வெளியிடப்படும் பத்திரிக்கையின் முதல் பதிப்பு 30 ஜீன் 2020 அன்று வெளியிடப்பட்டது. இந்த பத்திரிக்கையானது காலாண்டிற்கு ஒருமுறை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் (“disturbed area”) மத்திய அரசால் 30-6-2020 அன்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் (Armed Forces (Special Powers) Act, 1958) டிசம்பர் 2020 வரையில் இந்த சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • “பிரதமர் கரிப் கல்யாண் அன் யோஜனா” (Pradhan Mantri Garib Kalyan Ann Yojana (PMGKAY)) திட்டத்தை ஜீலை 2020 லிருந்து நவம்பர் 2020 வரையில் நீட்டிப்பதாக பிரதமர் மோடி அவர்கள் ஜீன் 30, 2020 அன்று அறிவித்துள்ளார். ரூ.90,000 கோடி மதிப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
கூ.தக. : கொரோனா வைரசுக்கு எதிராக ஏழைகள் போராடுவதற்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் (பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம் ) (Pradhan Mantri Garib Kalyan Yojana) கீழ் ரூ 1.70 லட்சம் கோடி நிவாரண தொகுப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 26-3-2020 அன்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக “பிரதமர் கரிப் கல்யாண் அன் யோஜனா” (Pradhan Mantri Garib Kalyan Ann Yojana (PMGKAY)) அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் அம்சங்கள் வருமாறு,
  • அடுத்த மூன்று மாதங்களுக்கு, எந்த ஒருவரும், குறிப்பாக எந்த ஏழை குடும்பமும், உணவுப் பொருள்கள் கிடைக்காமல் வாடுவதற்கு இந்திய அரசு அனுமதிக்காது.
  • 80 கோடி பேர், அதாவது இந்திய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு, இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள்.
  • தற்சமயம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை விட இரு மடங்கு பொருள்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இவர்களுக்கு அளிக்கப்படும்.
  • இந்தக் கூடுதல் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.

  • “பிளாட்டினா” திட்டம் ( Project Platina) என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா தெரபி திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 45.8 மில்லியன் பெண்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund (UNFPA)) வெளியிட்டுள்ள “State of World Population 2020: Against my will – Defying the practices that harm women and girls and undermine equality” எனும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • "உலக நாடுகளில் நிலவும் ஏழ்மை நிலையை ஒழிப்பதற்கு இந்தியாவின் வெற்றிகரமான அனுபவம் உதவியாக இருக்கும்" என்று ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே தெரிவித்துள்ளாா்.
    • கூ.தக. : 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே வறுமை ஒழிப்பு கூட்டமைப்பை அதிகாரபூா்வமாக நிறுவ உள்ளாா். அக்கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா ஏற்கெனவே இணைந்துள்ளது. இந்நிலையில், திஜ்ஜானி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
  • நாட்டிலேயே முதல் முறையாக, டெல்லியில் ஒரு பிளாஸ்மா வங்கியை அமைக்க உள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  • ‘கோவேக்சின்’ (Covaxin) என்ற பெயரில் இந்தியாவில் கொரோனா நோய்க்கெதிரான தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த சோதனையில், இது பாதுகாப்பானது மற்றும் சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, கொரோனா வைரசின் திரிபுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படி கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. இந்த தடுப்பூசியை இந்தியாவின் தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

  • ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளவை அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக (Ambassador and Permanent Representative of India to the United Nations at Geneva) இந்திரா மணி பாண்டே (Indra Mani Pandey) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : ஐ.நா. தலைமையகம் உள்ள நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளவை அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.திருமூர்த்தி (T.S. Tirumurti) நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ’பாசெக்ஸ் கடற்படை ஒத்திகை’ (PASSEX (Passing Exercise) Naval Exercise) என்ற பெயரில் இந்தியா - ஜப்பான் நாட்டு கடற்படைகளிடையேயான 15வது கூட்டு இராணுவ ஒத்திகை 30 ஜீன் 2020 அன்று இந்திய பெருங்கடலிலுள்ள மலாக்கா ஜலசந்தி பகுதியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் இந்திய கடற்படையின் INS (Indian Naval Ship) Rana மற்றும் INS Kulish ஆகியவை கலந்துகொண்டன.

சர்வதேச நிகழ்வுகள்

  • கார்னேஜ் ஒத்துழைப்பு அமைப்பின் (Carnegie Corporation) 2020 ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த புலம் பெயர்ந்தோர் விருது (‘2020 Great Immigrants’) இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட புலிட்சர் விருது வென்ற எழுத்தாளர் சித்தார்த்தா முகர்ஜி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ராஜ் செட்டி ஆகியோர் உட்பட 38 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ”NAFTA 2.0” (North America Free Trade Agreement (NAFTA)) என்ற பெயரில் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளுக்கிடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் 1 ஜீலை 2020 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • ஐ,நா, வறுமை ஒழிப்பிற்கான கூட்டமைபை (Alliance for Poverty eradication) ஐக்கிய நாடுகள் பொது சபையின் 74 வது அவையின் (74th United Nation’s General Assembly(UNGA)) தலைவர் டிஃபானி முகமது பாண்டே 23 ஜீன் 2020 அன்று தொடங்கி வைத்தார். இவ்வமைப்பில் இந்தியா நிறுவன உறுப்பினராக இணைந்துள்ளது.
    • கூ.தக. : 2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் 271 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா. வளர்ச்சி திட்டம் (United Nations Development programme) அறிவித்துள்ளது.
  • சீனாவில் ‘ஜி4 இஏ எச்1என்1’ (G4 EA H1N1) என்ற புதிய வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வைரஸானது பன்றிகளில் கண்டறியப்பட்டுள்ளது, மனிதர்களிடமும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • ரஷ்ய அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் அரசியல் சாசனத்திற்கு அந்நாட்டு மக்கள் பெரும்பான்மை ஆதரவு அளித்துள்ளனர்.ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவரே தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்த புதின், பின் 2008-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, விளாடிமிர் புதின் அந்நாட்டு அதிபர் பதவியை வகித்து வருகிறார்.வரும் 2024-ம் ஆண்டு வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது. தற்போது, அவரது பதவிக்காலத்தை மேலும் இரு முறை, அதாவது 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பது குறித்து, அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டு பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டதுடன் பொது வாக்கெடுப்பிலும் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

பொருளாதாரம்

  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ( Micro, Small and Medium Enterprises (MSME) ) “உத்யம்” (Udyam) என பெயர்மாற்றத்திற்கான உத்தரவை மத்திய சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். இந்த பெயர் மாற்றத்தின் பின் , 1 ஜீலை 2020 முதல் MSME நிறுவனங்களுக்கு பதிவு செய்யும் முறைமை “உத்யம்” பதிவு ( Udyam Registration) என அழைக்கப்படும்.

விருதுகள்

  • முதலாவது தேசிய புள்ளியியல் தின பேராசிரியர் P. C. மகலனாபிஸ் விருது (Mahalanobis Award on National Statistics Day) முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்ரவர்த்தி ரங்கராஜன் (Chakravarthi Rangarajan) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியமனங்கள்

  • இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக (Solicitor General) தூஷர் மேத்தா (Tushar Mehta) மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (Attorney General of India) KK வேணுகோபால் (KK Venugopal) மறுபடியும் ஒராண்டு காலத்திற்கு மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • தேசிய பட்டய கணக்காளர்கள் தினம் (National Chartered accountants day) - ஜீலை 1
    கூ.தக. : 1949 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( Institute of Chartered Accountants of India (ICAI) )தொடங்கப்பட்டது.
  • தேசிய மருத்துவர்கள் தினம் (national doctor’s day) - ஜீலை 1 (மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராய் (Dr Bidhan Chandra Roy) அவர்களின் பிறந்த மற்றும் இறந்த தினம்)
  • உலக பாராளுமன்றவாத தினம் (International Day of Parliamentarism) - ஜீன் 30
  • சர்வதேச சிறுகோள் தினம் (International Asteroid Day) - ஜீன் 30
  • சமீபத்தில் 100 வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர் - நரசிம்மராவ் - 28 ஜீன் 2020 (பிறந்த தினம் - 28 ஜீன் 1921)
Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language