Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs Tamil 3-4 July 2020

TNPSC Current Affairs 3-4 July 2020
தமிழ்நாடு
  •  தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் புதிய தலைவராக டிஜிபி என்.தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • பொதுமக்களுடன் ‘வீடியோ கால்’ மூலம் பேசி குறைகளை கேட்டறியும் புதுமையான திட்டத்தை சென்னை மாநகராட்சி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் 3-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தைப் பயன்படுத்தி, பொதுமக்கள் 6369100100 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் அடுத்து வரும் திங்கட்கிழமை அன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை கமிஷனரோடு வீடியோ காலில் பேசலாம். 
 • 159 வருடங்களில் முதல்முறையாக வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  
  • கூ.தக. : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில், 1861-ல் இந்திய போலீஸ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக,  ஒரு காவல்நிலையத்தை வருவாய்த்துறை தன் கட்டுப்பாட்டில் நீதிமன்றம் கொண்டுவந்து இதுவே முதல் முறையாகும்.
 • தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மூன்றாண்டு காலத்துக்கு, தலைவராக பணியாற்றுவார் என, கூறப்பட்டுள்ளது.இந்த கமிட்டியில், பள்ளிக் கல்வி, மெட்ரிக், தொடக்கக் கல்வி ஆகியவற்றின் இயக்குனர்கள், பொதுப்பணி துறையின் இணை தலைமை இன்ஜினியர், பள்ளி கல்வித் துறையின் இணை செயலர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வி செயலர் தீரஜ்குமார் 2-7-2020  அன்று பிறப்பித்தார்.
 • சென்னை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்திற்கு (Apollo Proton Cancer Centre (APCC)) ,  ஜே.சி.ஐ., எனப்படும், 'ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல்' (Joint Commission International (JCI)) என்ற சர்வதேச அமைப்பு, சிறப்பான செயல்பாட்டுக்கான அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறும், எட்டாவது மருத்துவமனை இது.  இந்தியாவில், இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் மருத்துவமனை என்ற, பெருமையும் கிடைத்துள்ளது.
இந்தியா
 • பதஞ்சலி நிறுவனம் தயாரித்த ”கொரோனில்” மருந்தை விற்பனை செய்வதற்கு ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.கரோனா நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்யாமல், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 • ரெயில்வே வாரிய (Railway Board) தலைவர்  - வி.கே.யாதவ்  (VK Yadav)
 • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து " BBV152" என்கிற கோவிட்-19 தடுப்பூசியை நாடு முழுவதும் உள்ள 13 மருத்துவமனைகள் நேரடியாக கொரோனா பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுத்து சோதனை செய்யப்படுகிறது . தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள SRM Medical College இதற்கான சோதனையை நடத்தவுள்ளது.
 • ”கோபால் - 19” மொபைல் செயலி (“COPAL-19”app)  கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக   பிளாஸ்மா கொடை செய்வோருக்காக (plasma donors)   ”கோபால் - 19”  என்ற பெயரில் மொபைல் செயலியை எய்ம்ஸ்  டெல்லி (AIIMS(All India Institute Of Medical Science) )மற்றும் ஐ.ஐ.டி. டெல்லி (IIT-Delhi) ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
 • 3-7-2020 அன்று லடாக்கில் இந்திய இராணுவ வீரர்களுடனான உரையின் போது, பிரதமர் மோடி அவர்கள் மேற்கோள் காட்டிய திருக்குறள்(அதிகாரம்-படைமாட்சி). 
‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு’
பொருள் :  "வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்”
சர்வதேச நிகழ்வுகள்
 •  பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஜீன் கேஸ்டெக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • கூ.தக. :பிரான்ஸ் அதிபர் - இமானுவேல் மெக்ரான்
 • ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • 2021 ஆம் ஆண்டில்  நடைபெறவுள்ள உலக உணவு கூடுகைக்கு (global food summit 2021) அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் உறுப்பினர்களாக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  உமா லெலீ (Uma Lele) மற்றும் ரத்தன் லால் (Rattan Lal) ஆகியோர் ஐ.நா. பொதுச்செயலர் அண்டானியோ குட்ரஸினால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதாரம்
 •  இந்தியாவின் வெளிக்கடன் (External debt) 2019-20 நிதியாண்டில்  முந்தைய நிதியாண்டை (2018-19) விட 2.8% அதிகரித்து 558.5 பில்லியன் டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 • இந்தியாவிலுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் ரூ.5,625 கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் கடந்த மாதம் வரை இந்தியாவுக்கு உலக வங்கி சாா்பில் ரூ.38,475 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும். கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்காக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவுக்கு ரூ.20,625 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுகள்
 •  காமன்வெல்த் சிறுகதைப் போட்டி 2020 (Commonwealth Short Story Prize) ல் முதல் பரிசை இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பாண்டே (Kritika Pandey) வின் ’தி கிரேட் இந்தியன் ட்ரீ அண்ட் ஸ்னேக்ஸ்” (“The Great Indian Tee and Snakes) எனும் சிறுகதைப் பெற்றுள்ளது.
 • ‘பிரேரக் தவுர் சம்மான்’ என்ற புதிய விருது அறிமுகம் : வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ ஒட்டி,  மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறையின் மூலம் 'ஊக்கமளிக்கும் மரியாதை' என்ற பொருள்படும் ‘பிரேரக் தவுர் சம்மான்‘   (Prerak Dauur Samman)      எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு.ஹர்தீப்சிங் பூரி அறிவித்துள்ளார்.   பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் ஆர்வத்துடன் பணியாற்றுவோர் என்ற 5 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று  நகரங்கள் அங்கீகரிக்கப்படும்.
முக்கிய தினங்கள் 
 •  உலக ஒவ்வாமை வாரம் ( World Allergy Week )  - ஜீன் 28 - ஜீலை 4
அறிவியல் & தொழில்நுட்பம்
 •  ”சுக்ரயான் - 1 திட்டம் “ (Mission Shukrayaan-1)  வெள்ளி கிரகத்தின் (Venus )  தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்கான  ”சுக்ரயான் - 1  “ எனும் திட்டத்த்தை  2023 - 2025ம் ஆண்டுவாக்கில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
 • ‘போபோஸ்’ ( Phobos ) என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் மர்மமான நிலவை, செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மங்கள்யான் செயற்கைகோளின்  கேமரா (Mars Colour Camera (MCC))  7200 கி.மீ மற்றும்   4200 கி.மீ. தொலைவில் 1 ஜீலை 2020 அன்று  படம் பிடித்துள்ளது.
விளையாட்டுகள்
 •  சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலின் (International Cricket Council)  தற்காலிகத் தலைவராக இம்ரான் கவாஜா தேர்வாகியுள்ளார்.  இதற்கு முன்னர் இந்த பதவியை வகித்த   சஷாங்க் மனோகர் (பதவிக்காலம் முடிவடைந்ததால் ) விலகியுள்ளதையடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
 •  “Future of Higher Education – Nine Mega Trends”  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - CA V பட்டாபி ராம் (CA V Pattabhi Ram)

Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language