Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs Tamil 1-2 July 2020

TNPSC Current Affairs 1-2  July 2020

தமிழ்நாடு

 • உலகின் முதல் ஆன்லைன் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு (world’s first online BSc Degree program in Programming and Data Science) ஐ.ஐ.டி. மெட்ராஸினால் (https://onlinedegree.iitm.ac.in/)  30 ஜீன் 2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
 • தமிழகத்தில் வீட்டு வசதியை வலுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1514 கோடியையும், வாழ்விட மேம்பாட்டுத்திட்டத்துக்கு (Tamil Nadu Housing and Habitat Development Project) ரூ 378.6 கோடியையும் உலகவங்கி கடனாகக் கொடுக்கிறது. இந்த இரு ஒப்பந்தங்களும் தில்லியில் 29-6-2020 அன்று கையெழுத்தானது.குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு மலிவான விலையில் வீடுகளை வழங்குவதை அதிகரிக்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரூ. 1,514.4 கோடி மதிப்புள்ள முதலாவது தமிழ்நாடு வீட்டுவசதி வலுப்படுத்தும் திட்டம் உதவி செய்வதாக அமையும்.
 • கொடுமணல் அகழ்வாய்வில் குஜராத் கல் பவளமணி கண்டெடுப்பு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரை கிராமமான கொடுமணலில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணியில் குஜராத் கல் பவளமணி உள்பட ஏராளமான பொருள்கள் கிடைத்துள்ளன. சில நாள்களுக்கு முன் பச்சை கற்கள், பாசி மணிகள் உள்பட பல பொருள்கள் கிடைத்தன.
 • கொரோனோவைக் கட்டுப்படுத்தும் மூலிகை மருந்து “இம்ப்ரோ” : மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். இந்த சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியா

 • ”மத்ஸ்யா சம்பதா” (‘Matsya Sampada’) என்ற பெயரில் மீன்வளத்துறை மற்றும் மீன்வளர்ப்பு துறையினால் வெளியிடப்படும் பத்திரிக்கையின் முதல் பதிப்பு 30 ஜீன் 2020 அன்று வெளியிடப்பட்டது. இந்த பத்திரிக்கையானது காலாண்டிற்கு ஒருமுறை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் (“disturbed area”) மத்திய அரசால் 30-6-2020 அன்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் (Armed Forces (Special Powers) Act, 1958) டிசம்பர் 2020 வரையில் இந்த சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • “பிரதமர் கரிப் கல்யாண் அன் யோஜனா” (Pradhan Mantri Garib Kalyan Ann Yojana (PMGKAY)) திட்டத்தை ஜீலை 2020 லிருந்து நவம்பர் 2020 வரையில் நீட்டிப்பதாக பிரதமர் மோடி அவர்கள் ஜீன் 30, 2020 அன்று அறிவித்துள்ளார். ரூ.90,000 கோடி மதிப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
கூ.தக. : கொரோனா வைரசுக்கு எதிராக ஏழைகள் போராடுவதற்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் (பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம் ) (Pradhan Mantri Garib Kalyan Yojana) கீழ் ரூ 1.70 லட்சம் கோடி நிவாரண தொகுப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 26-3-2020 அன்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக “பிரதமர் கரிப் கல்யாண் அன் யோஜனா” (Pradhan Mantri Garib Kalyan Ann Yojana (PMGKAY)) அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் அம்சங்கள் வருமாறு,
 • அடுத்த மூன்று மாதங்களுக்கு, எந்த ஒருவரும், குறிப்பாக எந்த ஏழை குடும்பமும், உணவுப் பொருள்கள் கிடைக்காமல் வாடுவதற்கு இந்திய அரசு அனுமதிக்காது.
 • 80 கோடி பேர், அதாவது இந்திய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு, இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள்.
 • தற்சமயம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை விட இரு மடங்கு பொருள்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இவர்களுக்கு அளிக்கப்படும்.
 • இந்தக் கூடுதல் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.

 • “பிளாட்டினா” திட்டம் ( Project Platina) என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா தெரபி திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது.
 • இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 45.8 மில்லியன் பெண்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund (UNFPA)) வெளியிட்டுள்ள “State of World Population 2020: Against my will – Defying the practices that harm women and girls and undermine equality” எனும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • "உலக நாடுகளில் நிலவும் ஏழ்மை நிலையை ஒழிப்பதற்கு இந்தியாவின் வெற்றிகரமான அனுபவம் உதவியாக இருக்கும்" என்று ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே தெரிவித்துள்ளாா்.
  • கூ.தக. : 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே வறுமை ஒழிப்பு கூட்டமைப்பை அதிகாரபூா்வமாக நிறுவ உள்ளாா். அக்கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா ஏற்கெனவே இணைந்துள்ளது. இந்நிலையில், திஜ்ஜானி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
 • நாட்டிலேயே முதல் முறையாக, டெல்லியில் ஒரு பிளாஸ்மா வங்கியை அமைக்க உள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 • ‘கோவேக்சின்’ (Covaxin) என்ற பெயரில் இந்தியாவில் கொரோனா நோய்க்கெதிரான தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த சோதனையில், இது பாதுகாப்பானது மற்றும் சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, கொரோனா வைரசின் திரிபுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படி கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. இந்த தடுப்பூசியை இந்தியாவின் தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

 • ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளவை அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக (Ambassador and Permanent Representative of India to the United Nations at Geneva) இந்திரா மணி பாண்டே (Indra Mani Pandey) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கூ.தக. : ஐ.நா. தலைமையகம் உள்ள நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளவை அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.திருமூர்த்தி (T.S. Tirumurti) நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 • ’பாசெக்ஸ் கடற்படை ஒத்திகை’ (PASSEX (Passing Exercise) Naval Exercise) என்ற பெயரில் இந்தியா - ஜப்பான் நாட்டு கடற்படைகளிடையேயான 15வது கூட்டு இராணுவ ஒத்திகை 30 ஜீன் 2020 அன்று இந்திய பெருங்கடலிலுள்ள மலாக்கா ஜலசந்தி பகுதியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் இந்திய கடற்படையின் INS (Indian Naval Ship) Rana மற்றும் INS Kulish ஆகியவை கலந்துகொண்டன.

சர்வதேச நிகழ்வுகள்

 • கார்னேஜ் ஒத்துழைப்பு அமைப்பின் (Carnegie Corporation) 2020 ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த புலம் பெயர்ந்தோர் விருது (‘2020 Great Immigrants’) இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட புலிட்சர் விருது வென்ற எழுத்தாளர் சித்தார்த்தா முகர்ஜி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ராஜ் செட்டி ஆகியோர் உட்பட 38 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • ”NAFTA 2.0” (North America Free Trade Agreement (NAFTA)) என்ற பெயரில் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளுக்கிடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் 1 ஜீலை 2020 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
 • ஐ,நா, வறுமை ஒழிப்பிற்கான கூட்டமைபை (Alliance for Poverty eradication) ஐக்கிய நாடுகள் பொது சபையின் 74 வது அவையின் (74th United Nation’s General Assembly(UNGA)) தலைவர் டிஃபானி முகமது பாண்டே 23 ஜீன் 2020 அன்று தொடங்கி வைத்தார். இவ்வமைப்பில் இந்தியா நிறுவன உறுப்பினராக இணைந்துள்ளது.
  • கூ.தக. : 2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் 271 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா. வளர்ச்சி திட்டம் (United Nations Development programme) அறிவித்துள்ளது.
 • சீனாவில் ‘ஜி4 இஏ எச்1என்1’ (G4 EA H1N1) என்ற புதிய வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வைரஸானது பன்றிகளில் கண்டறியப்பட்டுள்ளது, மனிதர்களிடமும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • ரஷ்ய அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் அரசியல் சாசனத்திற்கு அந்நாட்டு மக்கள் பெரும்பான்மை ஆதரவு அளித்துள்ளனர்.ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவரே தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்த புதின், பின் 2008-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, விளாடிமிர் புதின் அந்நாட்டு அதிபர் பதவியை வகித்து வருகிறார்.வரும் 2024-ம் ஆண்டு வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது. தற்போது, அவரது பதவிக்காலத்தை மேலும் இரு முறை, அதாவது 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பது குறித்து, அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டு பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டதுடன் பொது வாக்கெடுப்பிலும் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

பொருளாதாரம்

 • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ( Micro, Small and Medium Enterprises (MSME) ) “உத்யம்” (Udyam) என பெயர்மாற்றத்திற்கான உத்தரவை மத்திய சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். இந்த பெயர் மாற்றத்தின் பின் , 1 ஜீலை 2020 முதல் MSME நிறுவனங்களுக்கு பதிவு செய்யும் முறைமை “உத்யம்” பதிவு ( Udyam Registration) என அழைக்கப்படும்.

விருதுகள்

 • முதலாவது தேசிய புள்ளியியல் தின பேராசிரியர் P. C. மகலனாபிஸ் விருது (Mahalanobis Award on National Statistics Day) முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்ரவர்த்தி ரங்கராஜன் (Chakravarthi Rangarajan) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியமனங்கள்

 • இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக (Solicitor General) தூஷர் மேத்தா (Tushar Mehta) மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (Attorney General of India) KK வேணுகோபால் (KK Venugopal) மறுபடியும் ஒராண்டு காலத்திற்கு மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

 • தேசிய பட்டய கணக்காளர்கள் தினம் (National Chartered accountants day) - ஜீலை 1
  கூ.தக. : 1949 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( Institute of Chartered Accountants of India (ICAI) )தொடங்கப்பட்டது.
 • தேசிய மருத்துவர்கள் தினம் (national doctor’s day) - ஜீலை 1 (மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராய் (Dr Bidhan Chandra Roy) அவர்களின் பிறந்த மற்றும் இறந்த தினம்)
 • உலக பாராளுமன்றவாத தினம் (International Day of Parliamentarism) - ஜீன் 30
 • சர்வதேச சிறுகோள் தினம் (International Asteroid Day) - ஜீன் 30
 • சமீபத்தில் 100 வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர் - நரசிம்மராவ் - 28 ஜீன் 2020 (பிறந்த தினம் - 28 ஜீன் 1921)
Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language