Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Current Affairs in Tamil - 6-12 April 2020

தமிழ்நாடு

  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தமிழகத்தின் 38 வது மாவட்டமாக உருவாக்குவதற்கான   அரசாணை 7-4-2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.   
  • பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாயீ யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY)) திட்டத்தின் கீழ்   நுண் பாசனத்தில் (micro-irrigation), 2019-2020 ஆம் நிதியாண்டில்,   அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.  இரண்டாம் , மூன்றாம் இடங்களை முறையே கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள் பெற்றுள்ளன. 

இந்தியா

  • ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • கரோனா நோயாளிகளின் இதயத்துடிப்பை தூரத்தில் இருந்தே கேட்கும் வகையில் ‘ஸ்மாா்ட் ஸ்டெதஸ்கோப்’பை மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி-பி) இதற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மருத்துவரிடம் ஆலோசனை பெற வருபவரின் மாா்பின் மீது இந்த நவீன ஸ்டெதஸ்கோப்பை வைக்கத் தேவையில்லை. அவருடைய இதயத்துடிப்பின் ஒலி, ‘புளூடூத்’ தொழில்நுட்பம் வழியாக மருத்துவரின் ஸ்டெதஸ்கோப்புக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், நோயாளிக்கு அருகே மருத்துவா்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஒலியை பதிவு செய்து வைப்பதன் மூலம், மற்ற மருத்துவா்களும் அதனை அனுசரித்து சிகிச்சையளிக்க முடியும்.
  •  “டிஜிலாக்கர்” ( DigiLocker) வசதிக்கு   ‘தேசிய கல்வி களஞ்சியம்’ (National Academic Depository (NAD)) என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
    • கூ.தக. :  பொதுமக்கள்  தங்களுடைய சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதற்கான,  ஆதார் உதவியுடன் இயங்கும்,  டிஜிலாக்கர் திட்டம்  2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால்  2015 ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்டது.  இத்திட்டத்தை  மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை (Department of Electronics & Information Technology) அமல்படுத்தி வருகிறது. 
  • இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட  கோவிட்-19   வீட்டு சோதனைக் கருவியை  (home testing COVID-19 kit)   “பையோன்” (Bione) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுண்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
  • ”பிராண வாயு” (Prana Vayu) என்ற பெயரில் குறைந்த விலை, கையடக்க வெண்டிலேட்டர் கருவியை ஐ.ஐ.டி ரூர்க்கே (IIT Roorkee) கண்டுபிடித்துள்ளது. 
  • ”லைஃப் லைன் உதான்” (Lifeline UDAN) என்ற பெயரில் கோவிட்-19 தொடர்பான மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் வான்வெளி சரக்குப் போக்குவரத்திற்கான திட்டத்தை மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் முன்னெடுத்துள்ளது, 
  • பிரதமர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் சம்பளத்தையும்  30 % குறைப்பதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 6-4-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சம்பளக் குறைப்பு வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருக்கும்.  இது போன்று,   பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு திட்டமும் ( MPLADS - Members of Parliament Local Area Development Scheme) இரண்டு ஆண்டுகளுக்கு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
  • ”ஜன் ஆஷாதி சுகம் செயலி” (Jan Aushadhi Sugam App) என்ற பெயரில்  மருந்து பொருட்களை வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யும் திட்டத்திற்கான மொபைல் செயலியை  மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • ”சமாதான்” (“Samadhan”) என்ற பெயரில்    கோவிட்-19  பரவலைத் தடுக்கும் முயற்சியில்,   மாணவர்களின்  கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான போட்டியை  மத்திய மனிதவள அமைச்சகம் 7-4-2020 அன்று தொடங்கியுள்ளது. 
  • ”சேஃப் திட்டம்” (SAFE -  SIDBI Assistance to Facilitate Emergency response against Corona Virus scheme) என்ற பெயரில்,   வெண்டிலேட்டர்கள் மற்றும் கோவிட் - 19 தடுப்பு மருத்துவ உபகரணப் பொருட்கள் தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  ரூ. 1 கோடி வரையிலான கடனுதவி வழங்கும் திட்டத்தை ’இந்திய சிறு தொழில் மேம்பாட்டு  வங்கி’ (SIDBI -Small Industries Development Bank of India) அறிவித்துள்ளது. 
  • “iGOT” (Integrated Government Online Training portal) என்ற பெயரில்   கோவிட்-19 தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்குவதற்கான இணையதள சேவையை    DIKSHA (Digital Infrastructure for Knowledge SHAring) தளத்தின் கீழ் மத்திய மனித வள அமைச்சகம் தொடங்கியுள்ளது. 
  • "ஆப்ரேஷன் ஷீல்டு” (“Operation Shield”) என்ற பெயரில் கோவிட்-19 தடுப்பு திட்டத்தை  தில்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 9-4-2020 அன்று தொடங்கியுள்ளார். 
    • கூ.தக.  : SHIELD  இன் விரிவாக்கம் - Sealing, Home quarantine, isolation and tracing, essential supply, local sanitation and door-to-door checks
  • கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள், மாஸ்க்குகள், மற்றும் அறுவைசிகிச்சை மாஸ்க்குகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி மற்றும் சுகாதார செஸ் வரி ஆகியவற்றை மத்திய அரசு நீக்கியுள்ளது. உள்நாட்டிலேயே, இவற்றை தயாரிக்க தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் போது, அவற்றின் மீதான சுங்கவரி மற்றும் செஸ் வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. செப்.,30 வரை செல்லுபடியாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ‘பைப்ஸ்’ என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு குறைவாக கரோனா பாதுகாப்புக் கவச உடை தயாரிக்கும் முறையை கான்பூர் ஐஐடி கண்டுபிடித்துள்ளது.
  • கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிச் சூழலை மருத்துவ ரீதியில் எதிா்கொள்வதற்கு பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு இந்தியாவும் ரஷியாவும் முடிவு செய்துள்ளன.
  •  நாட்டிலேயே முதலாவது கொரோ வைரஸ் மருத்துவமனை  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில்  துவக்கப்பட்டுள்ளது.
  • ”ஜீவன்” (Jeevan) என்ற பெயரில் , குறைந்த விலையில் சுவாச கருவி   (வென்டிலேட்டா்) கபுா்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்ரஸா் இல்லாத வென்டிலேட்டரை உருவாக்க ரூ. 10,000 வரை செலவாகும். ஐசிஎம்ஆா் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் குறைந்த செலவில் தினந்தோறும் 100 வென்டிலேட்டா்களை உற்பத்தி செய்ய இயலும்.  

வெளிநாட்டு உறவுகள் 

  • கொரோனாவை எதிர்த்து போராடி வரும் இந்தியாவுக்கு, 2.9 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 22.4 கோடி ரூபாய்) நிதி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • அமெரிக்க அரசு இந்த நிதியை தனது உதவி நிறுவனமான யு.எஸ்.ஐ.ஐ.டி., மூலம் வழங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 3 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா வழங்கி உள்ளது. இதில் சுகாதாரத்திற்கு மட்டும் 1.4 பில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 'கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' மாத்திரைகளை தந்து உதவ வேண்டும்' என இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம்

  • கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக ஜப்பான் நாட்டில் 7-4-2020 அன்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 
  • உலக சுகாதார அமைப்பின் தலைவர் - டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் (எத்தியோப்பியா நாட்டவர்) 
    • கூ.தக. : உலக சுகாதார அமைப்பின் தலைமை  விஞ்ஞானியாக ( Chief Scientist of WHO)   இந்தியாவைச் சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் அவர்கள்  மார்ச் 2019 ல் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதற்கு முன்னதாக இவர்  உலக சுகாதார அமைப்பின் துணை பொதுச்செயலராக அக்டோபர் 2017  முதல் மார்ச் 2019 வரையில் பணியாற்றியிருந்தார். 
  • அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

பொருளாதாரம்

  • ’கவாச்” (CAWACH- Centre for Augmenting WAR with COVID-19 Health crisis) என்ற பெயரில் கோவிட்-19  நோய் தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும்  ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவிடும் அமைப்பை மத்திய  அறிவியல் தொழில்நுட்ப துறை உருவாக்கியுள்ளது. இதனை மும்பை ஐ.ஐ.டி. மற்றும் SINE (Society for Innovation and Entrepreneurship) நிறுவனம் இணைந்து நடைமுறைப்படுத்துகிறது. 
  • 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம்)  4.8% ஆக இருக்கும் என 9-4-2020 அன்று  ஐக்கிய நாடுகளவை வெளியிட்டுள்ள “Economic and Social Survey of Asia and Pacific (ESCAP), 2020.” என்ற அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவிற்கு, ரூ.16,500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் மசாட்சுகு அசக்கவா கூறியுள்ளார்.
  • வாடிக்கையாளா்களின் இல்லங்களுக்கு அருகே சென்று சேவையளிக்கும் வகையில் ஐசிஐசிஐ வங்கி நடமாடும் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது.
  • ரூ. 5 லட்சத்துக்கு குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்குமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  • சர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார்.

முக்கிய நியமனங்கள்

  • ’நாஸ்காம்’ எனப்படும், தேசிய  மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவங்களின் சங்கத்தின் (National Association of Software and Services Companies (NASSCOM))  தலைவராக UB பிரவிண் ராவ்(UB Pravin Rao) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

முக்கிய தினங்கள்

  • சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதியை மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
  • உலக ஹோமியோபதி தினம் (World Homeopathy Day) - ஏப்ரல் 10 
    • கூ.தக. : ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை எனப்படும் ஜெர்மனியைச் சேர்ந்த  கிறிஸ்டியன் பிரைட்ரிச் சாமுவேல் ஹாக்னெமான் (Dr. Christian Friedrich Samuel Hahnemann) பிறந்த தினம் உலக ஹோமியோபதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. 
  • உலக சுகாதார தினம் (World Health Day) - ஏப்ரல் 7  | மையக்கருத்து 2020 - செவிலியர் மற்றும் மருத்துவச்சிகளை  ஆதரிப்போம் (Support Nurses and Midwives) 
    • கூ.தக. : பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) அவர்களின்  200 வது பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில், உலக சுகாதார நிறுவனம், 2020 ஆம் ஆண்டை செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் ஆண்டாக (Year of the Nurse and Midwife)  அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • தேசிய கடல்சார் தினம் (National Maritime Day) - ஏப்ரல் 5 
  • சர்வதேச மனசாட்சி தினம் (International Day of Conscience) - ஏப்ரல் 5   
  • சர்வதேச, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான விளையாட்டு தினம் (International Day of Sport for Development and Peace )  - ஏப்ரல் 6 

புத்தகங்கள்

  • “Memoirs and Misinformation” என்ற புத்தகத்தின் (நாவல்) ஆசிரியர்கள்  - ஜிம் காரே & டானா வாச்சன்  (Jim Carrey &  Dana Vachon)
  • The Art of Her Deal: The Untold Story of Melania Trump’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்  - மேரி ஜோர்டான் ( Mary Jordan )
  • ”How Contagion Works: Science, Awareness and Community in Times of Global Crisis” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - பாலோ ஜியார்டானோ (Paolo Giordano)
  • ”Deadliest Enemy: Our War Against Killer Germs” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மார்க் ஆல்ஷாகர் (Mark Olshaker)

அறிவியல் தொழில்நுட்பம்

  • "ஆர்டிமிஷ்” (Artemis) என்ற பெயரில்  2024 ஆம் ஆண்டிற்குள் ,  நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை   அமெரிக்காவின் நாசா (NASA),   ஐரோப்பிய விண்வெளி முகமை (European Space Agency), கனடா விண்வெளி முகமை ( Canadian Space Agency) , ஜப்பான் விண்வெளி முகமை (Japan Space Agency) மற்றும் ஆஸ்திரேலியா விண்வெளி முகமை  (Australian Space Agency) ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கியுள்ளது. 
Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language