Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs 6,7 June 2020

TNPSC Current Affairs 6,7 June 2020

தமிழ்நாடு

  • ”ஒளிரும் தமிழ்நாடு” மாநாடு :  தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) சாா்பில் நடைபெறும்  ஒளிரும் தமிழ்நாடு  எனும் காணொலி மாநாட்டை முதல்வா் பழனிசாமி  06-06-2020  அன்று தொடக்கி வைத்தார்.
  • பிரதமர் மோடி அவர்களால் மான்கிபாத் வானொலி உரையில் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நித்ரா 'ஐக்கிய நாடுகளவை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சங்கத்தின் (United Nations Association for Development and Peace (UNADAP) )ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஊக்கத் தொகையாக ரூ.1 லட்சம் சிறுமி நேத்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
    • நேத்ராவின்  உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஜம்மு-காஷ்மீரில் எதிரிகளின் தாக்குதலால் வீரமரணமடைந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
  • கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 125-வது பிறந்தநாள்  5-6-2020 அன்று அனுசரிக்கப்பட்டது.  கூ.தக.  :இவர் 5 ஜீன் 1896 ல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.    பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
    • 1947 இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் இசுமாயில். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத்தில் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது. பின்னர் 1996ல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது. (நன்றி : விக்கிபீடியா)
  • சென்னையில் கொரானா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார். அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆ‌ர். விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், உதயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடருங்கள்https://www.facebook.com/groups/tamilcurrentaffairs/

இந்தியா

  • ’நன்றி அம்மா’ (”Thank Mom") என்ற பெயரில் மரம் நடும் இயக்கத்தை மத்திய பிரதேச அரசு 5-6-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையை கணக்கிட, 'இம்யூனோகுளோபுலின் ஜி எலிசா (Ig-ELISA) 'பரிசோதனையை, இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.நோயைக் கண்டறிய தற்போது, பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது. இது, ஒருவர் உடலில், தொற்று ஏற்பட்ட ஏழு - எட்டு நாட்களில் தான், 'பாசிட்டிவ்' எனக் காட்டும்.இதை விட, உடலில், 'ஆன்டிபாடி' அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிந்தால், நோய்க்கான வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம். அதுமட்டும் இன்றி, யாருக்கெல்லாம் அறிகுறி இன்றி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அறிகுறிகள் இல்லாமலேயே குணமடைந்தனர் என்பதையும் கண்டறிந்து விடலாம். இதற்காக தற்போது, 'இம்யூனோகுளோபுலின் ஜி எலிசா' பரிசோதனையை, மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • "நகர் வன்” திட்டம் (‘Nagar Van’ scheme) என்ற பெயரில்  இந்தியாவில் 200 நகர்புற காடுகளை (Urban forests) உருவாக்குவதற்கான திட்டத்தை  மத்திய அரசு, உலக சுற்றுசூழல் தினம் 2020 கொண்டாட்டத்தின் போது அறிவித்துள்ளது.
  • தாய்மை அடையும் வயது குறித்து ஆராய 10 உறுப்பினர் கொண்ட சிறப்பு  குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா ஜேட்லி தலைமையில்  மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் தாய்மை அடையும் வயது, பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் மரணம் அடைவதை குறைப்பதற்கான வழிமுறைகள், ஊட்டச்சத்து அளவை அதிகரித்தல் ஆகியவற்றை குறித்து பெண்கள் நலனை மேம்படுத்த  வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும்.
  • "மேரா விதான்" (MeraVetan) என்ற பெயரில் அரசு ஊழியர்கள் தங்களது சம்பளம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான மொபைல் செயலி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச ஆளுநர் கிரீஸ் மர்மு (Girish Chandra Murmu) வெளியிட்டுள்ளார்.
  • விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்வதில் உள்ள தடைகளை களையும் வகையில், வேளாண் துறையில் சீா்திருத்தங்களை செயல்படுத்த வழிவகுக்கும் இரு அவசர சட்டங்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 5-6-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
    • வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், 2020 , விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம், 2020 ; ஆகிய அந்த இரு அவசர சட்டங்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
    • வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், 2020 மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் தடைகளின்றி விற்பனை செய்ய வழிவகை ஏற்படும்.
    • மொத்த மற்றும் சில்லறை வணிகா்கள், ஏற்றுமதியாளா்கள் உள்ளிட்டோருடன் விவசாயிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம், 2020 கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் சுரண்டப்படுவது தடுக்கப்படும். இந்த சீா்திருத்தத்தின்படி, வேளாண் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • கேரள மாநிலம் மலப்புரம் அருகே கர்ப்பிணி யானை ஒன்று அன்னாசி பழத்தினுள் வெடிமருந்து வைத்து கொல்லப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • புகழ்பெற்ற ‘பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலை அகதமியின்’ (British Academy of Film and Television Arts(BAFTA)) தலைமைப் பொறுப்பிற்கு இந்திய வம்சாவளி ’கிரிஷ்னேண்டு மஜூம்தார்’ (Krishnendu Majumdar) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை வகிக்கும் முதல் இந்தியர் இவராவர்.

பொருளாதாரம்

  • கடன் செலுத்த தவறியவர்களுக்கு சலுகையாக, திவால் சட்டத்தை திருத்தி மத்திய அரசு அவசர சட்டம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா தொடர்பாக ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25 அல்லது அதற்கு பிறகு ஓராண்டுவரை கடனை திருப்பி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது.

நியமனங்கள்

  • உலக வர்த்தக நிறுவனத்திற்கான இந்தியாவிற்கான நிரந்தர திட்டத்தின் தூதுவராக(Ambassador to the Permanent Mission for India (PMI) at the WTO in Geneva) ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர நவ்நீத் ( Brajendra Navnit) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக வங்கியின் செயல் இயக்குநருக்கான மூத்த ஆலோசகராக (Senior Advisor to the Executive Director of the World Bank) பிரதமர் மோடி அவர்களின் தனிச் செயலராக (Private Secretary) 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய ராஜீவ் டோப்னோ (Rajeev Topno) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) - ஜீன் 7 | மையக்கருத்து 2020 - உணவு பாதுகாப்பு, அனைவரின் கடமை (Food Safety, Everyone’s Business)
    • கூ.தக. : ஐக்கிய நாடுகளவையின் உலக உணவு திட்டம் (World Food Programme) 1961 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ளது.
  • உலக பூச்சிகள் தினம் (World Pest Day) - ஜீன் 6
  • ஐ.நா. ரஷிய மொழி தினம் - ஜீன் 6
  • சட்டத்திற்கு புறம்பான மீன்பிடித்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing ) - ஜீன் 5
  • உலக சுற்றுசூழல் தினம் ( World Environment Day) ஜூன் 5 | மையக்கருத்து 2020- இயற்கைக்கான நேரம் ( 'Time for Nature')

அறிவியல் & தொழில்நுட்பம்

  • "சோடார்"( ‘Sodar’) என்ற பெயரில் சமூக இடைவெளியை (Social distancing) பேணுவதற்கான மொபைல் செயலியை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • "சுமேரு பாக்ஸ்" (SUMERU-PACS) என்ற பெயரில் தனிநபர் பாதுகாப்பு உபகரண உடை ( Personal Protective Equipment (PPE)) அணிவோர் வியர்வை பிரச்சனை இன்றி இலகுவாக உணர்வதற்கான கருவியை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ( Defence Research Development Organisation (DRDO)) கண்டுபிடித்துள்ளது.

விளையாட்டுகள்

  • ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ( Asian Football Confederation(AFC) ) ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டி 2022  (AFC Women’s Asian Cup 2022)   இந்தியாவில் நடக்கவுள்ளது.  கடைசியாக 1980 ஆம் ஆண்டில் இந்தியாவில் (கோழிக்கோட்டில்) இந்த போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language