Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs Tamil - 1,2 April 2020

TNPSC Current Affairs 1,2  April 2020

தமிழ்நாடு

  • கரோனாவை தடுக்க இந்தியாவின் முதல்  ‘கிருமிநாசினி சுரங்கம்’, திருப்பூரில் பிரபலமான தென்னம்பாளையம் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளது.  'திருப்பூர் யங் இண்டியன்ஸ்' அமைப்பினர் மூலம் அமைக்கப்பட்டுள்ள இதனை  தன்னார்வலர் வெங்கடேஷ் என்பவர் ரூ.1 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளார்.  இதில் மக்கள் நுழைந்தால், சென்சார் அமைப்பு மூலம் ஸ்பிரேயர், தானாக இயங்கி குளோரின் எனப்படும் ஹைட்ரோகுளோரைடை தண்ணீரு டன் கலந்த  கிருமிநாசினி தலை முதல் கால் வரை தெளிக்கப்படுகிறது. 
  • தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிவு 76ன் படி தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம் 1897ன்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தியா

  • "ஆரோக்கிய சேது"("Aarogya Setu") என்ற பெயரில், கோவிட்- 19 நோய்க்கு எதிரான உறுதியான போராட்டத்தில், இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்காக, அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் செல்லிடப்பேசி செயலி ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
    • கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் தங்களுக்கு உள்ளதா, என்று மக்கள், தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துகொள்வதற்கு இந்தச் செயலி உதவும். ஒருவர் மற்றவர்களுடன் எவ்வாறு கலந்து பழகுகிறார்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; எந்த அளவிற்கு நவீன ப்ளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்; கணிப்பு நெறிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்படும். பயனாளிகளே பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான முறையில் எளிமையானதாக அமைந்துள்ள இந்தச் செயலியை, ஸ்மார்ட் போன் செல்லிடப்பேசியில் பதிவேற்றிய பின்னர், இந்த செல்லிடப்பேசிக்கு அருகேயுள்ள இதர கருவிகளை, ஆரோக்யசேது கண்டறியும்.
    • கோவிட்- 19 தொற்று எங்கு பரவக்கூடும் என்பதை மதிப்பீடு செய்து, உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் தனிமைப்படுத்துதலை உறுதி செய்யவும், இந்தச் செயலி, அரசுக்கு உதவும்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (மாநில சட்டங்கள் ஏற்பு) ஆணை 2020 (Jammu and Kashmir Reorganisation (Adaptation of State Laws) Order, 2020) யை, மத்திய உள்துறை அமைச்சகம் 1-4-2020 அன்று வெளியிட்டுள்ளது. முந்தைய ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தொடர்பான மாநில சட்டங்களை ஏற்பது மற்றும் மாற்றியமைப்பது தொடர்பான ஆணையை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்திய சட்டங்களை அமுலாக்க இது வழி வகுக்கும். இதன்படி, ஜம்மு - காஷ்மீரில், 15 ஆண்டுகள் தங்கி இருந்தவர்கள் அல்லது ஏழு ஆண்டுகள் தங்கி, 10 அல்லது, பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதியவர்கள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர்.
    • மத்திய அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற துறைகள், பொதுத்துறை வங்கிகள், அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்புகள், மத்திய பல்கலைக்கழகங்கள். மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், ஜம்மு - காஷ்மீரில், குறைந்தது, 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவர்களின் குழந்தைகள், யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவர்.
    • ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்களின் குழந்தைகள், வேலை, தொழில் அல்லது கல்வி காரணமாக வேறு மாநிலங்களில் வசித்தாலும், அவர்கள் பெற்றோர் விரும்பினால், அவர்களுக்கு யூனியன் பிரதேசத்தின் இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள், ஜம்மு - காஷ்மீர் அரசு பணிகளில் சேர தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
  • ஜி-20 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மெய்நிகர் கூடுகை (Extraordinary G20 Finance Ministers and Central Bank Governors (FMCBG) virtual meeting) 31-1-2020 அன்று நடைபெற்றது. இக்கூடுகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றார்கள்.
  • மினல் தாகவே போஷல் (Minal Dakhave Bhosale) :  பூனேவைச் சேர்ந்த Mylab Discovery Solutions நிறுவனத்தின் மூலம்  தயாரிக்கப்பட்ட     ‘Mylab PathoDetect COVID-19 Qualitative PCR kit’ என்ற பெயரிலான    இந்தியாவின்  முதல்  கோவிட் 19  சோதனைக் கருவியைக் கண்டு பிடித்த குழுவிற்கு தலைமைத் தாங்கிய பெண்மணி.   
  • ”கொரோனா கவச்” (“Corona Kavach”) என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கினால், எச்சரிக்கை செய்யும் மொபைல் அப்ளிகேஷனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.   கொரோனா கவச் ஆப்பை இன்ஸ்டால் செய்த நபரின் ஸ்மார்ட்போனில் உள்ள தகவலை பயன்படுத்தி அவர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை நெருங்கும்போது எச்சரிக்கவும் செய்கிறது.

சர்வதேச நிகழ்வுகள்

  • “ஷார்ட்ஸ்” என்ற பெயரில் பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக் டாக்குக்கு போட்டியாக புதிய செயலியை யூ ட்யூப் உருவாக்கி வருகிறது.
  • பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து இளவரசா் ஹாரியும் அவரது மனைவி மேகன் மாா்க்கலும் 31-3-2020 அன்று அதிகாரப்பூா்வமாக விலகினா்.அரச பட்டங்களைத் துறந்து, அவா்கள் இருவரும் அமெரிக்காவில் தங்களது வாழ்க்கையைத் தொடரவுள்ளனர்.
  • ஐக்கிய நாடுகளவை வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா (COVID-19) தாக்கத்தினால்  இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைத்தவிர மற்ற அனைத்து நாட்டு பொருளாதாரங்களும் வெகுவாக பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

  • கரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் உலகப் போா் காலகட்டத்துக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படுவது இது முதல் முறையாக இருக்கும்.
  • டக்வொர்த் லூயிஸ் மழை விதிமுறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி லூயிஸ் இன்று காலமானார். 1999-ல் பிராங்க் டக்வொர்த் - டோனி லூயிஸ் ஆகிய இருவரும் கண்டுபிடித்த மழை விதிமுறையை டிஎல் என்கிற பெயரில் சர்வதேச கிரிக்கெட்டில் அமல்படுத்தியது ஐசிசி. கிரிக்கெட் ஆட்டங்களில் மழையால் ஆட்டம் தடைபடும்போது மீதமுள்ள ஓவர்களைக் கொண்டு ஆட்டத்தை முடிக்க டக்வொர்த் லூயிஸ் விதிமுறை உதவியது.

புத்தகங்கள்

  • “The Enlightenment of The Greengage Tree” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சோகூஃபெக் அஷார் (Shokoofeh Azar)
  • ‘Backstage: The Story Behind India’s High Growth Years’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மாண்டெக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia)
  • ‘Sridevi: The Eternal Screen Goddess’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சத்யார்த் நாயக் (Satyarth Nayak)

Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language