Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs Tamil 25-26 June 2020


  இந்தியா

  • ”இந்திய காசநோய் அறிக்கை 2020” (“India TB (Tuberculosis) Report 2020”) ஐ மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பெரிய மாநிலங்களில் காசநோய் தொற்று அதிகமாக கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்கள் உள்ளன.
  • ஆன்லைன் வழியாக இரத்தங்களை ஆர்டர் செய்து பெறுவதற்கான ‘eBloodServices‘ என்ற பெயரிலான மொபைல் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பு (Indian Red Cross Society (IRCS)) இணைந்து தொடங்கியுள்ளன.
  • சுயசாா்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நலிவடைந்த நிலையில் காணப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைப்பதற்கான ரூ. 20,000 கோடி கடனுதவி வழங்குவதற்காக, கடன் உறுதியளிப்புத் திட்டத்தை (Credit Guarantee Scheme for Sub-ordinate Debt) மத்திய அமைச்சா் நிதின் கட்கரி 24-6-2020 அன்று தொடங்கி வைத்தாா். இந்த திட்டத்தின்படி, நலிவடைந்த நிலையில் இருக்கும் மற்றும் வாராக் கடன் பட்டியலில் இருக்கும் சுமாா் 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். மேலும், இந்த தொழில் நிறுவனங்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்படும்.
  • நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு டெல்லியில் விற்பனையாகிறது.
  • ஐ.நா. சபையின் சார்பில் நியுயார்க் நகரில் உலக பொது சேவை தினத்தையொட்டி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தலைமையில் நடந்த இணையவழி கருத்தரங்கில் இந்தியாவின் சார்பாக கேரளாவில் சுகாதாரத்துறை பொறுப்பை கவனிக் கிற பெண் மந்திரி கே.கே. ஷைலஜா மட்டும் கலந்து கொண்டு ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் கேரளா மாதிரி’ என்ற தலைப்பில் பேசினார்.
   • இந்த கருத்தரங்கில் ஐ.நா. பொதுச்சபை தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே, எத்தியோப்பியா அதிபர் சாஹ்லே வொர்க் ஜீவ்டே, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரங்கள் துணைச்செயலாளர் லியு ஜென்மின், தென்கொரிய உள்துறை மந்திரி சின் யெங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவுக்கு வெளியே துவங்கப்பட்டுள்ள முதல் யோகா பல்கலைக்கழகம் எனும் பெருமையை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கப்பட்டுள்ள விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம் (Vivekananda Yoga University) பெற்றுள்ளது.
  • ரஷியா - இந்தியா - சீனா (Russia-India-China (RIC)) வெளியுறவு அமைச்சர்கள் தரப்பு காணொளிக் கூடுகை 23 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. இதனை ரஷியா நடத்தியது. இந்தியாவின் சார்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
  • ஐ.நா. பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் (‘Alliance for Poverty Eradication’) நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. உலக நாடுகளின் அமைதி, மனித உரிமைகள், நீடித்த வளா்ச்சி உள்ளிட்டவற்றுக்கு வறுமையால் ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும், வறுமையை ஒழிப்பதற்காகவும் இந்த கூட்டமைப்பை 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே(Tijjani Muhammad-Bande) 30 ஜீன் 2020-ஆம் தேதி அதிகாரபூா்வமாக நிறுவ உள்ளாா்.
  • ஐ.நா. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)) வரும் இரண்டு ஆண்டுகளுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
  • 2-ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழாவை யொட்டி, மாஸ்கோ நகரில் 24-06-2020 அன்று நடைபெற்ற ரஷிய ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்களும் பங்கேற்றனர். இதை ரஷிய அதிபர் புதின், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். 2-ம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்தியதை ரஷியா ஒவ்வொரு ஆண்டும் மே 9-ந் தேதி வெற்றி தின விழாவாக கொண்டாடி வருகிறது. ஜெர்மனியை வெற்றி கொண்ட 75-வது ஆண்டு வெற்றி தினத்தை வழக்கம் போல் கடந்த மாதம் 9-ந் தேதி கொண்டாட ரஷியா முடிவு செய்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை ரஷியா தள்ளிவைத்து ஜூன் 24-ந் தேதி நடத்தியுள்ளது.

  பொருளாதாரம்

  • வாங்கும் சக்தியை ( purchasing power parity (PPP)) அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டின் தரவுகளை அடிப்படையிலான இந்த பட்டியலில் முதலிடத்தை சீனாவும் , இரண்டாம் இடத்தை அமெரிக்காவும் பெற்றுள்ளன.

  முக்கிய தினங்கள்

  • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day against Drug Abuse and Illicit Trafficking) - ஜீன் 26
  • சர்வதேச மாலுமிகள் தினம் (International Day of the Seafarer) - ஜீன் 25

  அறிவியல் & தொழில்நுட்பம்

  • சென்னை ஐஐடியானது ‘ஸ்பாா்க்’ (Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC)) திட்டம் மூலம் பசுமை எரிசக்தியான ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க ஜொ்மனி ஆராய்ச்சியாளா்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
   • கூ.தக . : சா்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக’ஸ்பாா்க்’ (Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC)) என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் உயா்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் உலகின் சிறந்த நிறுவனங்களுக்கிடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவித்துள்ளார். வணிக ரீதியில் ராக்கெட் உருவாக்குதல், செயற்கைகோள்களை நிறுவுதல், வணிக ரீதியில் செயற்கைகோள்களை ஏவும் சேவையை வழங்க அனுமதி அளித்தல் போன்றவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படும். இஸ்ரோவின் கோள்களை ஆராய்ச்சி செய்யும் விண்கல திட்டத்திலும் தனியார் துறை பங்கேற்க முடியும்.
   • விண்வெளி துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் ஆணைய மையம் (Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)) , தனியார் துறைகளின் விண்வெளி நடவடிக்கைகளை அனுமதிப்பது, முறைப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கொண்டு சுயமாக முடிவு எடுக்கும். தனியார் நிறுவனங்கள் இன்ஸ்பேஸ் (IN-SPACe) அமைப்பு மூலம் நேரடியாக விண்வெளி துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க முடியும். அந்த அமைப்பு அந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும். அந்த அமைப்பு முடிவு எடுத்துவிட்டால், அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதாவது இஸ்ரோ அல்லது தனியார் அமைப்புகளுக்கு பொருந்தும். மத்திய அரசின் பொதுத்துறை அமைப்பான புதிய விண்வெளி இந்திய நிறுவனம் ( NewSpace India Limited (NSIL)), அரசு மேற்கொண்டுள்ள பெரும் முயற்சியில் முக்கிய பங்காற்றி உள்ளது. இந்த நிறுவனம் இஸ்ரோ ஆராய்ச்சி திட்டங்களை மறுசீரமைத்து, மாற்றங்களை ஏற்படுத்தி மிகவும் பயன் தரக்கூடிய அளவில் விண்வெளி சொத்துகளை பயன்படுத்துவதை உறுதி செய்யும்.

  விளையாட்டுகள்

  • ”இந்திய கராத்தே சங்கத்திற்கு” (Karate Association of India) உலக கராத்தே கூட்டமைப்பு (World Karate Federation) வழங்கியிருந்த அங்கீகாரத்தை 21-6-2020 அன்று இரத்து செய்துள்ளது.

  இதர தகவல்கள்

  • திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கரோனா பாதித்திருந்த நிலையில், 25-6-2020 அன்று தற்கொலை செய்து கொண்டார். 
   • கூ.தக. : திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே, இயங்கி வருகிறது இருட்டுக்கடை ஹல்வா. நெல்லை மாவட்டத்துக்கே புகழ் சேர்க்கும் இதனை, 1930 - 1940களில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் தொடங்கினார். வெறும் ஹரிகேன் விளக்குடன் இருட்டாக இருக்கும் இந்தக் கடையை மக்கள்தான் இருட்டுக் கடை என்று அடையாளப்படுத்தினர். பிறகு அதுவே கடையின் பெயராகவும் மாறியது.
Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language