Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs Tamil 23-24 June 2020


தமிழ்நாடு

 • இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ‘கம்பிரஸ்ட் பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23-06-2020 அன்று தொடங்கி வைத்தார்.
  • கூ.தக. : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ஐ.ஓ.டி. உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் ரூ.34 கோடி செலவில் அமைக்கப்பட்டு 2.4 மெகா வாட் திறன் கொண்ட உயிரி எரிவாயு (பயோ கியாஸ்) உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ கியாசில் இருந்து சி.பி.ஜி. என்ற ‘கம்பிரஸ்ட் பயோ கியாசை தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு ரூ.25 கோடி செலவில் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் சி.பி.ஜி. மற்றும் 20 டன் உயிரி உரங்கள் தயாரிக்கப்படும்.
 • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15, 876 மெகாவாட் ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் 2,322 மெகாவாட், காற்றாலை மின் நிறுவுதிறன் 8 ஆயிரத்து 523 மெகாவாட், சூரிய ஒளி மின்சக்தி நிறுவுதிறன் 4 ஆயிரத்து 54 மெகாவாட், தாவரக்கழிவு மின் நிறுவுதிறன் 266 மெகாவாட் மற்றும் இணைமின் உற்பத்தி மின் நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆகும். தமிழ்நாட்டில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுதிறன் 1,013 மெகாவாட். இதில் மாநிலத்திற்கு 516 மெகாவாட்டும், தனியாருக்கு 497 மெகாவாடும் சொந்தமானதாகும். 

இந்தியா

 • இந்திரா ராசோய் யோஜனா (‘Indira Rasoi Yojna / Indira Kitchen Scheme’) என்ற பெயரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்தை இராஜஸ்தான் அரசு 22-6-2020 அன்று தொடங்கியுள்ளது.
 • ”கரோனில்” (Coronil) மற்றும் ”சுவாசரி” (Swasari) எனும் கரோனா தொற்றுக்கான மருந்துகளை பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகள் 3 முதல் 7 நாள்களில் கரோனா நோயை 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 • ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் வென்டிலேட்டர்கள் தயாரிக்க பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கான நிவாரண நிதியில் இருந்து (Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund) ) ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் கோவிட்-19 மருத்துவமனைகளுக்கு 50,000 வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்க இந்த ரூ.2,000 கோடி உதவும்.
 • பொது விநியோக முறைமையின் (Public Distribution System (TPDS) ) கீழ் மாநில அளவில் உணவு தானியங்களை விநியோகிப்பதற்கான செலவு குறைந்த விநியோக சங்கிலி நெட்வொர்க்குகளை உருவாக்கி அதன் மூலம் தேசிய அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவிற்கான ஐ.நா. உலக உணவு திட்டம் (United Nations World Food Programme (WFP) India) மற்றும் ஐ.ஐ.டி,தில்லி (Indian Institute of Technology (IIT) Delhi ) ஆகியவை இணைந்து ஈடுபடுகின்றன.
 • “இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து“ (Decarbonising Transport in India) என்ற பெயரில், இந்தியாவில் கரியமில வாயு பயன்பாடு குறைவாக உள்ள போக்குவரத்துக்கு வழிவகுக்கக் கூடிய ஆய்வை, நிதிஆயோக் (NITI Aayog) அமைப்பு சர்வதேசப் போக்குவரத்து அமைப்புடன் (International Transport Forum (ITF) ) இணைந்து, 24 ஜுன், 2020 அன்று தொடங்க உள்ளது.
  • கூ.தக. : 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதும், OECD (Organisation for Economic Co-operation and Development) அமைப்பின் கீழ் இயங்குவதுமான சர்வதேச போக்குவரத்து மன்றத்தின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. போக்குவரத்துக் கொள்கை வகுத்தல் தொடர்பான அரசுகளுக்கிடையேயான இவ்வமைப்பில், 2008-ம் ஆண்டு முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது.

விருதுகள்

 • ’ஜெர்மன் புத்தக வர்த்தக அமைப்பின்’ (German Book Trade) அமைதி பரிசு 2020 (Peace Prize 2020), நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் (Amartya Kumar Sen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

 • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் (RBI Central board) பகுதி நேர அலுவல் ரீதியில் அல்லாத இயக்குநராக (Part-Time Non-Official Director) 3-3-2020 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவுள்ள நடராஜன் சந்திரசேகரன் (Natarajan Chandrasekaran) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் 2016-2020 வரையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

 • ஐ.நா. பொது சேவைகள் தினம் (UNITED NATIONS PUBLIC SERVICE DAY - ஜீன் 23 | மையக்கருத்து - கோவிட் -19 பெருந்தொற்றுப் பணியிலுள்ள பொது சேவகர்களை மரியாதை செய்வோம் (ON THE FRONTLINES: HONOURING PUBLIC SERVANTS IN THE COVID-19 PANDEMIC RESPONSE)
 • சர்வதேச ஒலிம்பிக் தினம் (International Olympic Day) - ஜீன் 23
 • சர்வதேச விதவைப் பெண்கள் தினம் (International Widows’ Day) - ஜீன் 23 | மையக்கருத்து - கட்புலனாகா பெண்கள் , கட்புலனாகாத பிரச்சனைகள் (Invisible Women, Invisible Problems)
 • உலக இசை தினம் (World Music Day) - ஜீன் 21

அறிவியல் & தொழில்நுட்பம்

 • YUKTI 2.0 ( Young India combating COVID with Knowledge, Technology, and Innovation) என்ற பெயரில் கோவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டு படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான இணையதளத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 23-6-2020 அன்று தொடங்கி வைத்தார். YUKTI 1.0 திட்டம் 11 ஏப்ரல் 2020 அன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 • ”துருவா” (‘Dhruva’) என்ற பெயரில் இடம் பெயர் தொழில்நுட்ப வழிகாட்டி சிப்பை (Chip) மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியாவின் ‘நேவிக்’ (NAVIC (NAVigation with Indian Constellation)) இடம்பெயர் வழிகாட்டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்த சிப்பை, ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இதர ஸ்மார்ட் கருவிகளில் இணைத்து பயன்படுத்தலாம்.
 • சீனாவிற்கு சொந்தமான பெய்டோ எனும் புவியிடங்காட்டி செயற்கைக் கோள் அமைப்பின் (BeiDou Navigation Satellite System (BDS)) 3ஆவது கட்டத் திட்டத்தின் கடைசி (55ஆவது) செயற்கைக்கோள் பெய்தொவ் -3 (Beidou-3 navigation satellite) லாங்மார்ச் 3-பி (Long March 3B) ஏவூர்தியின் மூலம் 23-6-2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதையடுத்து, விரைவில் இந்த புவியிடங்காட்டி அமைப்பின் உலகச் சேவை தொடங்கபடும் என தெரிகிறது.
 • ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது மொபைல் ஃபோன்களுக்கு ஐஒஎஸ் 14 (iOS 14) எனப்படும் புதிய இயங்குதள (Operating System) பதிப்பை 23-6-2020 அன்று வெளியிட்டுள்ளது.
 • இந்திய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்த, விண்வெளி வீரர்களுக்கான, ”நீர்ம குளிர் மற்றும் வெப்ப ஆடை” ( Liquid Cooling and Heating Garment (LCHG)) க்கு பேட்டண்ட் (patent ) உரிமை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகள்

 • புகழ்பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் தி அண்டர்டேக்கர் (The Undertaker) தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தி அண்டர்டேக்கரின் இயற்பெயர், மார்க் காலவே.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

 • ”Legend of Suheldev: The King Who Saved India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அமிஷ் திரிபாதி (Amish Tripathi) 

Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language